Published:Updated:

போட்டோ தாக்கு

ரவி - ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ரவி - ரஜினி

‘விக்ரம்’ பட வசூல் 400 கோடியைத் தாண்டிடுச்சுன்னு கமல் சொன்னதுலருந்து.

போட்டோ தாக்கு

‘விக்ரம்’ பட வசூல் 400 கோடியைத் தாண்டிடுச்சுன்னு கமல் சொன்னதுலருந்து.

Published:Updated:
ரவி - ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ரவி - ரஜினி

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

ரவி- ரஜினி
ரவி- ரஜினி

TWITTER

0@h_umarfarook

ரஜினி: காசு பணம் எல்லாம் இருந்தும், 10 சதவிகித நிம்மதிகூட இல்லை.

ஆளுநர்: நிம்மதிக்கெல்லாம் இன்னும் ஜி.எஸ்.டி போடலையே... அப்புறம் என்ன கவலை?

@NedumaranJ

ரவி: டெல்லிக்குப் போயிட்டு வந்தீங்க. இப்ப என்னைச் சந்திக்க வந்திருக்கீங்க. என்ன விஷயம் ஜி?

ரஜினி: எல்லாம் ‘ஜெயிலர்’ பட புரொமோஷன்தான் ஜி!

@LAKSHMANAN_KL

ரஜினி: ஹலோ ரவி ஜி... என்னத் தெரியலை... நான்தான் ரஜினி!

ரவி: அரசியலுக்கு வர்றதா ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த விஷயத்தில், நீங்க ஒரு ‘கஜினி’ன்னும் தெரியும் ஜி!

@h_umarfarook

ஆளுநர்: ஜி.எஸ்.டி பற்றிக் கேட்டதற்கு ‘நோ கமென்ட்ஸ்’னு சொன்னீங்களாமே ஏன்?

ரஜினி: மோடி ஜி மட்டும் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டவுடன், `ஓ மை காட்’னு சொல்லி தப்பிச்சுப் போகலையா... அது மாதிரிதான்.

@chennappan10

ரவி: ஏன் அரசியலுக்கு வரவே மாட்டேங்கிறீங்க?

ரஜினி: ‘மக்கள் நீதி மய்யம்’ கண்ணுல வந்து போகுதே.

@NedumaranJ

ரவி: நிம்மதி 10% கூட இல்லைன்னு சொல்லியிருக்கீங்க... எப்பருந்து?

ரஜினி: ‘விக்ரம்’ பட வசூல் 400 கோடியைத் தாண்டிடுச்சுன்னு கமல் சொன்னதுலருந்து.

@LAKSHMANAN_KL

ரவி: என்ன ரஜினி ஜி, தாடி வெச்சிருக்கீங்க?!

ரஜினி: ஆட்டுக்குத்தான் தாடி வேணாம்னு தமிழக மக்கள் நெனைக்கிறாங்க ஜி..!

@poonasimedhavi

கவர்னர்: என்ன திடீர்னு இந்தப் பக்கம்?

ரஜினி: ஒண்ணும் இல்லை... பின்னால பயன்படும்னு உங்ககிட்ட கவர்னரா மூணு நாளைக்கு ட்ரெயினிங் எடுத்துக்கச் சொன்னாங்க.

@rishivandiya

ரஜினி: நான் வரியெல்லாம் ஒழுங்கா கட்டிடுவேன் ஜி!

கவர்னர்: ‘வாடகை பாக்கி’ மட்டும்தான் வெப்பீங்களோ?

@balasubramni1

ரவி: நான் யூஸ் பண்ற மாதிரி ஒரு பன்ச் டயலாக் சொல்லுங்க ஜி!

ரஜினி: `அமித் ஷா சொல்றார்... ஆளுநர் ரவி முடிக்கிறார்...’ இது எப்பிடியிருக்கு?

FACEBOOK

Vaira Bala

ரவி: என்ன சொன்னாங்க டெல்லியில?

ரஜினி: `மின்சாரத் திருத்தச் சட்ட மசோதா நிறைவேறினால், அதிகம் பாதிக்கப்படப்போவது தமிழக விவசாயிகள்தான். அதனால, அவங்க கவனத்தை திசைதிருப்புற மாதிரி நீங்க கவர்னரைப் போய்ப் பாருங்க’ன்னு சொன்னாங்க!

Manoharan Rajendran

ரஜினி: தி.மு.க-வுக்கு வில்லனா இருக்கீங்க; ஸ்மார்ட்டாவும் இருக்கீங்க. என்னோட அடுத்த படத்துல ஸ்மார்ட் வில்லனா ஒரு ரோல் பண்ணுங்களேன்.

ரவி: மசோதாக்களை இழுத்தடிக்கிற மாதிரி, என்னோட கால்ஷீட்டையும் இழுத்தடிப்பேன். பரவாயில்லையா?

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan