Published:Updated:

போட்டோ தாக்கு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
திருநாவுக்கரசர், கே.எஸ்.அழகிரி
திருநாவுக்கரசர், கே.எஸ்.அழகிரி

நான் சொன்னது, தமிழக காங்கிரஸிலுள்ள கோஷ்டிகளுக்கு இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தையை

பிரீமியம் ஸ்டோரி

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

TWITTER

@LAKSHMANAN_KL

திருநாவுக்கரசர்: 2024 தேர்தலுக்கு இப்பவே கூட்டணிப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கப்போறீங்களா, எதுக்கு?!

கே.எஸ்.அழகிரி: நான் சொன்னது, தமிழக காங்கிரஸிலுள்ள கோஷ்டிகளுக்கு இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தையை!

@Kirachand4

திருநாவுக்கரசர்: போன்ல யார் அண்ணே?

கே.எஸ்.அழகிரி: ராகுல்ஜி பேசினார் அண்ணே... சென்னை வெள்ள நீரில் நீச்சலடிக்க ஆசைப்படுவதாகவும், உடனே புறப்பட்டு வருவதாகவும் சொன்னாரு!

@LAKSHMANAN_KL

கே.எஸ்.அழகிரி: தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியை அமைக்கிறதுதான் என்னோட கனவு..!

திருநாவுக்கரசர்: அதுதான் ‘கனவு’னு சொல்லிட்டீங்களே!

@balasubramni1

திருநாவுக்கரசு: ‘மக்களால் நான்...’னு ஜெயலலிதா வசனம் பேசுனது மாதிரி, நம்ம கட்சிக்கும் ஒரு வசனம்வெக்கலாமே!

அழகிரி: `கோஷ்டியால் நாங்கள்... கோஷ்டிகளுக்காகவே நாங்கள்’னுவெக்கலாம்!

@JaNeHANUSHKA

திரு: 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு என்ன பிளான்வெச்சுருக்கீங்க?

கே.எஸ்.அ: 50-50 கேட்கலாம்னு இருக்கேன்!

திரு: கொடுக்கலைன்னா?

கே.எஸ்.அ: முன்னைவிட அதிகமா சத்தம்போட்டு அழலாம்னு இருக்கேன்!

@balasubramni1

திருநாவுக்கரசர்: என்ன... ‘தனியே தன்னந்தனியே’ பாட்டை ரிங் டோனா வெச்சுருக்கீங்க?

அழகிரி: நம்ம கட்சிக்கு பொருத்தமான பாட்டு. அதான் வெச்சுட்டேன்!

@absivam

கே.எஸ்.அழகிரி: ‘பா.ஜ.க-வில் சேர்ந்ததுக்கு நன்றி’னு மெசேஜ் வந்திருக்கு..! என் போனை வாங்கி யாருக்கு மிஸ்டு கால் கொடுத்தீங்க?!”

@urs_venbaa

திருநாவுக்கரசர்: தலைவராவது ரொம்ப கஷ்டம்!

அழகிரி: தலைவராக இருப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம்!

FACEBOOK

வி.சி.கிருஷ்ணரத்னம்

திருநாவுக்கரசர்: அண்ணே... வீணாக்காமல், கண்ணீரைச் சேமிச்சுவையுங்க. 2024 பாராளுமன்றத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது பயன்படும்!”

Raja Gopal

திருநாவுக்கரசர்: நான் இப்ப என்ன கேட்டுட்டேன்னு இப்படி கையை விரிக்கிறீங்க..?

அழகிரி: ஆமாங்க... வானத்துல உள்ள நட்சத்திரத்தையெல்லாம் எண்ணிச் சொல்லணும்னாக்கூட சொல்லிடுவேன், நம்ம கட்சியில கோஷ்டிகள் எத்தனைனு கேட்டா நான் என்ன பண்ணுவேன்!

Ambai Deva

திரு: எந்தக் கட்சிக்குப் போனாலும் காங்கிரஸில் இருக்கும் திருப்தி வேற கட்சியில இல்லை!

அழ: ஏன் அப்படிச் சொல்றீங்க?

திரு: இங்கேதான் நமக்குன்னு ஒரு கோஷ்டி வெச்சுக்க முடியுது!

Ramachandran Packya

அழகிரி: நீங்க ‘சிதம்பரம்’தானே?

அரசர்: என்னண்ணே... இப்படி கேட்டுப்புட்டீங்க, நான் அறந்தாங்கின்னு உங்களுக்குத் தெரியாதா?

அழகிரி: தம்பி! நான் ஊரைக் கேக்கலை, கோஷ்டியைக் கேட்டேன்!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு