Published:Updated:

`இது அம்மாவின் பாணி’ - அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்குக் காரணம் என்ன?

அ.தி.மு.க - பா.ஜ.க தலைமை அலுவலகங்கள்

இரண்டு கட்சிகளுக்கிடையே பேச்சுவார்த்தை சுமூக நிலையை எட்டவில்லை என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டது. அதை மெய்ப்பிக்கும் வகையில், அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

`இது அம்மாவின் பாணி’ - அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்குக் காரணம் என்ன?

இரண்டு கட்சிகளுக்கிடையே பேச்சுவார்த்தை சுமூக நிலையை எட்டவில்லை என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டது. அதை மெய்ப்பிக்கும் வகையில், அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

Published:Updated:
அ.தி.மு.க - பா.ஜ.க தலைமை அலுவலகங்கள்
நடைபெறப்போகும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், பா.ஜ.க தனித்துப் போட்டியிடுகிறது என அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அ.தி.மு.க - பா.ஜ.க கட்சிகளுக்கிடையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமூக முடிவு எட்டாத நிலையில் அ.தி.மு.க அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்தநிலையில் தற்போது தங்களுடைய நிலைப்பாட்டை அறிவித்துள்ளது பா.ஜ.க.

தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தனித்துப் போட்டியிடும் பா.ம.க, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அதேவேளை தி.மு.க மற்றும் அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை நடந்து வந்தது. தி.மு.க கூட்டணியில், மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை நடந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றன. மறுபுறம், அ.தி.மு.க கூட்டணியில் அந்தக் கட்சியின் தலைமை அலுவலகமான, எம்.ஜி.ஆர் மாளிகையில், இரண்டு கட்சித் தலைவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

பேச்சுவார்த்தை
பேச்சுவார்த்தை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அ.தி.மு.க தரப்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார் ஆகிய தலைவர்களும் பா.ஜ.க தரப்பில் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, மேலிடப் பார்வையாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கூட்டம் முடித்து வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, ``கூட்டணியில் அ.தி.மு.க பெரிய கட்சியாக உள்ளது. அதேநேரம், நகர்ப்புறங்களில் பா.ஜ.க வலிமையாக உள்ளது. அதைவைத்து எங்களுக்குச் சாதகமான இடங்களை ஒதுக்குமாறு கோரியுள்ளோம்'' என்றார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, ``தங்களுக்குச் சாதகமான இடங்களைக் கேட்பது அவர்களின் கடமை. அதனை ஏற்றுக்கொள்ளுவது என்பது எங்களின் முடிவு. அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கேட்கலாம். கட்சியின் நலனைப் பொறுத்து இடப்பங்கீடு அமையும்'' என்றார். இந்தநிலையில், அ.தி.மு.கவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

அண்ணாமலை
அண்ணாமலை

கடலூர் மாநகராட்சிக்கும் சிதம்பரம் நகராட்சி, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாச்சலம், திட்டக்குடி, விழுப்புரம், திண்டிவனம், தர்மபுரி ஆகிய நகராட்சிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதில், கடலூர் மாநகராட்சியில் 3 வார்டுகள் தவிர்த்தும், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, தர்மபுரி ஆகிய நகராட்சிகளில் தலா ஒரு வார்டு தவிர்த்தும் மீதமுள்ள நகராட்சிகளில் முழுவதுமாகவும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்தநிலையில், இரண்டாம் கட்டமாக இன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது அ.தி.மு.க தலைமை. இந்தநிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது என்பது குறித்து, அ.தி.மு.க வட்டாரத்தில் பேசினோம்,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`` ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் 20 சதவிகித இடங்களை பா.ஜ.க வினர் கேட்டனர். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் அதிகமான இடங்களை வழங்கவேண்டும் என்றனர். கோயம்புத்தூர், நாகர்கோவில், ஓசூர் உள்ளிட்ட சில மாநகராட்சிகளையும் கேட்டனர். ஆனால், அப்படியெல்லாம் வழங்கமுடியாது என்று சொன்னோம். மாவட்ட அளவில் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று சொல்லி அனுப்பினோம்'' என்றவர்களிடம் அதற்குள்ளாக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டது குறித்துக் கேட்க, ``அது அம்மாவின் பாணி. நாங்கள் எங்கள் வேட்பாளர்களை அறிவித்தோம். ஒருவேளை அவர்கள் இறங்கிவந்திருந்தால், அறிவித்த இடங்களில் சிலவற்றை வாபஸ் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால், அவர்கள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து விட்டனர். எங்கள் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒருசில இடங்களை ஒதுக்கியிருக்கிறோம். அவர்களும் இரட்டை இலைச் சின்னத்தில்தான் போட்டியிடுகின்றனர். '' என்றனர்.

அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி - பன்னீர்
அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி - பன்னீர்

பா.ஜ.க தரப்பில் பேசினோம், ``மாவட்ட அளவில் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்திதான் எங்களின் புரபோசலை முன்வைத்தோம். ஆனால், நாங்கள் கேட்ட இடங்களைக் கொடுக்க மறுத்துவிட்டனர். மீண்டும் மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தச் சொன்னார்கள். அது சரிவராது என்பதால்தான் தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்திருக்கிறோம். தமிழகத்தின் பல இடங்களில் எங்கள் கட்சி வளர்ச்சி அடைந்திருக்கிறது. அது இந்தத் தேர்தலில் தெரியவரும் '' என்பதோடு முடித்துக் கொண்டனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism