ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!
@LAKSHMANAN_KL
அண்ணாமலை: கூட்டத்துக்கு வந்திருக்கிற நம்ம கட்சித் தொண்டர்களெல்லாம் ‘பிரியாணி வேணாம், ஒரு கிலோ தக்காளி கொடுத்தா போதும்’னு சொல்றாங்கண்ணே!
@PG911_twitz
‘‘நான் உங்க காதுல என்ன சொன்னேன்னு கேப்பாங்க... எதையுமே சொல்லிடாதீங்க... அடிச்சுக்கூட கேப்பாய்ங்க... அப்பவும் சொல்லிடாதீங்க!’’
@Kirachand4
அண்ணாமலை: பா.ஜ.க-வின் புதிய சித்தாந்தம்தான் இன்றைய இளைஞர்களை நம் கட்சியை நோக்கி ஈர்க்கிறதுண்ணே...
முருகன்: புது சித்தாந்தமா... என்ன தம்பி அது?
அண்ணாமலை: நம்ம கட்சியில, தேர்தலில் தோற்பவர்களும் அமைச்சர் ஆகலாம் என்பதுதாண்ணே!
@RahimGazzali
‘‘அடுத்த வாட்டி வெள்ளம் வரும்போது வாட்ஸ்அப் பண்றேன். உடனே வந்துடுங்க. நாம ஜாலியா போட்டிங் போகலாம்!’’
@IamUzhavan
அண்ணாமலை: இனிமேலாவது சட்டத்தை இயற்றும்போது, கமா போடாம இயற்றச் சொல்லுங்க ஜி!
@LAKSHMANAN_KL
அண்ணாமலை: வெள்ளாடு, செம்மறி ஆடுன்னு எல்லா ஆடுகளையும் சமாளிக்க முடிஞ்ச என்னால, கட்சியில இருக்குற ‘கறுப்பு ஆடுகளை’ சமாளிக்கிறது பெரிய கஷ்டமா இருக்குண்ணே!
Mathan Himadri
‘‘இங்க இருக்கறவங்களைச் சமாளிக்க முடியலைண்ணே. ஏதாவது மினிஸ்டர் வேலை, கவர்னர் வேலை இருந்தா சொல்லுங்க!’’
Sathia Moorthi
‘‘எனது வெள்ள நிவாரணப் படகு பணியைப் பார்த்து, எனக்கு மத்திய கப்பல் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்போறதா பேசிக்கிறாங்களே... உண்மையா?!’’
Sathia Moorthi
‘‘மீட்டிங் முடிஞ்சதும், உங்களுக்கு மட்டும் இட்லிக்குத் தக்காளிச் சட்னிவெக்கச் சொல்லியிருக்கேன்... யாருக்கும் தெரியாமச் சாப்பிடுங்க!’’
VKarthik
அண்ணாமலை: `நேரம் வரும்போது, நான் முதலமைச்சராவேன்’னு குஷ்பு மேடம் சொல்லியிருக்காங்கண்ணே...
எல்.முருகன்: அட போங்க தம்பி... அவங்களுக்கு நேரம் வரும்போது கட்சி மாறிடுவாங்க!
துடுப்பதி வெங்கண்ணா
அண்ணாமலை: தக்காளி விலை இப்படியே இருக்கணும்!
முருகன்: எதுக்கு?!
அண்ணாமலை: பெட்ரோல் விலையைப் பத்தி யாரும் பேச மாட்டாங்கல்ல!
Kavi Chennappan
‘‘அடுத்த முறை வெள்ளம் வரும்போது, அதைப் பார்வையிட நீர்மூழ்கிக் கப்பல் ஒண்ணு கேட்டேன்னு ‘ஜி’கிட்ட சொல்லுங்க..!’’
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.
Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan