அரசியல்
Published:Updated:

போட்டோ தாக்கு

அன்புமணி
பிரீமியம் ஸ்டோரி
News
அன்புமணி

அன்புமணி ராமதாஸ்

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

TWITTER

Siddharthan Vck

“என் முதலமைச்சர் கனவுதான் பலிக்காமப் போச்சு, வார்டு கவுன்சிலர் கனவையாவது பலிக்கவெய்யுங்க ஆண்டவரே..!”

M Peter Francisca

“எங்களோடு ஒருகாலத்தில் கூட்டணியில் இருந்த தி.மு.க., இப்போது ஆட்சியில் இருப்பதே பா.ம.க-வுக்குக் கிடைத்த வெற்றிதான்! ஹி... ஹி...”

Jiya Sen

“ `சியாம் சிங்க ராய்’ படத்தில்கூட எங்களுக்கு எதிராகச் சில குறியீடுகள் இருப்பதாகச் சொன்னாங்க. ஆனா... எனது கண்டனத்தைப் பதிவு பண்ணப்போய், அந்தப் படமும் ஆஸ்கர் போயிடுமோன்னு பயமா இருக்கே!’’

Sathia Moorthi

“சொன்னா நம்புங்க... எனக்கு முதலமைச்சர் ஆசையெல்லாம் இல்லைங்க. எங்க அப்பாவோட ஆசையை நிறைவேற்ற நினைக்கிறேன் அவ்வளவுதாங்க... நம்புங்க!”

Mani Pmp

“என்னதான் டாக்டருக்குப் படிச்சிருந்தாலும்... தேர்தல் நேரத்துல மக்களோட நாடித்துடிப்பைக் கண்டுபிடிக்க முடியலையே தெய்வமே..!’’

FACEBOOK

@LAKSHMANAN_KL

“அஸ் மை பார்ட்டி இஸ் சஃபரிங் ஃப்ரம் லோக்கல் பாடி எலெக்‌ஷன்... ஐ யாம் அனேபிள் டூ அட்டெண்ட் தி பார்லிமென்ட்!”

@parveenyunus

“ஏ... வந்தாரை வாழவைக்கும் தமிழகமே... என்னைப்போல் நொந்தாரை வாழவைப்பது எப்போது?!’’

@Vkarthik_puthur

“தேவனே என்னைப் பாருங்கள்... என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்..!”

@LAKSHMANAN_KL

``பா.ம.க ஆட்சியைப் பிடிக்க, ரெண்டு கோடிப் பேர் ஓட்டுப்போட்டா போதும். ஆனா, அவ்ளோ பேர் அந்தமான்ல இல்லியே, நான் என்னா பண்ணுவேன்?!’’

@urs_venbaa

`` `மாற்றம் முன்னேற்றம்’ எல்லாருக்கும் நடக்குது. ஆனா, அதைச் சொன்ன எனக்கு மட்டும் ஒண்ணுமே நடக்க மாட்டேங்குதே கடவுளே..!’’

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan