பிரீமியம் ஸ்டோரி
ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!
போட்டோ தாக்கு

TWITTER

@NedumaranJ

``அய்யா, தைப்பூசத்துக்கு அரசு பொது விடுமுறையா அறிவிச்சுட்டாராம் முதல்வர் பழனிசாமி...’’

‘‘இன்னும் என்ன தாமதம்... `இது பா.ம.க-வுக்குக் கிடைத்த வெற்றி’னு சொல்லிட வேண்டியதுதான்!’’

@poonasimedhavi

ராமதாஸ்: அவங்களுக்கே 38-னா, நமக்கு ஒரு 58-வது கேட்டுப் பார்ப்போம்...

அன்புமணி: இப்படி, பக்கத்துக்கு வீட்டு மரத்துல பழம் பழுத்தாச்சானு பார்த்துப் பார்த்தே நம்ம மாம்பழம் அழுகிப்போயிடுது!

@KLAKSHM14184257

‘‘ `காருள்ள வரை, கடல் நீருள்ள வரை, பாருள்ள வரை, பைந்தமிழ் உள்ள வரை திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை’னு வீரவசனம் பேசிட்டு, இப்ப அ.தி.மு.க கூடவே கூட்டணி வெச்சுருக்குறது நல்லாவா இருக்கு டாடி..?’’

‘‘இப்ப இருக்குறதுதான் அ.தி.மு.க-வே இல்லையே மகனே!’’

@RahimGazzali

‘‘இந்த வருஷமாவது `பிக் பாஸ்’ல நானும் கலந்துக்கணும்ப்பா...’’

‘‘ஏன்?’’

‘‘அப்படியாவது ஒரு கோடி ஓட்டு வாங்கலாம்ல..!’’

@parveenyunus

‘‘முதல் நாள்... முதல் கையெழுத்து!’’

‘‘தம்பி... பிள்ளைங்களோட புராகிரஸ் ரிப்போர்ட்ல போடு!’’

@Vkarthik_puthur

‘‘எப்படியும் அ.தி.மு.க-வுல 20 சீட்டு கிடைச்சுடும் மகனே...’’

‘‘எப்படிப்பா?’’

‘‘நம்ம ஆளுகளைப் போராட்டம் நடத்தச் சொன்னது, 20 சதவிகித இட ஒதுக்கீட்டுக்குனு நெனைச்சியா... அது 20 சீட்டுக்கு மகனே!’’

@parveenyunus

‘‘ஏதாவது ஸ்டன்ட் பண்ணாத்தான் அய்யா ஜெயிக்க முடியும்...’’

“‘பாபா’ படப்பெட்டியைத் தூக்கின மாதிரி ‘மாஸ்டர்’ படத்துக்கும் செய்யலாம்னு பார்த்தா... இப்ப டெக்னாலஜி மாறிப்போச்சே..?’’

FACEBOOK

Subramanian Subburu

‘‘மகனே... நேற்று சிவகாசி பிரின்ட்டிங் பிரஸ்ஸுலருந்து ஒருத்தன் போன் போட்டுக் கேட்குறான்... ‘மாற்றம், முன்னேற்றம், அன்புமணி’ போஸ்டர் இந்த சீஸனுக்குத் தேவைப்படுமானு. எனக்கு செம சிரிப்பு வந்துடுச்சு மகனே...!’’

Pechiappan Pechiappan

‘‘கூட்டணியில நம்ம கட்சிக்கு நிறைய இடம் ஒதுக்கச் சொன்னா... கூட்டணியைவிட்டே நம்மை ஒதுக்கிருவாங்க போலிருக்கே!?’’

Vaira Bala

ராமதாஸ்: தம்பி... எங்கே கூட்டத்தையே காணோம்?

அன்புமணி: எல்லாரும் ரேஷன் கடையில பொங்கல் பரிசு வாங்கிட்டு, நேரா டாஸ்மாக்குக்குப் போயிட்டாங்களாம்!

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு