ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

@parveenyunus
“எனக்குக் கதைவிடவும் தெரியும்... உதைவிடவும் தெரியும்... புஹாஹா!
@Ramanat75128649
“போதி தர்மரின் கடைசி சீடன் நான்தான். அவர் மிக ரகசியமாக வைத்திருந்த ‘புருடா அடியை’ எனக்கு மட்டும்தான் கற்றுக்கொடுத்தார்!”
@LAKSHMANAN_KL
“ஷியாம் சிங்கா ராய்’ படத்தைப் பார்த்ததிலிருந்துதான்... நான் போன பிறவியில் ‘போதி தர்மராக’ இருந்ததே ஞாபகத்துக்கு வந்தது!”
@balasubramni1
``பேசாமல் அமைதியாக நடந்துபோய் தாக்குகிற, இதுக்குப் பேரு ஊமைக் குத்து இல்லை... ஆமைக் குத்து!’’
@Kirachand4
“டேய்... நானெல்லாம் ஜாக்கி சானுக்கே ஜாங்கிரி கொடுத்தவன்டா!”
@ranjith679
“அந்தப் பக்கம் இலங்கை ராணுவம்... இந்தப் பக்கம் அண்ணன்... நான் தற்காப்புக் கலையைக் கையிலெடுக்கவும் அவங்க தெறிச்சு ஓடிட்டாங்க... இதை நம்புனாத்தான் நீ தமிழன்!”
@manipmp
“இந்த போஸைப் பார்த்து மிரண்டு போய்த்தான் அண்ணன் என்னை இலங்கைக்கு வரச் சொன்னாரு!”
தஞ்சை ப்ரணா
“ஐயா சுபாஷ் சந்திர போஸ் இறப்பதற்கு முன்பு எனக்குக் கற்றுக் கொடுத்த போஸ் இது. புஹாஹா!”
H Umar Farook
“இது, ஜாக்கி சானுக்கு கராத்தேவில் சில நுணுக்கங்களைச் சொல்லிக்கொடுத்தபோது புருஸ் லீ எடுத்த போட்டோ!”
ராம்ஆதிநாராயணன்
“எனக்கு கராத்தே தெரியும்னு இவ்ளோ நாளா எனக்கே தெரியாது. புரூஸ் லீதான் நேத்து கனவுல வந்து ‘உனக்கு கராத்தேவும் தெரியும்’னு சொன்னாரு!”
Kavi Chennappan
``போட்டோகிராபர் தம்பி... சீக்கிரம் எடுப்பா... ஆமைக்கறியும் இட்லியும் ஆறிடப்போகுது..!’’
Ravikumar Krishnasamy
“ஆ... ஊ... சண்டைபோடத் தைரியம் இருக்கிறவனெல்லாம் தள்ளிப்போ... பயந்தவனெல்லாம் பக்கத்தில் வா... ஆ... ஊ..!”
Uzhavan Navaneetha Krishnan
சீமான்: அட கிறுக்குப்பயலே... இதுக்குப் பேரு குஷ்பு இல்லடா... குங்ஃபூ!
Vaira Bala
சீமான்: “இது, போரில் காயம்படும் தம்பிகளுக்குச் சிகிச்சை தர, இடது கையால் முதுகை ஆறுதலாகத் தடவி, மறு கையால் மருந்து தடவும் முறை. இதையெல்லாம் நான் சொன்னா... நம்பாமச் சிரிப்பீங்க... என்னமோ போங்க!
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSFollow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan