Published:Updated:

போட்டோ தாக்கு

போட்டோ தாக்கு
பிரீமியம் ஸ்டோரி
போட்டோ தாக்கு

அண்ணாமலை: நகர்ப்புறத் தேர்தலில் தாமரை வென்றால், ஒவ்வொரு கவுன்சிலருக்கும் ஒரு ஹெலிகாப்டர் பரிசு கொடுக்கலாம்க்கா

போட்டோ தாக்கு

அண்ணாமலை: நகர்ப்புறத் தேர்தலில் தாமரை வென்றால், ஒவ்வொரு கவுன்சிலருக்கும் ஒரு ஹெலிகாப்டர் பரிசு கொடுக்கலாம்க்கா

Published:Updated:
போட்டோ தாக்கு
பிரீமியம் ஸ்டோரி
போட்டோ தாக்கு

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

TWITTER

@LAKSHMANAN_KL

அண்ணாமலை: கொஞ்சம் கமல்கிட்ட பேசி... ‘விக்ரம்’ அப்டேட் வாங்கித் தாங்க அக்கா!

வானதி: நிர்மலா சீதாராமன்கிட்ட பேசி... எதை எதை ‘விக்கிறோம்’ங்கிற அப்டேட் வேணா வாங்கித் தர்றேன் தம்பி!

@LAKSHMANAN_KL

வானதி: `அரபிக்குத்து’ கேள்விப்பட்டீங்களா தம்பி?

அண்ணாமலை: நீங்க வேற... தேர்தல்ல மக்கள் மூஞ்சியில குத்தப்போறாங்களா, முதுகுல குத்தப்போறாங்களானு நானே கலங்கிப்போய் கெடக்குறேன்!

@balasubramni1

அண்ணாமலை: எதுக்கு எல்லாரும் தோற்கிற தொகுதியாப் பார்த்து கேட்கறாங்க?

வானதி: தோற்றால், மத்தியில் அமைச்சர் பதவி கிடைக்கும்கிற ஆசையில கேட்கறாங்கபோல!

@DevAnandR155

அண்ணாமலை: துண்டு போட்டும் பேசிப் பார்த்துட்டேன். பேரம் படியலை... அப்புறமாத்தான் தனித்துப் போட்டினு அறிவிச்சேன்!

@urs_venbaa

அண்ணாமலை: நகர்ப்புறத் தேர்தலில் தாமரை வென்றால், ஒவ்வொரு கவுன்சிலருக்கும் ஒரு ஹெலிகாப்டர் பரிசு கொடுக்கலாம்க்கா...

வானதி: தம்பிக்கு அவ்ளோ நம்பிக்கை... நம்ம ஆட்கள் மேல!

@balasubramni1

வானதி: உள்ளாட்சித் தேர்தல் நிதியை ஏன்

ஹெச்.ராஜாகிட்ட கொடுக்கலை?

அண்ணாமலை: அவரு இன்னொரு புது வீடு கட்டுற ஐடியாவுல இருக்கிறாராம். அதான்!

@RavindranRasu

வானதி: நம் பலத்தை நிரூபிப்பதற்காகத்தானே தனித்துப் போட்டியிடுகிறோம்?

அண்ணாமலை: அதெல்லாம் இல்லைங்க... நம்ம கட்சிக்காரர்களாவது நமக்கு ஒழுங்கா ஓட்டுப் போடுறாங்களானு கண்டுபிடிக்கத்தான்!

FACEBOOK

Jiya Sen

வானதி: வேட்பாளர்கள்கிட்ட என்ன சொல்லிக் கூட்டிட்டு வந்தீங்க தம்பி?

அண்ணாமலை: ‘உங்களில் யார் அடுத்த கவர்னர்...’னு ஒரு போடு போட்டேன், நிறைய பேர் கிடைச்சுட்டாங்க!

Mannargudi Rajagopal

“என்ன தம்பி, தமிழிசை பிரசிடென்ட் ஆகப்போறாங்களாமே?

“இதிலென்னக்கா ஆச்சர்யம்... நம்ம கட்சியில தமிழ்நாட்லருந்து ஒருத்தர் முதல்வர் ஆகுறதுதான் கஷ்டம். மத்தபடி கவர்னர், பிரசிடென்ட் ஆகுறதெல்லாம் ரொம்ப ஈஸி!”

Ambai Deva

‘‘தேர்தல் முடிவு எப்படியிருக்கும்?’’

‘‘விடுங்க மேடம்... நமக்கு வேட்பாளர்கள் கிடைச்சதே பெரிய வெற்றிதான்!’’

Mannargudi Rajagopal

“பாஸானவனெல்லாம் புரொபஸரு... பெயிலானவனெல்லாம் கரஸ்பாண்டென்ட்ங்கிறது... சரியாத்தான் இருக்கு தம்பி...”

“எதைவெச்சு சொல்றீங்கக்கா?”

“பின்ன என்ன தம்பி... எலெக்‌ஷன்ல தோத்துப்போன முருகன் அமைச்சராயிட்டாரு... நீங்க மாநிலத் தலைவராகிட்டீங்க... கஷ்டப்பட்டு ஜெயிச்ச நான் வெறும் எம்.எல்.ஏ-தானே?!”

Enos Ibrahim

வானதி: 2024 தேர்தலை அ.தி.மு.க-பா.ஜ.க சேர்ந்து சந்திக்கும்னு எதைவெச்சு சொன்னீங்க..?

அண்ணாமலை: அதுக்குள்ள அ.தி.மு.க கட்சியே கலைக்கப்பட்டு, பா.ஜ.க-வுடன் இணைஞ்சுடும்கிற நம்பிக்கையில்தான்!

Jiya Sen

வானதி: `நாடு பொருளாதார வளர்ச்சிப் பாதையில் செல்கிறது’ன்னு நம்ம ஜி சொல்லிட்டாரு!

அண்ணாமலை: ஆமாக்கா... வேட்பாளர்கள்கூட பணம் கொடுத்தால்தான் கிடைக்கிறாங்க!

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.