Published:Updated:

போட்டோ தாக்கு

அண்ணாமலை -  முருகன்
பிரீமியம் ஸ்டோரி
அண்ணாமலை - முருகன்

அ.தி.மு.க-வை அழிக்க நினைக்கிறது தி.மு.க-ன்னு எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறாரே?

போட்டோ தாக்கு

அ.தி.மு.க-வை அழிக்க நினைக்கிறது தி.மு.க-ன்னு எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறாரே?

Published:Updated:
அண்ணாமலை -  முருகன்
பிரீமியம் ஸ்டோரி
அண்ணாமலை - முருகன்

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

அண்ணாமலை -  முருகன்
அண்ணாமலை - முருகன்

TWITTER

@PG911_twitz

அண்ணாமலை: இருந்தாலும் ஓ.பி.எஸ் வருத்தப்படும் அளவுக்கு இப்படியெல்லாம் செய்திருக்கக் கூடாது.

முருகன்: அப்படி என்ன செஞ்சாங்க?

அண்ணாமலை: ப(ன்)னீருக்கு 5% ஜி.எஸ்.டி போட்டிருக்காங்களே!

@Vkarthik_puthur

அண்ணாமலை: மின் கட்டண உயர்வை வெச்சு தி.மு.க-வை எதிர்த்து பெரிய போராட்டம் பண்ணலாம்னு இருக்கேன். எப்படிண்ணே நம்ம ஐடியா?

எல்.முருகன்: பிளான்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா, நீ பாதியிலயே ஆட்டோ பிடிச்சுப் போயிடுவியேப்பா.

@JaNeHANUSHKA

முருகன்: ‘அரிசிக்கு எதுக்கு 5%

ஜி.எஸ்.டி... அதை நீக்கலாமே?’னு நிர்மலா ஜிகிட்ட கேட்டீங்களே... என்ன சொன்னாங்க?

அண்ணாமலை: எனக்கு அரிசி சாப்பிடுற பழக்கம் இல்லை... சாதம்தான் சாப்பிடுவேன்னுட்டாங்க.

@PG911_twitz

முருகன்: தலைவராகப் பதவியேற்று ஓராண்டு முடிந்திருக்கிறது. உங்கள் சாதனையாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

அண்ணாமலை: அனைத்து ரௌடிகளுக்குமான கட்சியாக நம் கட்சியை மாற்றியிருப்பதைத்தான்.

@h_umarfarook

எல்.முருகன்: அ.தி.மு.க-வை அழிக்க நினைக்கிறது தி.மு.க-ன்னு எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறாரே?

அண்ணாமலை: பாவம்... நம்மைப் பத்தி அவங்களுக்குத் தெரியலை.

@saravankavi

எல்.முருகன்: கள்ளக்குறிச்சி பள்ளிக்கூடத்துல கலவரம் பண்ணது நம்ம கட்சி ஆளுங்கன்னு சொல்றாங்களாமே... உண்மையா?

அண்ணாமலை: எல்லாம் பொய்... அத்தனை பேர் நம்ம கட்சில எங்க இருக்காங்க?

@Indhuviswa1977

முருகன்: சரி, எனக்கு ஏன் பேனர் வெக்கலை?

அண்ணாமலை: எனக்கு பேனர் வெக்கவே நாலு ஆடுகளை வித்திருக்கேன் ஜி.

@balasubramni1

முருகன்: மோடி ஜிக்கு அடுத்து நீங்கதான் லீடிங்குல இருக்கீங்கன்னு பேசிக்கறாங்க!

அண்ணாமலை: எதுல ஜி?

முருகன்: வாயால வடை சுடுறதுல.

@LAKSHMANAN_KL

அண்ணாமலை: தமிழ்நாட்டில் ‘தாமரை’யோட ஆட்சியை அமைக்காம இந்த உயிர் பிரியாதுண்ணே.

எல்.முருகன் (மைண்ட் வாய்ஸ்): சாகா வரத்துக்கு ஆசைப்படுறதை மனுஷன் எவ்ளோ நாசுக்கா சொல்றாரு..!

FACEBOOK

Saravanan M

அண்ணாமலை: அண்ணே, தாமரையை எப்படி மலரவெக்கிறது?

எல்.முருகன்: அது தெரிஞ்சா நான் ஏன் தேர்தல்ல தோத்து அமைச்சராகப் போறேன்?

ராஜா தேஜா

அண்ணாமலை: அண்ணே... அமித் ஷாவைப் பார்க்க தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அப்பாயின்ட்மென்ட் கேக்குறார்னு சொல்லச் சொன்னா, ‘ஒ.பி.எஸ்-ஸா, இ.பி.எஸ்-ஸா?’னு கேட்குறாங்களாம்... நீங்களாவது சொல்லுங்க... நான்தானேண்ணே தலைவரு?!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.