Published:Updated:

ரௌத்திரம் பழகும் எடப்பாடி... மாற்றங்களுக்கு வித்திடும் `பின்னணி' அரசியல்!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

நாமும் சில அதிரடிகளைக் காட்டி, நாம் எவருக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்லர் என்பதைப் புரியவைக்க வேண்டும்' என்று சொன்னார்களாம்.

"தற்போது மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக உறும ஆரம்பித்துள்ளேரே எடப்பாடி பழனிசாமி?"

கழுகார் நிதானமாக "ஆம், கொஞ்சம் கொஞ்சமாக ரௌத்திரம் பழகத் தொடங்கியிருக்கிறார் என்றுகூட சொல்லலாம். ஏற்கெனவே, ஜெயலலிதாவுக்கும்மேலாக தன்னைத் தயார்படுத்திக்கொள்ள ஆரம்பித்துவிட்டார். எங்கு திரும்பினாலும், 'எடப்பாடி ஐயா ஆட்சி' என்ற குரல்களை ஒலிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார். சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதற்கு முன், தனிப்பெரும் தலைவனாக உருமாற்றிக்கொள்ளும் அத்தனை அஸ்திரங்களையும் கையில் எடுத்துவிட்டார்.

இத்தகைய சூழலில், ரஜினியை பா.ஜ.க முன்னிலைப்படுத்தும் விஷயம், இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்கிற அளவுக்கு அவருடைய கோபத்தைக் கூட்டிவிட்டதாம். அதற்காகத்தான் பா.ஜ.க அரசின் சில திட்டங்களை எதிர்க்கவும் தயாராகிவிட்டார் என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்."

ரஜினியைக் கொண்டுவந்து நமக்கே வில்லனாக்கப் பார்க்கிறார்கள். நாமும் சில அதிரடிகளைக் காட்டி, நாம் எவருக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்லர் என்பதைப் புரியவைக்க வேண்டும்' என்று சொன்னார்களாம்.

"ஓ... புள்ளப்பூச்சிக்கும் கொடுக்கு முளைக்கிறதோ!"

"5 மற்றும் 8-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் அதிரடியாக ரத்துசெய்யப்பட்டது, டெல்டா பகுதி பாதுக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று தடலாடியாக அறிவித்தது எல்லாம் அதன் பின்னணியில்தானாம். இதன்மூலமாக, 'நான் யாருக்கும் அடிமை இல்லை' என்று ஊருக்கு அறிவிக்க நினைக்கிறாராம் எடப்பாடி!"

"ஓஹோ..."

"சமீபத்தில் தனக்கு நெருக்கமானவர்களிடம் எடப்பாடி தரப்பினர் பேசிக்கொண்டிருக்கும் போது, 'அவர்களுக்கு நாம் எல்லா விஷயங்களிலும் ஒத்துழைப்பு தருகிறோம். அதற்குப் பலனாக அடிமை அரசு என்கிற அவப்பெயரையும் வாங்கியிருக்கிறோம். ஆனால், அவர்கள் ரஜினியைக் கொண்டுவந்து நமக்கே வில்லனாக்கப் பார்க்கிறார்கள். நாமும் சில அதிரடிகளைக் காட்டி, நாம் எவருக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்லர் என்பதைப் புரியவைக்க வேண்டும்' என்று சொன்னார்களாம். அதற்குப் பிறகுதான் அடுத்தடுத்து இந்த அறிவிப்புகள் வந்திருக்கின்றன."

"பா.ஜ.க-வை எதிர்க்கும் தைரியம், உண்மையிலேயே எடப்பாடிக்கு வந்துவிட்டதா என்ன?"

"அந்தச் சந்தேகமும் பலருக்கும் இருக்கிறது. பா.ஜ.க-வை எதிர்த்தால் என்ன நடக்கும் என எடப்பாடிக்குத் தெரியாமல் இருக்காது. அதனால்தான் சி.ஏ.ஏ, காஷ்மீர் போன்ற பெரிய விவகாரங்களில் எல்லாம் ஆதரவாக இருந்துவிட்டு, பொதுத்தேர்வு, வேளாண் மண்டலம் என்று மாநில அரசு சம்பந்தப்பட்ட திட்டங்களில் மட்டும் எதிர்ப்பதாகக் காட்டிக்கொள்கிறார் என்றும் பேசுகிறார்கள்."

"ஒருவேளை தன் எதிர்ப்பில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருந்தால், வரும் சட்டமன்றத் தேர்தலில் மும்முனைப் போட்டியாகி விடுமோ?"

இதற்கான சாத்தியங்கள் என்னென்ன? ஓ.பி.எஸ் பயங்கர அப்செட் ஏன்? எப்படி இருக்கிறது அறிவாலயம்? - இந்தக் கேள்விகளுக்கான பதில்களுடன், ரஜினிக்கு மேக்கப் போடும் வேலைகளை மோடி துரிதப்படுத்தியுள்ளதன் பின்னணியை முழுமையாக ஜூனியர் விகடன் மிஸ்டர் கழுகு பகுதியில் முழுமையாக வாசிக்க > மிஸ்டர் கழுகு: 'மேக் இன் தமிழ்நாடு' - ரஜினியைச் செதுக்கும் மோடி! https://www.vikatan.com/government-and-politics/politics/mister-kazhugu-politics-and-current-affairs-feb-16

முதல்வரின் அறிவிப்பு சட்டமாகுமா?

காவிரி டெல்டா, வெற்றி ஆரவாரத்தில் ஆர்ப்பரிக்கிறது. விவசாயிகள் ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் 'டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்' அறிவிப்பை, மகிழ்ச்சியுடன் தலையாட்டி வரவேற்கின்றன நெற்கதிர்கள். 'இந்தப் பகுதியில் இனி மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு அனுமதி கிடையாது' எனவும் உறுதிபட தெரிவித்துள்ளது தமிழக அரசு.

ரௌத்திரம் பழகும் எடப்பாடி... மாற்றங்களுக்கு வித்திடும் `பின்னணி' அரசியல்!

அதேவேளையில், ''முதல்வரின் அறிவிப்பில், 'புதிதாக ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படாது' என்று கூறியுள்ளார். ஆனால், ஏற்கெனவே வேதாந்தா உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு கொள்கை அளவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைப் பற்றிய தெளிவு அறிவிப்பில் இல்லை'' என்று சிலர் ஆதங்கப்படுகின்றனர்.

- காவிரி டெல்டா பகுதியை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது தொடர்பாக ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்துள்ள சிறப்புச் செய்திக் கட்டுரையை முழுமையாக வாசிக்க > மகிழ்ச்சியில் டெல்டா... முதல்வரின் அறிவிப்பு சட்டமாகுமா? https://www.vikatan.com/government-and-politics/news/hydrocarbon-project-not-allow-in-tn

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு