ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

@LAKSHMANAN_KL
பாக்யராஜ்: எதைவெச்சு மோடியை அம்பேத்கரோடு ஒப்பிட்டுப் பேசுனீங்கண்ணே?
இளையராஜா: அம்பேத்கர் உலகம் முழுக்க சுத்தியிருக்கார்னு யாரோ சொன்னாங்க தம்பி!
@RavindranRasu
இளையராஜா: ஒய் பிளட்?
பாக்யராஜ்: சேம் பிளட்!
@PG911_twitz
இளையராஜா: பல்டிக்கும் அந்தர் பல்டிக்கும் என்ன வித்தியாசம்?
பாக்யராஜ்: சர்ச்சையாப் பேசிவிட்டு சாவகாசமாக மன்னிப்புக் கேட்டா பல்டி... சாயங்காலமே மன்னிப்பு கேட்டா அந்தர் பல்டி!
@Kirachand4
பாக்யராஜ்: அண்ணாமலையுடன் உங்களுக்கு என்ன சம்பந்தம்ணே?
இளையராஜா: அண்ணாமலையா.... அந்தப் படத்துக்கு தேவா தம்பியில்ல மியூசிக்!
@ArunRamadassan
பாக்யராஜ்: ராஜா... தூக்காதே வேறு எங்கும் கூஜா..!
இளையராஜா: பட்... அந்த டீலிங் எனக்கு ரொம்பப் புடிச்சிருந்தது!
@Kirachand4
பாக்யராஜ்: பா.ஜ.க-வுக்கு ‘ட்யூன்’ போட ஆரம்பிச்சுட்டீங்கபோல..?
இளையராஜா: நீங்க மட்டும் என்னவாம்... பா.ஜ.க-வுக்கு ‘திரைக்கதை’ எழுதப்போய்த்தானே இவ்வளவு அடி!
@LAKSHMANAN_KL
பாக்யராஜ்: எதைவெச்சு ‘ஜி’யை அம்பேத்கரோடு ஒப்பிட்டுப் பேசினீங்க?
இளையராஜா: அம்பேத்கர் பல்துறை வித்தகர்... நம்ம ஜி பல்துறை ‘வித்தவர்’!
@IamUzhavan
பாக்யராஜ்: உங்களுக்கு என்ன சொன்னாங்க?
இளையராஜா: குடியரசுத் தலைவர்னு... உங்களுக்கு?
பாக்யராஜ்: ஆளுநர். ஹி... ஹி..!
Kavi Chennappan
இளையராஜா: என்ன தம்பி... தாமரையெல்லாம் மொட்டாவே இருக்கு?
பாக்யராஜ்: நீங்கதான் மெட்டுப் போட்டு மலரவெக்கணும்ணே!
பார்த்தசாரதி
பாக்யராஜ்: என்ன சார், உங்களை விட்டுட்டு என்னைப் பிடிச்சுட்டாங்களே!
இளையராஜா: கவலைப்படாதீங்க... அடுத்த ஆள் கிடைச்சதும் உங்களை விட்டுருவாங்க!
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.
Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan