Published:Updated:

போட்டோ தாக்கு

எப்படி ஒரே நேரத்தில் சினிமா, பிக் பாஸ், அரசியல்னு கலக்குறீங்க?

பிரீமியம் ஸ்டோரி

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

facebook

Ravikumar Krishnasamy

வைரமுத்து: தமிழ் எனக்கு உயிர்!

கமல்: அரசியல் எனக்கு உயிர்!

ரஜினி: என் உயிர்தான் எனக்கு உயிர்!

Raja Gopal

வைரமுத்து: குழப்பத்தைத் தெளிவாக்குறதுதான் எனது பணி!

கமல்ஹாசன்: தெளிவாகக் குழப்புவதுதான் எனது பணி!

ரஜினிகாந்த்: தெளியவெச்சு தெளியவெச்சுக் குழப்புவதுதான் எனது பணி!

twitter

@LAKSHMANAN_KL

வைரமுத்து: என்ன கமல், நீங்களும் முழு வெள்ளை நிற உடையில் வந்திருக்கிறீர்கள்?

கமல்: தேர்தல்ல மக்கள் ‘வெளுத்துட்டாங்க’னு சிம்பாலிக்கா காட்டத்தான் கவிஞரே!

@RavindranRasu

ரஜினி: எப்படி ஒரே நேரத்தில் சினிமா, பிக் பாஸ், அரசியல்னு கலக்குறீங்க?

கமல்: மூணுக்கும் மூலதனம் ‘நடிப்பு’தான்னு புரிஞ்சுக்கிட்டேன், அதான்!

@San8416

வைரமுத்து: அரசியல் என்ற கடலில் மூழ்கி முத்தெடுக்க வாழ்த்துகிறேன்!

கமல்: தலைகீழாகத்தான் நான் குதிப்பேன்!

ரஜினி: நீச்சல் தெரியாதுங்க!

@Vkarthik_puthur

கமல்ஹாசன்: மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் நீர்நிலைகள் மீட்டெடுக்கப்படும்!

வைரமுத்து: அதுவரைக்கும் என்ன செய்வீங்க கமல்?

கமல்ஹாசன்: மக்கள் நீதி மய்யத்தை மீட்டெடுப்பேன்!

@balasubramni1

வைரமுத்து: அப்படி கை காட்டாதீங்க ரஜினி?

ரஜினி: ஏன் கவிஞரே?

வைரமுத்து: நீங்க காங்கிரஸில் சேரப்போறதா வதந்தியைப் பரப்பிடுவாங்க!

@ParveenF7

ரஜினி: ஆங்கிலத்தில் எனக்குப் பிடிக்காத வார்த்தை ‘பாலிடிக்ஸ்’!

கமல்: எனக்கு ‘எலெக்‌ஷன்’!

வைரமுத்து: எனக்கு ‘மீடூ’!

@chennappan10

ரஜினி (மைண்ட் வாய்ஸ்): இங்கிருந்து கீழே குதிப்பதும்... அரசியலில் குதிப்பதும் ஒண்ணுதான்... கிரேட் எஸ்கேப்!

@RavindranRasu

வைரமுத்து: அரசியலுக்கு வந்து பார்..!

கமல்: கையெழுத்து அழகாகும்!

வைரமுத்து: அரசியலுக்கு வராமல் இருந்து பார்..!

ரஜினி: தலையெழுத்து அழகாகும்!

@manickamk

கமல்: என்னோட ட்வீட் எல்லாம் படிப்பீங்களா?

ரஜினி: அதைப் படிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தான் எனக்கு ‘ஒரு நிமிஷம் தலை சுத்துற’ பிரச்னையே வந்துச்சு கமல்!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு