Published:Updated:

போட்டோ தாக்கு

அண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
அண்ணாமலை

``கடவுளே... போராட்டத்தைத் தொடங்கி இவ்வளவு நேரமாச்சு... போலீஸ் வர்றதுக்குள்ள நான் கிளம்ப ஒரு ஆட்டோ கிடைக்க மாட்டேங்குதே!’’

போட்டோ தாக்கு

``கடவுளே... போராட்டத்தைத் தொடங்கி இவ்வளவு நேரமாச்சு... போலீஸ் வர்றதுக்குள்ள நான் கிளம்ப ஒரு ஆட்டோ கிடைக்க மாட்டேங்குதே!’’

Published:Updated:
அண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
அண்ணாமலை

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

TWITTER

@amuduarattai

அண்ணாமலை (மைண்ட் வாய்ஸ்): கடவுளே... மக்களை வீட்டுக்கு வீடு தேசியக்கொடியை ஏற்றவைக்கும் வேலையை நான் பார்த்துக்கொள்கிறேன். என் கட்சிக்காரர்கள் தேசியக்கொடிக்கு பதிலாக காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றி, கட்சி மானத்தை வாங்காமல் நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும்!

@LAKSHMANAN_KL

அண்ணாமலை (மைண்ட் வாய்ஸ்): ஆண்டவா... இன்னிக்கு நடந்துக்கிட்டிருக்கிற உண்ணாவிரதப் போராட்டம் முடியும்போது... ரெண்டு மூணு பிரியாணி அண்டா கிடைக்க நீதான் ஒரு வழி பண்ணணும்.

@saravankavi

அண்ணாமலை (மைண்ட் வாய்ஸ்): எப்பப் பார்த்தாலும் நம்மாளுங்க தேசியக்கொடியைத் தலைகீழாவே ஏத்துறாங்க... ம்ஹூம்... இது சரிப்பட்டு வராது. தேசியக்கொடியை ஒரே கலராக்கச் சொல்லி தி.மு.க-வுக்கு எதிரா ஒரு போராட்டத்தை ஆரம்பிக்கவேண்டியதுதான்.

@RahimGazzali

அண்ணாமலை (மைண்ட் வாய்ஸ்): `தேர்தல் வந்தால் பி.டி.ஆரை எதிர்த்து போட்டியிடுவேன்’னு மதியம் சொல்லிட்டு, நைட்டே அவரிடம் சரண்டராகிட்டாரே... என்ன கொடுமை சரவணன் இது?

@h_umarfarook

சரவணன்: ‘உன் கூடவே இருந்து நான் செய்யும் காரியங்கள் பயங்கரமானவையாக இருக்கும்’னு பைபிள்ல ஒரு வசனம் இருக்கு. உங்களுக்குத் தெரியுமா?

அண்ணாமலை: அதைத்தான் நிகழ்த்தியே காமிச்சுட்டீங்களே.

@LAKSHMANAN_KL

அண்ணாமலை (மைண்ட் வாய்ஸ்): அரசியலைவிட்டு விலகினாலும், சரவணன் பழையபடி கிளினிக்குக்குப் போய் பொழச்சுப்பாரு... நான் பழையபடி ஐ.பி.எஸ் வேலைக்கெல்லாம் போக முடியாது... நீதான் எப்படியாவது என்னைக் காப்பாத்தணும் ஆண்டவா!

@Kirachand4

டாக்டர் சரவணன் (மைண்ட் வாய்ஸ்): மோடி ஜி டெல்லிக்குக் கிளம்பிப் போகுற ஃபிளைட்டைப் பார்த்துத்தான் நான் கும்பிடுறேன்னு அண்ணாமலை நினைச்சுக்கிட்டு இருக்காரு... நான் சூரியனைக் கும்பிடுறது அவருக்குத் தெரியாது.

@LAKSHMANAN_KL

அண்ணாமலை: ஆண்டவா... இந்த சரவணனை நம்பி எந்தப் பிரயோஜனமும் இல்லை... ‘சந்திரமுகி’ சரவணனை எங்களுக்கு ஆதரவு கொடுக்கச் சொல்லு... அது போதும்!

@kayathaisathya

அண்ணாமலை: அமைச்சர் மீதான கோபத்தில் செருப்பு எறியலை... அவர் வந்த வெளிநாட்டு காருக்கு எதிர்ப்பு தெரிவித்துத்தான் கார்மீது செருப்பு எறிஞ்சோம்னு சொல்லி சமாளிப்போமா?!

FACEBOOK

Ambai Deva

``கடவுளே... போராட்டத்தைத் தொடங்கி இவ்வளவு நேரமாச்சு... போலீஸ் வர்றதுக்குள்ள நான் கிளம்ப ஒரு ஆட்டோ கிடைக்க மாட்டேங்குதே!’’

VKarthik

``கட்சியில வர வர ‘காலணி’ ஆதிக்கம் அதிகரிச்சுக்கிட்டே போகுது. இதைத் தடுக்க நீதான் சாமி ஒரு நல்ல வழியைக் காட்டணும்.’’

Mannargudi Rajagopal

அண்ணாமலை: ஒண்ணு மட்டும் புரிஞ்சுபோச்சு ஆண்டவா... ஆக்டர்களை நம்பினாலும் இந்த மாதிரி டாக்டர்களை நம்பக் கூடாது!

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.