Published:Updated:

போட்டோ தாக்கு

ராஜேந்திர பாலாஜி - வீரமணி
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜேந்திர பாலாஜி - வீரமணி

ஆமாண்ணே... ‘மோடி ஜி, அமித்ஷா ஜி’யைத்தான் நானும் நம்பிக்கிட்டிருக்கேன்.

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

TWITTER

@LAKSHMANAN_KL

வேலுமணி: கவலைப்படாதீங்க... ‘இரட்டைத் தலைமை’ உங்களைக் கைவிடாது!

ராஜேந்திர பாலாஜி: ஆமாண்ணே... ‘மோடி ஜி, அமித்ஷா ஜி’யைத்தான் நானும் நம்பிக்கிட்டிருக்கேன்.

@rishivandiya

வேலுமணி: கார் தாவறதை விட்டுட்டுப் பேசாம கட்சி தாவிப் பாருங்களேன்..!

@LAKSHMANAN_KL

வேலுமணி: மடியில கனம் இல்லைனு எப்படிச் சொல்றீங்க?!

ராஜேந்திர பாலாஜி: அதான்... ஒண்ணரை டன்னையும் தின்னு தீர்த்தாச்சே!

@IamUzhavan

வேலுமணி: உப்பு தின்னா தண்ணி குடிச்சுதான் ஆகணும்!

ரா.பாலாஜி: ஆனா, நான் ஸ்வீட்தானேண்ணே சாப்பிட்டேன்!

@NedumaranJ

ராஜேந்திர பாலாஜி: `மனப்பூர்வமா மன்னிப்புக் கேட்டு வர்றவங்களை மன்னிச்சு ஏத்துக்கறதுதான் தலைமைப்பண்புக்கு அழகு’னு அண்ணன் ஓ.பி.எஸ் சொல்லியிருக்காரே... சசிகலாவைக் கழகத்துல சேர்த்துக்கணும்னு இண்டைரக்டா சொல்றாரா?

வேலுமணி: இதைவிட டைரக்டா சொல்ல முடியாதுங்க!

FACEBOOK

ரஹீம் கஸ்ஸாலி

முதல்ல சட்டையை மாத்துங்க ராஜேந்திர பாலாஜி. இந்த மாதிரி கலரில் சட்டை போட்டிருந்தா, எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் உங்களை போலீஸ் ஈஸியா கண்டுபிடிச்சுடுவாங்க!

பார்த்தசாரதி

வேலுமணி: சொன்னா கேளுங்க... ரெய்டுக்குத்தான் பிரியாணி போடணும். அரெஸ்ட்டுக்கெல்லாம் வேண்டியதில்லை!

Uzhavan Navaneetha Krishnan

ரா.பாலாஜி: எனக்கு பாரதியார்தான் ரொம்பப் பிடிக்கும்?

வேலுமணி: ஏன்?

ரா.பாலாஜி: அவர்தான் ‘ஓடி விளையாடு பாப்பா...’னு பாடியிருக்காரு!

Uzhavan Navaneetha Krishnan

ரா.பாலாஜி: எனக்கு பாரதியார்தான் ரொம்பப் பிடிக்கும்?

வேலுமணி: ஏன்?

ரா.பாலாஜி: அவர்தான் ‘ஓடி விளையாடு பாப்பா...’னு பாடியிருக்காரு!

Rajasingh Jeyakumar

எஸ்.பி.வேலுமணி: சேச்சே... நான் வெறும் பிளீச்சிங் பவுடர்தான். நீங்கதான் பால் பவுடர். ரெண்டும் ஒண்ணாகுமா?

அதிரை புகாரி

சரி விடுங்க பாலாஜி. `1,500 கிலோ பால்கோவா சாப்பிட்டும் சர்க்கரை வியாதி வராமல் தடுப்பது எப்படி?னு ஒரு புத்தகம் எழுதுங்க. தமிழக மக்களோட கவனத்தை திசைதிருப்பிடலாம்!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan