Published:Updated:

போட்டோ தாக்கு

மோடி - ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
மோடி - ஸ்டாலின்

முடியலைன்னா விட்டுருங்க... குறள் புரியாம உங்க கவர்னர் துப்பாக்கி எடுக்கணும்னு பேசுறார்.

போட்டோ தாக்கு

முடியலைன்னா விட்டுருங்க... குறள் புரியாம உங்க கவர்னர் துப்பாக்கி எடுக்கணும்னு பேசுறார்.

Published:Updated:
மோடி - ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
மோடி - ஸ்டாலின்

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

மோடி - ஸ்டாலின்
மோடி - ஸ்டாலின்

TWITTER

@Vkarthik_puthur

ஸ்டாலின்: இறுதிச்சடங்குக்கு ஜி.எஸ்.டி வரி இல்லையாமே... உண்மைங்களா ஜி?

மோடி: ஆமாமா... அதான் வாங்கவேண்டிய வரியையெல்லாம் சாவுறதுக்கு முன்னாடியே மக்கள்கிட்ட மொத்தமா வசூல் பண்ணிடுறோம்ல!

@rishivandiya

மோடி: உங்களைப் பார்த்தா 1,000 ரூபாயும்... என்னைப் பார்த்தா 15 லட்சம் ரூபாயும்தான் மக்களுக்கு ஞாபகம் வருது... என்ன செய்யலாம்?!

@chennappan10

மோடி: பவர் கட்டுக்கு அணில்தான் காரணம்னு சொல்றது நம்புற மாதிரியே இல்லையே ஜி..?

ஸ்டாலின்: கைதட்டி விளக்கேத்தினா கொரோனா போயிடும்னு நீங்க சொல்றதையும்தான் நம்ப முடியலை.

@balasubramni1

மோடி: ‘கோ பேக் மோடி’னு சொன்ன உங்களையே ‘வெல்கம் மோடி’னு சொல்ல வெச்சுட்டேன் பார்த்தீங்களா... இதுதான் குஜராத் மாடல்.

ஸ்டாலின்: ‘குறைந்த நாள்களில் செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகளை, தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செய்திருக்கிறது’னு உங்களையே சொல்லவெச்சேன் பார்த்தீங்களா... இதுதான் திராவிட மாடல்.

@rishivandiya

மோடி: கை கொடுங்க ஸ்டாலின் ஜி.

ஸ்டாலின்: அதுக்கும் ஜி.எஸ்.டி போட்டுற மாட்டீங்கல்ல?

@NedumaranJ

ஸ்டாலின்: என்ன ஜி... திடீர்னு ‘வீடுகளில் மக்கள் மூன்று நாள்கள் தேசியக்கொடியை ஏற்றிக்கொள்ளலாம்’னு அறிவிச்சுருக்கீங்க?

மோடி: ஆட்சிமீதான குறைகளைப் பற்றி மக்கள் அதிகமாகப் பேச ஆரம்பிக்கும்போது, உடனே அவங்களுக்குள்ள தேசபக்தியைத் தூண்டிவிடணும் ஜி. அதுதான் அரசியல்..!

@rishivandiya

மோடி: இந்தப் பட்டு வேட்டி, பட்டுச் சட்டையில அப்படியே காமராஜர் மாதிரி இருக்கீங்க..!

ஸ்டாலின் (மைண்ட் வாய்ஸ்): காமராஜர் போட்டோவைக்கூட பார்த்திருக்க மாட்டார்போலயே!

@sarathitup4

மோடி: பட்டு வேட்டி சட்டையில கலக்குறீங்களே... என்ன விலை ஜி!

ஸ்டாலின்: GST-யோடவா, இல்லாமலா ஜி!

FACEBOOK

Ravikumar Krishnasamy

மோடி: துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு… தூ… தூ..!

ஸ்டாலின்: முடியலைன்னா விட்டுருங்க... குறள் புரியாம உங்க கவர்னர் துப்பாக்கி எடுக்கணும்னு பேசுறார்.

Pamaran Paramaguru

மோடி: நான் கைகொடுக்கக் கூப்பிடலை... கேமராவை மறைக்காதீங்கன்னு சொன்னேன் ஸ்டாலின் ஜி!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan