அரசியல்
அலசல்
Published:Updated:

போட்டோ தாக்கு

சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா

`` ‘ஜி’கிட்ட சொல்லி ‘அப்போலோ ஃபைல்ஸ்’ படம் எடுக்கச் சொல்லணும்!’’

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

TWITTER

@parveenyunus

“எவன்டா அது... சின்னம்மா வர்ற நேரம் பார்த்து ‘என் கதை முடியும் நேரம் இது’ பாட்டைப் போடுறது!”

@LAKSHMANAN_KL

`` ‘பரப்பன’ அக்ரஹாராவில் பட்ட கஷ்டங்களைக்கூட மறந்துட்டேன்... ஆனா, ‘ஊர்வன’ செஞ்ச துரோகங்களைத்தான் என்னால மறக்க முடியலை!’’

@balasubramni1

`` ‘ஜி’கிட்ட சொல்லி ‘அப்போலோ ஃபைல்ஸ்’ படம் எடுக்கச் சொல்லணும்!’’

@Anvar_officia

``அன்றைக்கு அ.தி.மு.க-வில் பிரபலமா இருந்தேன்... இன்றைக்கு அ.தி.மு.க-வுக்கு ‘பிராப்ளமா’ இருக்கேன்!’’

@parveenyunus

``இந்தக் கோடை வெயிலுக்கு அக்கா மட்டும் இருந்திருந்தா, கொடநாடு பங்களாவில் போய் கூலா இருந்திருக்கலாமே!’’

@Anvar_officia

``கட்சியில செல்லமான அம்மாவா இருந்த நான்... இன்னிக்கி செல்லாத அம்மாவா போயிட்டேனே!’’

FACEBOOK

பார்த்தசாரதி

``இப்போ நான் கண்ணைத் திறப்பேனாம்... எல்லாரும் ‘பொதுச்செயலாளர் சின்னம்மா வாழ்க’னு சொல்லுவீங்களாம்!’’

Ravindran Kannan

``சிறையில் கன்னடம் கற்றுக்கொண்டு ஜாலியாக ஷாப்பிங் சென்ற அந்த நாள்கள்... எவ்வளவு இனிமையானவை!’’

பார்த்தசாரதி

``இதுகூடப் பரவாயில்லைங்க... சீரியல்ல சின்னம்மா ரோல்ல நடிக்க சான்ஸ் தர்றேன்னெல்லாம் கூப்பிடறாங்கங்க..!’’

Ambai Deva

``அக்கா சமாதியில ஓங்கி அடிச்சு சில சபதங்கள் பண்ணவேண்டியிருக்கு... கை வலிக்கக் கூடாதுன்னு கிளவுஸ் மாட்டியிருக்கேன்!’’

Pamaran Paramaguru

``நான் ஆளாக்கிவிட்டவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து, இன்று ‘என்னை ஓர் ஆள் இல்லை’ என்று ஆக்கிவிட்டார்களே... ஐயகோ!’’

VKarthik

தொண்டர்கள்: சரி... சரி... அழாதீங்க. சின்னம்மா... ‘ஷாப்பிங்’ போயிட்டு வந்தா எல்லாம் சரியாப்போயிடும்!

Deva Rakki

``ஒரு நாள் நைட் முழுக்கத் தூங்காம ‘கையெழுத்து’ போட்டு பழகினேனே... எல்லாம் வீணாப்போச்சே..!’’

Adhirai Yusuf

ரஜினி மாதிரி ஒதுங்கிடலாமா... இல்லை கஜினி மாதிரி மீண்டும் படையெடுக்கலாமா?

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan