Published:Updated:

பா.ஜ.க படுதோல்வி... பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல் புகட்டும் பாடம் என்ன?

பஞ்சாப் தேர்தல்

``பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கு முக்கியக் காரணங்கள், வேளாண் சட்டங்களும், அதை ரத்து செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காமல் மத்திய பா.ஜ.க அரசு அடம்பிடிப்பதும்தான்.”

பா.ஜ.க படுதோல்வி... பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல் புகட்டும் பாடம் என்ன?

``பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கு முக்கியக் காரணங்கள், வேளாண் சட்டங்களும், அதை ரத்து செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காமல் மத்திய பா.ஜ.க அரசு அடம்பிடிப்பதும்தான்.”

Published:Updated:
பஞ்சாப் தேர்தல்

பாஞ்சாபில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கிறது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெறும் விவசாயிகளின் போராட்டம், பஞ்சாபில் பா.ஜ.க-வினருக்கு எதிராக நடந்த பல்வேறு வன்முறைகளுக்கு மத்தியில் நடக்கும் தேர்தல் என்பதால் தேசிய அளவில் அதிக கவனம்பெற்றது. ஆளும் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் மற்றும் பா.ஜ.க ஆகியவை தனித்தனியாகப் போட்டியிட்டன. மாநில எதிர்க்கட்சியான ஆம் ஆத்மியும் முதன்முறையாக உள்ளாட்சித் தேர்தல் களத்தில் இருந்தது. இதில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. அகாலி தளம், ஆம் ஆத்மி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவுசெய்திருக்கும் அதேநேரத்தில், பா.ஜ.க மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இது குறித்துப் பேசும் அரசியல் விமர்சகர்கள்,

பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்
பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்
Print-127

``வேளாண் சட்டங்களும், அதை ரத்து செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் அடம்பிடிப்பதும்தான் பா.ஜ.க-வின் தோல்விக்கு முக்கியக் காரணங்கள். வேளாண் அமைப்புகளுடன் பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்திய மத்திய அரசு, 18 மாதங்களுக்கு அந்தச் சட்டத்தை அமல்படுத்தாமல் தள்ளிவைப்பதாக அறிவித்திருத்தாலும், அவற்றை ஏற்க விவசாயிகள் தயாராக இல்லை என்பதைப் புரிந்துகொள்ளவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், தங்களின் விவசாய அமைப்புகள் மூலம் பிற அமைப்புகளுடன் இணைக்கமான உறவை ஏற்படுத்த பா.ஜ.க தவறிவிட்டது. இந்த அணுகுமுறையால் மத்திய பா.ஜ.க அரசுமீது மக்கள் மத்தியில் வெறுப்பு ஏற்பட்டது. இந்த வெறுப்பை ஒவ்வொரு கட்சியும் தேர்தலில் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டன என்றுதான் சொல்ல வேண்டும். இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் நகர்ப்புறங்களில் அடைந்த தோல்வியின் மூலம் அனைத்து தரப்பு மக்களிடையேயும் பா.ஜ.க மீது அதிருப்தி இருப்பதையே அறிந்துகொள்ள முடிகிறது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

அதனால்தான் பா.ஜ.க-வின் கோட்டைகளான குர்தாஸ்பூர், பதான்கோட், ஹோஷியார்பூர் மற்றும் 40 சதவிகிதத்துக்கும் மேல் இந்துக்கள் வாழும் மற்ற நகரங்களிலும்கூட பா.ஜ.க-வால் வெற்றிபெற முடியவில்லை” என்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பா.ஜ.க., அகாலி தளம் கட்சிகளுக்குள் ஏற்பட்ட கூட்டணிப் பிளவையும் தேர்தல் தோல்விக்கு மற்றொரு முக்கியக் காரணமாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

``இதுவரை பஞ்சாபில் தனித்தே போட்டியிடாத பா.ஜ.க., தங்களின் பலத்தை சுயபரிசோதனை செய்யவும், முறிந்துபோன கூட்டணியைச் சரிசெய்யவும் எந்த முயற்சியும் செய்யவில்லை. பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட பிறகு அகாலி தளத்துக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. மக்கள் தற்போதும் அகாலி தளத்தை பா.ஜ.க-வின் மற்றொரு வடிவமாகவே பார்க்கிறார்கள். அடுத்த ஆண்டு வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன், சீக்கியர்கள் மீது அதிருப்தியிலுள்ள அமைப்பினர், மக்களை ஒன்றிணைத்து அவர்களைத் தங்களுக்கான வாக்குகளாக பா.ஜ.க மாற்றிக்கொள்ள வேண்டும். 32% உள்ள பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தலித் மக்களின் நம்பிக்கையையும் பா.ஜ.க-வினர் பெற்றாக வேண்டும்.

பஞ்சாப்
பஞ்சாப்

சீக்கியர்களின் நம்பிக்கையைப் பெறுவதைவிட, ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடக்கவிருக்கும் ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களிலுள்ள இந்து ஜாட் அமைப்பினரின் நம்பிக்கையைப் பெறுவதிலேயே முழு கவனத்தையும் செலுத்தியது பா.ஜ.க-வின் தோல்விக்கு மற்றுமொரு காரணமாகப் பார்க்கப்படுகிறது” என்கின்றனர்.

எது எப்படி இருந்தாலும், பஞ்சாப் மாநில உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தங்களைத் தயார் செய்துகொள்ள பா.ஜ.க-வுக்கு விடுக்கப்பட்ட ஓர் எச்சரிக்கையாகத்தான் அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். ``பா.ஜ.க-வின் இந்துத்துவ சார்பும், பிரதமர் மோடியின் தனிப்பட்ட ஆளுமையும் நகர்ப்புற இந்துக்களை ஈர்த்து முதல்வர் அமரீந்தர் சிங் அரசாங்கத்துக்கு கடும் நெருக்கடி கொடுக்கலாம். ஆனால், அதற்கு முன்பு தங்கள் சிந்தாந்தத்தை நம்பும் மக்களின் நம்பிக்கையையாவது பா.ஜ.க பெற வேண்டிய கட்டாயத்தில் தற்போது இருக்கிறது என்பதையே பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல் உணர்த்துகிறது. ஏனெனில் பா.ஜ.க-வின் இந்தத் தோல்வி இந்தத் தேர்தலோடு நின்றுவிடுவதில்லை. பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் சொன்னதுபோல 2022-ல் நடக்கப்போகும் பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகத்தான் இந்த முடிவைப் பார்க்க வேண்டியிருக்கிறது. மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிரான விளைவைத்தான் ஹரியானா, பஞ்சாப் என அடுத்தடுத்து நடந்த தேர்தல்கள் மூலம் பா.ஜ.க அறுவடை செய்யத் தொடங்கியிருக்கிறது என்பதையும் உணர வேண்டும்” என்றும் கூறுபவர்கள்,

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்

``அமரீந்தர் சிங் போன்ற ஆளுமைமிக்க தலைவர்களை ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் உருவாக்க வேண்டும் என்ற படிப்பினையையும் ராகுல் காந்தி போன்ற அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு பஞ்சாப் உள்ளாட்சி தேர்தல் உணர்த்தத் தவறவில்லை” என்றும் கூறுகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism