Published:Updated:

போட்டோ தாக்கு

தயாநிதி - உதயநிதி
பிரீமியம் ஸ்டோரி
தயாநிதி - உதயநிதி

அடுத்த தேர்தலுக்கு வேணுமேன்னு காலியா இருக்கிற அரசு கஜானாவுல பத்திரமா வெச்சுருக்கேன் அங்கிள்.

போட்டோ தாக்கு

அடுத்த தேர்தலுக்கு வேணுமேன்னு காலியா இருக்கிற அரசு கஜானாவுல பத்திரமா வெச்சுருக்கேன் அங்கிள்.

Published:Updated:
தயாநிதி - உதயநிதி
பிரீமியம் ஸ்டோரி
தயாநிதி - உதயநிதி

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

தயாநிதி - உதயநிதி
தயாநிதி - உதயநிதி

TWITTER

@Kirachand4

உதயநிதி: டாக்டர் பட்டம் வாங்கின கல்லூரி மாணவன் மாதிரி ஒரு ஃபீலிங் அங்கிள். றெக்கை மட்டும் இருந்திருந்தா இப்ப சிறகடிச்சு பறந்திருப்பேன்.

தயாநிதி: இப்ப மட்டும் என்ன... ஓகேனு சொல்லுங்க... புல் புல் பறவையில பறக்க அரேஞ்ச் பண்றேன்!

@chennappan10

உதயநிதி: நீட் எழுதாம டாக்டர் பட்டம் எப்படி வாங்கணும்னு என்னைப் பார்த்து மாணவர்கள் தெரிஞ்சுக்கட்டும்!

@LAKSHMANAN_KL

தயாநிதி: இளைஞர்களின் ரோல் மாடலா மாறிட்டீங்களே உதய்!

உதயநிதி: ‘ட்ரோல்’ மாடலா மாறாதவரை சந்தோஷம்தான்!

@Kirachand4

தயாநிதி: ஆமா... அந்த ஒத்தைச் செங்கல்லை எங்கே வெச்சுருக்கீங்க?

உதயநிதி: அடுத்த தேர்தலுக்கு வேணுமேன்னு காலியா இருக்கிற அரசு கஜானாவுல பத்திரமா வெச்சுருக்கேன் அங்கிள்.

@manipmp

தயா: இளைஞர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?

உதய்: படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அதுவும் ஐடி விங்குக்கு வர வேண்டும்.

@Anvar_officia

தயாநிதி: தம்பி... இந்த நிகழ்ச்சியும் உங்க தயாரிப்புதானா..?

@RavindranRasu

உதயநிதி: எனக்கு ஒரே ஒரு பேராசைதான்... இதே மாதிரி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவுக்கும் நான் போகணும்.

@amuduarattai

தயாநிதி: அடுத்து வரும் விஜய், அஜித் படங்களை சன் டி.வி சார்பாக வெளியிடலாம்னு இருக்கேன் உதயா.

உதயநிதி: யாமிருக்க பயமேன்?

தயாநிதி (மைண்ட் வாய்ஸ்): நீ இருப்பதுதான் பயமே.

FACEBOOK

Ambai Deva

தயா: மட்டமான படங்களைக்கூட வாங்குவது ஏன் தம்பி?

உதயா: மத்தியில் எல்லாத்தையும் விக்கிறாங்க... நாம எல்லாத்தையும் வாங்குறோம்... அவ்வளவுதான்!

Mannargudi Rajagopal

உதயநிதி: மாமா... கொஞ்சம் முன்னுக்கு வாங்க.

தயாநிதி: தாத்தா காலத்துலருந்தே நானும் ட்ரை பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன் மாப்ளை.

பெ.பச்சையப்பன் கம்பம்

தயாநிதி: மாப்ளை, இப்ப எதுக்காக எல்லாரும் கை நீட்டுறாங்க..?

உதயநிதி: மாம்ஸ்... டாக்டராகிட்டேன்ல... ‘பல்ஸ்’ செக் பண்ணவா இருக்கும்!

Ambai Deva

உதயநிதி: சினிமாவில் நான் நல்லா நடிக்கிறேனா?

தயாநிதி: அரசியல்ல ஓகே. சினிமாவில் பத்தாது தம்பி.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.