Published:Updated:

` 50 ஜெயித்தால் கேபினட்டை யோசிக்கலாம்!' - நட்டா வருகையால் உதறல் எடுக்கும் தமிழக பா.ஜ.க.

ஜெ.பி.நட்டா

மோடிக்கு விசுவாசமாக இருப்பதால் தனக்கு கேபினட்டில் இடம் கொடுப்பார்கள் என நம்புகிறார் தமிழிசை. மாநிலத் தலைவர் பதவிக்காலம் நிறைவடையும் நேரத்தில் புதிய பதவி வந்து சேரும் எனவும் கணக்குப் போடுகிறார்.

` 50 ஜெயித்தால் கேபினட்டை யோசிக்கலாம்!' - நட்டா வருகையால் உதறல் எடுக்கும் தமிழக பா.ஜ.க.

மோடிக்கு விசுவாசமாக இருப்பதால் தனக்கு கேபினட்டில் இடம் கொடுப்பார்கள் என நம்புகிறார் தமிழிசை. மாநிலத் தலைவர் பதவிக்காலம் நிறைவடையும் நேரத்தில் புதிய பதவி வந்து சேரும் எனவும் கணக்குப் போடுகிறார்.

Published:Updated:
ஜெ.பி.நட்டா

பாரதிய ஜனதா கட்சியின் செயல் தலைவரான ஜெ.பி.நட்டா, நாளை தமிழகம் வரவிருக்கிறார். ` இந்தியாவிலேயே தனித்துவிடப்பட்ட மாநிலமாக தமிழகம் இருக்கிறது. மத்திய கேபினட்டில் இடம் கிடைக்கும் என தமிழக பா.ஜ.க பிரமுகர்கள் முயற்சி செய்கின்றனர். அடுத்த 2 வருடத்துக்கு எதுவுமே கொடுக்கப் போவதில்லை என்பதுதான் டெல்லியின் நிலைப்பாடாக இருக்கிறது' என்கின்றனர் உள்விவரம் அறிந்தவர்கள்.

தமிழிசை
தமிழிசை

நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு பல மாநிலங்களில் கட்சியைப் பலப்படுத்தும் வேலைகளைச் செய்து வருகிறது அகில இந்திய பா.ஜ.க. அதன் ஒருகட்டமாகத் தமிழகம் வரவிருக்கிறார் ஜெ.பி.நட்டா. உறுப்பினர் சேர்க்கைப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காகவும் உள்கட்டமைப்பைப் பலப்படுத்துவதற்கும் இந்த வருகையைப் பயன்படுத்த இருக்கிறார் நட்டா. அந்தநேரத்தில், அ.தி.மு.க முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா உள்பட சிலர் பா.ஜ.க-வில் இணைவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. `எனக்கு முக்கியப் பொறுப்பு கொடுக்கப்பட்டால், அ.தி.மு.க-வில் இருந்து பலரைக் கொண்டு வருகிறேன்' என டெல்லி நிர்வாகிகளுக்கு உறுதியளித்திருக்கிறார் சசிகலா புஷ்பா. `தமிழிசை மூலமாக இணைப்பு வேலைகளுக்கான பணிகள் நடந்து வருகின்றன. சசிகலாவுக்குத் துணைச் செயலாளர் பதவி கொடுப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். இந்நிலையில், `ஊடக விவாதங்களில் சமநிலை இல்லாததால் இனி வரும் நாட்களில் பா.ஜ.க சார்பாக யாரும் பங்கெடுக்க மாட்டார்கள்' என அறிவித்திருக்கிறார் டாக்டர்.தமிழிசை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நட்டா வருகைக்கும் தமிழிசை அறிவிப்புக்கும் பின்னணி என்ன?

`` மத்தியில் கடந்தமுறையைவிட பெரும்பான்மையோடு ஆட்சியமைத்திருக்கிறார் மோடி. தேசிய நீரோட்டத்தில் இருந்து தனித்துவிடப்பட்ட மாநிலமாக தமிழகம் இருக்கிறது. `இந்த மாநிலத்துக்கென்று தனியாக பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்' என்ற கோரிக்கையோடு தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் சிலர் டெல்லியில் முகாமிட்டனர். ராஜ்ய சபா உறுப்பினராகி கேபினட்டுக்குள் நுழைந்துவிட வேண்டும் என்பதுதான் அவர்களுடைய கனவாக இருந்தது. ஆனால், இவர்களை டெல்லி வட்டாரம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. 15 நாட்கள் தவம் இருந்தும், ` 2021 சட்டமன்றத் தேர்தலில் 50 சீட்டுகளை வென்று காட்டிவிட்டுப் பதவியைக் கேளுங்கள்' எனக் கூறி கதவைச் சாத்திவிட்டது" என விவரித்த பா.ஜ.க நிர்வாகிகள் சிலர்,

அமித் ஷா, மோடி
அமித் ஷா, மோடி

`` மோடிக்கு விசுவாசமாக இருப்பதால் தனக்கு கேபினட்டில் இடம் கொடுப்பார்கள் என நம்புகிறார் தமிழிசை. மாநிலத் தலைவர் பதவிக்காலம் நிறைவடையும் நேரத்தில் புதிய பதவி வந்து சேரும் எனவும் கணக்குப் போடுகிறார். `விரைவில் அரசியல் மைலேஜ் கிடைக்கும்' எனவும் ஆதரவாளர்களிடம் பேசி வருகிறார். அவரது கணக்கு நிறைவேறுமா என்பதற்கான விடையை அடுத்த கேபினட் மாற்றத்தில்தான் அறிய முடியும். மோடிக்கு வெற்றியைக் கொடுத்த சில மாநிலங்களுக்கே இன்னமும் கேபினட்டில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. ஒரு சதவிகிதம் கூட பங்களிப்பு இல்லாத மாநிலத்துக்கு அடுத்த 2 ஆண்டுகாலத்துக்கு கேபினட்டிலோ ராஜ்யசபாவிலோ இடம் கொடுக்க வாய்ப்பில்லை. ஏற்கெனவே, இணை அமைச்சர், காயர் போர்டு சேர்மன், ரயில்வே போர்டு ஆகிய பதவிகளைக் கொடுத்தும் அவர்களால் எந்த மாற்றத்தையும் தமிழகத்தில் ஏற்படுத்த முடியவில்லை. தற்போதுள்ள நிலையில் தமிழக பா.ஜ.க நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனநிலையில் டெல்லி மேலிடம் இல்லை" என்றவர்கள்,

`` ஊடக விவாதங்களில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டதன் பின்னணியில் சில விஷயங்கள் நடந்தன. டெல்லியில் இருந்து வந்த முக்கிய நபர் ஒருவர், ` அனைத்து விவாதங்களிலும் நாம் பங்கெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் மக்கள் மத்தியில் தேவையற்ற கெட்ட பெயர் ஏற்படுகிறது. தலைப்புகளைத் தேர்வு செய்த பின்னர் உரிய தயாரிப்புகளோடு விவாதங்களுக்குச் செல்லலாம்' எனத் தகவல் கொடுத்திருக்கிறார். தவிர, ஊடக விவாதங்களில் பா.ஜ.க சார்பாக கலந்து கொள்கிறவர்களில் பலரும் ஒருகட்டத்தில் தகராறில் ஈடுபடுகின்றனர். அதனைச் சமாளிக்கக் கூடிய தைரியமும் இல்லாமல் இருக்கின்றனர். மாற்று கட்சிகளில் இருந்து வந்து பேசுகிறவர்களும் பா.ஜ.க நிர்வாகிகளைக் கடுமையாகச் சாடிப் பேசுகின்றனர். `இதையெல்லாம் சகித்துக் கொண்டு ஏன் விவாதங்களில் பங்கேற்க வேண்டும்?' என அறிவுறுத்தியும் சிலர் கேட்கவில்லை. ஊடகங்களில் பேசக் கூடிய ஐந்து நபர்களில் நான்கு பேர் பா.ஜ.க-வுக்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள்.

சசிகலா புஷ்பா
சசிகலா புஷ்பா

இதனை ஆராய்ந்த பார்த்தபோது, `நாம் சில காலம் போகாமல் இருக்கலாம்' எனத் தமிழிசைக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த மையக்குழுவிலும் இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. ஜெ.பி.நட்டா வருகையின் முக்கிய அங்கமாகத்தான் இப்படியொரு அறிவிப்பைப் பார்க்க முடிகிறது. செயல் தலைவராகப் பதவியில் இருக்கும் ஒருவர், குஜராத், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களுக்குச் செல்லாமல் தமிழகத்துக்கு வருவது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ஒவ்வொரு கட்சியிலும் செல்வாக்காக இருக்கக் கூடியவர்களைப் பா.ஜ.க பக்கம் கொண்டு வருவதுதான் அவரது வருகையின் முக்கிய நோக்கம். அ.தி.மு.க தலைமையின் மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள் சிலரையும் பா.ஜ.க பக்கம் கொண்டு வருவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, அ.தி.மு.க-வின் ராஜ்ய சபா உறுப்பினர்களை குறிவைத்தும் இப்படியொரு வேலை நடந்து வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க பெற்ற வாக்குகளை குறிவைத்தும் பா.ஜ.க-வின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடரலாம்" என்கின்றனர் இயல்பாக.