ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!
@LAKSHMANAN_KL
‘ஆமை நடை போட்டு அரியணை ஏறு...
அரியணை அடைந்தால் கறி இட்லி தேடு!’
@Vkarthik_puthur
தம்பிகள்: அண்ணே... நாம இப்படி வெரப்பா புறப்பட்டு எங்கே போறோம்?
சீமான்: நாமளும் துபாய் போறோம்...
தம்பிகள்: முதலீட்டை ஈர்க்கவா?
சீமான்: இல்லை... அங்கே நிதி திரட்டி கட்சியை மீட்க!
@Kirachand4
“உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிகூட என் முப்பாட்டனுக்கு ஒரு வழியில சொந்தம்தான்... அதான், உக்ரைனுக்கு உதவி பண்ண தம்பிகளோடு புறப்பட்டுட்டேன்..!’’
@saravankavi
தம்பி: அண்ணே... அண்ணே... உங்களுக்கு விஷயம் தெரியுமா? உங்க இடத்தைப் பிடிக்க ஒரு ஆள் வந்துட்டாருண்ணே... உங்களைவிட பயங்கரமா அடுச்சுவிடுறாருண்ணே...
சீமான்: யாருய்யா அது... எனக்கே பார்க்கணும் போல இருக்கு...
தம்பி: தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைண்ணே!
சீமான்: புஹாஹாஹா!
@balasubramni1
“என்னடா பெரிய அரபிக்குத்து... அண்ணன் இப்போ ஆடுறேன் பாரு ஆர்ப்பாட்டமான ஆமைக்குத்து!
@LAKSHMANAN_KL
``ஃபேன்ஸி டிரெஸ் காம்பெடிஷனுக்குத் தம்பிகளும், ஸ்டோரி டெல்லிங் காம்பெடிஷனுக்கு நானும் ஒண்ணு சேர்ந்து கிளம்பியாச்சு..!’’
ஆனந்தன் அருள்
தம்பிகள்: அண்ணே... பொருளாதார நெருக்கடி தாங்க முடியாம, தமிழ்நாட்டுக்குப் புலம்பெயர்ந்து வரும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு நாம என்ன செய்யப்போறோம்?
சீமான்: இதுவரைக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் உங்களுக்கும் நான் என்ன செஞ்சேன்?
தம்பிகள்: எதுவுமே செய்யலையே...
சீமான்: அதேதான் அவங்களுக்கும்!
Jiya Sen
“இது எனக்கு ஐ.நா அனுப்பிவைத்த பாதுகாப்புப் படை... ‘நானே ஒன் மேன் ஆர்மி... எனக்கு எதுக்கு பாதுகாப்பு, வேணாம்’னு சொல்லித் திருப்பி அனுப்பிவைக்கிறேன்!”
Pamaran Paramaguru
“தம்பிகளே... ஜெலன்ஸ்கி ‘ஏன் தாமதம்?’ என்று கேட்டால், அண்ணனுடன் போட்டோ ஷூட் நடத்தவேண்டியிருந்தது என்று கூறுங்கள்!”
Vaira Bala
இப்படை வென்றால் எப்படை தோற்கும்?!
Sanjeevi Bharathi
“அண்ணே... ரஷ்யா சார்பா போறோமா... உக்ரைன் சார்பா போறோமா..?”
“போட்டோவுக்கு போஸ் கொடுத்துட்டு அவரவர் வீட்டுக்குப் போறோம்..!”
Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.