ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

@pasakkarapaiyan
கே.எஸ்.அழகிரி: ஜி... ஐந்து மாநிலத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, நெட்ஃபிளிக்ஸ், அமேசான் உள்ளிட்ட எல்லா OTT தளத்துல இருக்குற படங்களைப் பற்றியும் கேட்டு ட்வீட் போட்டவங்க லிஸ்ட். அதுலயும் குறிப்பா ஃப்ரீயா சப்ஸ்கிரிப்ஷன் பண்ணிவிடுவீங்களான்னு கேட்டவங்க முதல்ல இருக்குற அஞ்சு பேரு ஜி!
@Vkarthik_puthur
ராகுல்: நான் ‘உங்களில் ஒருவனாகவே’ இருக்க ஆசைப்படுகிறேன் ஜி!
கே.எஸ்.அழகிரி: தேர்தல் முடிஞ்சதும் உங்களை ‘தனி ஒருவனா’ ஆக்கிடுறாங்களே ஜி!
@kumarfaculty
ராகுல்: அழகிரி ஜி... கல்லு உப்பு ஒரு 3 கிலோ போட்டுக்குங்க!
@LAKSHMANAN_KL
கே.எஸ்.அழகிரி: இதுவரை கோஷ்டிப்பூசல்கள்ல சிக்காத காங்கிரஸ்காரங்க லிஸ்ட்டு இது!
ராகுல்: அப்ப, கோஷ்டிப்பூசல்ல சிக்குனவங்க லிஸ்ட்டு எங்கே?
கே.எஸ்.அழகிரி: அது... பின்னால லாரியில வந்துக்கிட்டு இருக்கு ஜி!
@IamUzhavan
கே.எஸ்.அழகிரி: ஜி... வேலுமணி வீட்டுல காளான் பிரியாணி போடுறாங்களாம். மதியம் லஞ்சுக்கு அங்கே போலாமா?
@JaNeHANUSHKA
ராகுல்: ஆரம்பிக்கலாங்களா?
கே.எஸ்.அழகிரி: சாப்பிட்டுட்டு, ரெஸ்ட் எடுத்துட்டு அடுத்த மாசம் 15-ம் தேதிக்கு மேல ஆரம்பிக்கலாமே தலைவரே!
@LAKSHMANAN_KL
கே.எஸ்.அழகிரி: தம்பி ஜி... விதவிதமா பிரியாணி செய்யக் கத்துக்கிட்டு ஒண்ணும் ஆகப்போறதில்லை. விதவிதமா வடை சுட கத்துக்கோங்க... பிரதமராகிடலாம்!
Ravikumar
Krishnasamy
ராகுல்: என்னங்க இது... கட்சிக் காரிய கமிட்டி கணக்கா?
அழகிரி: இல்லை. பல இடங்கள்ல கட்சிக்கே காரியம் பண்ணின கணக்கு!
ரஹீம் கஸ்ஸாலி
அழகிரி: தலைவரே... உ.பி ரிசல்ட் வந்த அன்று, கார்த்தி சிதம்பரம் நெட்ஃப்ளிக்ஸில் பார்த்த படங்களின் லிஸ்ட் இது!
Saravanan M
ராகுல் காந்தி: இதெல்லாம் அடுத்து எந்தெந்த ஸ்டேட்ல தேர்தல் நடக்கப்போகுதுங்கற லிஸ்ட்டா?
கே.எஸ்.அழகிரி: எங்கெங்கே என்னென்ன பிரியாணி சமைக்கணும், எந்தெந்தப் புத்தக வெளியீட்டுவிழாவில் கலந்துக்கணும், எந்தெந்த இடங்களில் டைவ் அடிக்கணுங்கற லிஸ்ட்!
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.
Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan