Published:Updated:

போட்டோ தாக்கு

வேலுமணி, மோடி
பிரீமியம் ஸ்டோரி
வேலுமணி, மோடி

உங்க கட்சியில முக்கியமா எந்த விஷயம் நடந்தாலும், அப்பப்ப என்கிட்டே சொல்லிடணும்..!

போட்டோ தாக்கு

உங்க கட்சியில முக்கியமா எந்த விஷயம் நடந்தாலும், அப்பப்ப என்கிட்டே சொல்லிடணும்..!

Published:Updated:
வேலுமணி, மோடி
பிரீமியம் ஸ்டோரி
வேலுமணி, மோடி

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

TWITTER

@Kirachand4

வேலுமணி: எனக்கு எதுக்கு ஜி புக்கெல்லாம்... ‘புக் வித் கோமாளி’னு கிண்டல் பண்ணவா?

@balasubramni1

மோடி: ரெய்டைவெச்சு உங்களைப் பற்றி வரும் மீம்ஸ்களை எப்படித் தாங்கிக்கிறீங்க?

வேலுமணி: உங்களைப் பற்றி வர்ற மீம்ஸ்களை எட்டு வருஷமா நீங்க எப்படித் தாங்கிக்கிறீங்களோ அப்படித்தான் ஜி!

@parveenyunus

வேலுமணி: யாரைச் சந்திச்சாலும் புத்தகம் கொடுக்குறது என் வழக்கம்..!

மோடி: ஏன்... வருமானத்துக்கு அதிகமா புத்தகங்களையும் சேர்த்துட்டீங்களா?

@h_umarfarook

மோடி: இவ்வளவு நாளா பழகுறோம், ஒரு தடவைகூட சாப்பாட்டுக்குக் கூப்பிடலையே?

வேலுமணி: கவலைப்படாதீங்க ஜி, அடுத்த ரெய்டு வரும்போது சொல்லியனுப்பறேன்!

@RavindranRasu

வேலுமணி: எனக்கு நீங்க ஒரு உதவி செய்யணும் ஜி!

மோடி: சொல்லுங்க சிறப்பா செஞ்சுடுவோம்!

வேலுமணி: அடுத்த முறை என் வீட்டில் ரெய்டு நடக்கும்போது, விருந்துக்கு நீங்க சுட்ட வடைகளையெல்லாம் அனுப்பிவெக்கணும்!

@rishivandiya

மோடி: உங்க கட்சியில முக்கியமா எந்த விஷயம் நடந்தாலும், அப்பப்ப என்கிட்டே சொல்லிடணும்..!

வேலுமணி: ஆக, என்னை ‘வேவு’மணி ஆக்கிட்டீங்க..!

@sasitwittz

மோடி: ரெய்டு நேரத்துல எல்லாருக்கும் சாப்பாடு போட்டு, என்ன நடந்துச்சுன்னு தெரியாத அளவுக்குப் பண்ணிட்டீங்களாமே... பெரிய ஐடியா மன்னன் நீங்க!

வேலுமணி: ஆனாலும் ஜி... உங்க 15 லட்சம் ஐடியாவை யாராலயும் எப்பவும் அடிச்சுக்க முடியாது!

FACEBOOK

Enos Ibrahim

மோடி: எத்தனை தடவை ரெய்டு வந்திருக்காங்கன்னு கேட்டா தெரியலைன்னு சொல்றீங்களே... மறந்துபோச்சா?

வேலு: இல்லை ஜி... மரத்துப்போச்சு!

Ambai Deva

மோடி: ஒரு திருக்குறள் சொல்லுங்க வேலு!

வேலு: எதுக்கு ஜி?

மோடி: ஃபிளைட் ஏறும்போது மனப்பாடம் பண்ண மறந்து வந்துட்டேன்!

வேலு: செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க / செய்யாமை யானுங் கெடும்!

Asokan Kuppusamy

மோடி: அடுத்து ரெய்டு வரும்போது, அந்த கேட்டரிங் ஆர்டரை அம்பானிக்குத்தான் நீங்க தரணும்!

வேலுமணி: ஓ.கே ஜி... ஆனா, வடை கான்ட்ராக்ட் மட்டும் உங்களுக்குத்தான்!

Enos Ibrahim

மோடி: அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை... நிரந்தரப் பகைவனும் இல்லை வேலு..!

வேலு: உண்மைதான் ஜி... நிரந்தர ரெய்டு மட்டும்தான் இருக்குது!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism