ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

@mohanramko
மோடி: இவரை நம்ம கட்சிக்கு இணக்கமா வெச்சிருக்கீங்களா?
அண்ணாமலை: ஜி... இவர் கட்சியையே நம்மகிட்டதான் வெச்சிருக்காரு.
@Vkarthik_puthur
மோடி: இபிஎஸ்-ஸும் ஓபிஎஸ்-ஸும் அண்ணன் தம்பி மாதிரிதானே இருந்தாங்க... அப்புறம் எப்படி அவங்களுக்குள்ள பிரச்னை வந்தது?
அண்ணாமலை: பிரச்னை வந்ததே யாரு அண்ணன்... யாரு தம்பிங்கிறதுலதான் ஜி!
@Vkarthik_puthur
அண்ணாமலை: உங்களைப் பார்க்க அனுமதியே கொடுக்க மாட்டேங்குறாங்க ஜி...
மோடி: அப்படியா... அப்புறம் இப்போ எப்படி அனுமதி கொடுத்தாங்க?
அண்ணாமலை: போட்டோகிராபர்னு பொய் சொன்னேன்... உள்ளே விட்டுட்டாங்க ஜி!
@LAKSHMANAN_KL
அண்ணாமலை: தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் நம்ம கட்சி சார்பா கபடிப் போட்டி நடத்தப்போறோம் ஜி... சீஃப் கெஸ்ட்டா பழனிசாமியைக் கூப்பிடலாம்னு இருக்கோம்..!
மோடி: சூப்பர் தம்பி... காலை வாருறதுலதான் இவர் எக்ஸ்பர்ட் ஆச்சே?!
@RavindranRasu
அண்ணாமலை: இப்ப இவர் பழைய பழனிசாமி இல்லைங்க ஜி!
மோடி: அப்ப எனக்குப் பழைய பன்னீர்செல்வமே போதும்.
@saravankavi
அண்ணாமலை: அ.தி.மு.க கட்சியை இப்ப இவர்தான் வெச்சிருக்காரு...
மோடி: அப்படின்னா இவரை நாம வெச்சுக்குவோம்.
@NedumaranJ
அண்ணாமலை: உங்களுக்கு செஸ் விளையாட தெரியுமா ஜி?
மோடி: என்ன இப்படிக் கேட்டுட்டீங்க மலை... நான் ஸ்கூல் படிக்கும்போது, செஸ் விளையாட ஷூ மாட்டிக்கிட்டு கிரவுண்டுல இறங்கிட்டேன்னா ஒரு பையன் எதிர்ல நிக்க மாட்டான்.
அண்ணாமலை: ஷூ மாட்டிக்கிட்டு கிரவுண்டுலயா?!
@balasubramni1
மோடி: ஓ.பி.எஸ்-ஸை நீக்கியது யார்?
இ.பி.எஸ்: நான்தான் ஜி.
மோடி: உங்களை நீக்கியது யார்?
இ.பி.எஸ்: ஓ.பி.எஸ் ஜி.
மோடி: உங்க ரெண்டு பேரையும் நீக்கியது யார்?
இ.பி.எஸ்: சசிகலா ஜி.
மோடி: சசிகலாவை நீக்கியது யார்?
இ.பி.எஸ்: ஓ.பி.எஸ்-ஸும் நானும் சேர்ந்துதான் ஜி.
மோடி: ஸ்ஸ்ஸப்பா... முடியலை.
@parveenyunus
அண்ணாமலை: நான் ஆடு ஜி.
மோடி: இவர் யாரு?
அண்ணாமலை: பலி ஆடு ஜி!
Deva Rakki
ஜி: மலை... இவரை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.
மலை: ஏன் ஜி?
ஜி: கேமராவை மறைக்காம நிக்குறாரே அதான்.
Mannargudi Rajagopal
மோடி: பன்னீருக்கும் எடப்பாடிக்கும் என்ன வித்தியாசம் மலை?
அண்ணாமலை: அவர் விலகிட்டு சேர்வாரு. இவர் ‘சேர்த்துவெச்சு’ விலக்குவாரு.
Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.