ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

@LAKSHMANAN_KL
கூட்டத்தில் ஒருவர்: உங்களோட ஆசை என்ன தலைவா?
உதயநிதி: இரண்டாம் கலைஞர் எழுதிய புத்தகத்தை இப்ப மூன்றாம் கலைஞர் உங்ககிட்ட கொடுத்துட்டு இருக்கிற மாதிரி... மூன்றாம் கலைஞர் எழுதப்போற புத்தகத்தை, நான்காம் கலைஞர் உங்ககிட்ட கொடுக்கிறதை என் கண்ணால பார்க்கணும். அவ்வளவுதான்!
@Kirachand4
உதயநிதி: இது வெறும் புத்தகம் அல்ல... ஆட்சியைப் பிடிக்க பத்து வருடங்கள் துண்டுச்சீட்டுடன் போராடிய ஒரு புரட்சி வீரனின் உணர்ச்சிப் பிழம்புகள் நிறைந்த கதை!
@Kirachand4
`` ‘செங்கல்லில் ஒருவன்’ புத்தகம் எப்போ வெளியிடப் போறீங்கன்னு கேட்டது யாருப்பா?’’
@LAKSHMANAN_KL
கூட்டத்தில் ஒருவர்: இது என்ன புத்தகம் பாஸ்..?!
உதயநிதி: ‘தவறு இல்லாமல் பழமொழிகள் சொல்வது எப்படி?’னு நம்ம தலைவரே எழுதினது..!
@chennappan10
தொண்டர்: சின்ன தலைவரே... இந்தப் புத்தகத்துல ஆயிரம் ரூபாய் திட்டத்தைப் பற்றிய அறிவிப்பு இல்லையே..?
உதயநிதி: நடுவுல கொஞ்சம் பக்கம் இருக்காதுண்ணே..!
@NedumaranJ
மக்களில் ஒருவர்: தம்பி... சட்டசபைத் தேர்தல் பிரசாரத்துல ‘நீட் விலக்கு கொண்டுவர்ற ரகசியம் எங்களுக்குத் தெரியும்’னு சொன்னீங்களே... நீட் விலக்கு சம்பந்தமான அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும், சட்டமன்றத்திலும் அதை ஏன் சொல்லலை?
உதய்: அதான் சொன்னேனே... ‘ரகசியம்’னு!
@balasubramni1
``யாருப்பா அது ‘வெள்ளிக் கொலுசு மணி...’ பாட்டுப் பாடச் சொல்றது?’’
@chennappan10
கூட்டத்தில் ஒருவர்: உங்களோட சுயசரிதையை எழுதினால் என்ன பெயர்வெப்பீங்க தலைவரே..?
உதயநிதி: வாரிசில் ஒருவன்!
@chennappan10
``இந்தப் புத்தகத்தின் மூலம், எங்களுக்கும் கதை எழுதத் தெரியும் என்பதை அண்ணன் சீமானிடம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்...’’
@DevAnandR155
`` ‘நீட்’ ரத்து ரகசியத்தை நம்பி ஓட்டுப்போட்ட உங்க ஒரே மன தைரியத்தைப் பாராட்டி ‘இந்தப் புத்தகத்தை’ உங்களுக்குப் பரிசளிக்கிறேன்!’’
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.
Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan