Published:Updated:

`சின்னம்மா வந்தால் நாங்களும் வந்துவிடுவோம்!' - ஜெய் ஆனந்த்துக்கு உறுதிகொடுத்த அ.தி.மு.க மா.செ

Jai Anand, Vairamuthu
News
Jai Anand, Vairamuthu

திருமயம் தொகுதியில் கிடைத்த தோல்வியால் சென்னை பக்கமே வராமல் இருந்த வைரமுத்துவைத் தேடி இந்தப் பதவி வந்தது. கார்டனின் இந்தத் திடீர் அணுகுமுறையால் அதிர்ந்து போனார் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

தினகரனின் தனித்த செயல்பாடுகளால் கொந்தளிப்பின் உச்சத்தில் இருக்கின்றனர் மன்னார்குடி உறவுகள். `தினகரனை ஒதுக்கிதான் வைத்திருக்கிறார் சசிகலா. டிசம்பர் மாதம் அவர் சிறையிலிருந்து வந்ததும் நல்ல விஷயங்கள் படிப்படியாக நடக்கும்' என அ.தி.மு.க புள்ளியிடம் நேரடியாகப் பேசியிருக்கிறார் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த்.

Jai Anand in the wedding function
Jai Anand in the wedding function

திண்டுக்கல் மாவட்டம், சர்வேயர் ரத்தினம் தொண்டைமானின் மகன் திருமணம் நேற்று கறம்பக்குடியில் நடைபெற்றது. இந்த விழாவில் ஜெய் ஆனந்த், புதுக்கோட்டை அ.தி.மு.க மா.செ-வும் தமிழக வீட்டுவசதி வாரியத் தலைவருமான வைரமுத்து கலந்து கொண்டார். அ.ம.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஜெய் ஆனந்த்திடம் மனம் திறந்து பேசியிருக்கிறார் வைரமுத்து. `தி.மு.க-வைப் பலவீனப்படுத்த வேண்டுமென்றால், நாம் அனைவரும் ஒன்றாக இணைந்தால்தான் நல்லது. சின்னம்மா சிறையில் இருந்து வந்த பிறகு, நாங்களும் வந்துவிடுவோம். நாம் அனைவரும் ஒன்றாக இருந்து செயல்பட்டால்தான் அண்ணா தி.மு.க-வை பலப்படுத்த முடியும். தினகரனை நாம் ஒதுக்கியாக வேண்டும். அப்போதுதான் இந்த முயற்சி சரிப்பட்டு வரும்' எனக் கூறியிருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதற்குப் பதில் கொடுத்த ஜெய் ஆனந்த், `ஆமாம். அப்படிச் செய்தால்தான் நல்லது. இப்போதே தினகரனை ஒதுக்கித்தான் வைத்திருக்கிறார் சின்னம்மா. டிசம்பரில் அவர் வெளியில் வரும்போது நல்ல செய்தி வரும்' எனத் தெரிவித்தார். இந்தக் கருத்தை வைரமுத்துவும் ஏற்றுக்கொண்டார். இப்படியொரு விவாதம் நடந்துகொண்டிருப்பதை ஆச்சர்யத்துடன் கவனித்துள்ளனர் உள்ளூர் அ.தி.மு.க-வினர்.

TTV Dinakaran
TTV Dinakaran

இதுகுறித்து நம்மிடம் பேசிய மன்னார்குடி உறவுகள் சிலர், "2016 சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நேரத்தில், யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் வீட்டு வசதி வாரியத்துக்கு மட்டும் தலைவரை நியமித்தார் ஜெயலலிதா. திருமயம் தொகுதியில் கிடைத்த தோல்வியால் சென்னை பக்கமே வராமல் இருந்த வைரமுத்துவைத் தேடி இந்தப் பதவி வந்தது. கார்டனின் இந்தத் திடீர் அணுகுமுறையால் அதிர்ந்துபோனார் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். காரணம், ‘வைரமுத்து வெற்றி பெற்றால் கட்டாயம் அமைச்சர் பதவி வாங்கிவிடுவார்’ என்பதால், அவரைத் தோற்கடிக்க அனைத்து உள்ளடி வேலைகளையும் செய்தார். தேர்தல் முடிவில் 766 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க-வின் ரகுபதியிடம் வெற்றியைப் பறிகொடுத்தார் வைரமுத்து.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தேர்தலில் தோற்ற வைரமுத்துவை வாரியத் தலைவராக நியமித்தது அ.தி.மு.க-வினர் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் வேறு எந்த வாரியத்துக்கும் தலைவர் பதவி நிரப்பப்படவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நேரடியாக மாவட்டச் செயலாளர் பதவிக்கு வந்தவர் வைரமுத்து. பல ஆண்டுகளாக கார்டனின் குட்புக்கில் இருந்தவர். கார்டனில் பணிபுரிந்த பலரும் வைரமுத்துவால் கொண்டு வரப்பட்டவர்கள் என்பது கூடுதல் தகவல். தவிர, விஜயபாஸ்கர் செய்த சில வேலைகளால் மிகுந்த அதிருப்தியில் இருந்தார் சசிகலா. அதன் விளைவாகவே வைரமுத்துவை முன்னிறுத்தியது கார்டன்.

தமிழக அரசின் வாரியத் தலைவராக இருந்தாலும் இன்னமும் சசிகலாவின் அபிமானியாகத்தான் இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி படுதோல்வி அடைந்தது, இரட்டைத் தலைமை சர்ச்சை உள்ளிட்ட காரணங்களால் தொண்டர்கள் மத்தியில் சோர்வு தென்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், அடுத்து வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்ற மனநிலைக்கும் அ.தி.மு.க-வினர் வந்துவிட்டனர். இதன் காரணமாகவே, ஒரு சாரார் சசிகலா வருகையை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர். அதன் வெளிப்பாடுதான் திண்டுக்கல் திருமணத்தில் தென்பட்டது" என்றவர்கள்,

Jayalalithaa and Vairamuthu
Jayalalithaa and Vairamuthu

"தேர்தல் களத்தில் ஸ்டாலினை பலவீனப்படுத்த வேண்டும் என்றால், அது ஒன்றுபட்ட அ.தி.மு.க-வால்தான் முடியும். அதுவும், `தினகரனைத் தவிர்த்தால் சசிகலா தலைமையைப் பெரும்பாலான அ.தி.மு.க-வினர் ஏற்றுக்கொள்வார்கள்' என்பதையும் மன்னார்குடி உறவுகள் பேசி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகவே பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவைச் சந்தித்துப் பேசினார் ஜெய் ஆனந்த். தற்போது இளவரசி குடும்பத்துக்கும் தினகரனுக்கும் இடையில் மோதல் முற்றி வருகிறது. `குடும்ப உறவுகள் ஒருவரைக்கூட தினகரன் விட்டுவைக்கவில்லை' என்ற கோபமும் உச்சத்தை எட்டியுள்ளது. `தினகரனை ஒதுக்கிவைக்க வேண்டும்' என்ற குரலை அ.தி.மு.க-வில் உள்ள சிலரும் மன்னார்குடி குடும்ப உறவுகளும் பேசத் தொடங்கியுள்ளனர்" என்கின்றனர் விரிவாக.