Published:Updated:

`ஒரேநேரத்தில் கே.என்.நேருவுக்கும் பாலுவுக்கும் செக்!'- அதிர்ச்சி கொடுத்த அறிவாலய `சாவி சென்டிமென்ட்'

மு.க.ஸ்டாலினுடன் கே.என்.நேரு

அறிவாலயத்துக்கு நேரு வந்ததில் பொன்முடி, ஐ.பெரியசாமி, டி.ஆர்.பாலு உட்பட பலருக்கும் விருப்பமில்லை. இந்தப் பதவியை பொன்முடி மிகவும் விரும்பினார். எ.வ.வேலுவும் ஆசைப்பட்டார். இவர்களுக்கு எந்தவித வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை.

`ஒரேநேரத்தில் கே.என்.நேருவுக்கும் பாலுவுக்கும் செக்!'- அதிர்ச்சி கொடுத்த அறிவாலய `சாவி சென்டிமென்ட்'

அறிவாலயத்துக்கு நேரு வந்ததில் பொன்முடி, ஐ.பெரியசாமி, டி.ஆர்.பாலு உட்பட பலருக்கும் விருப்பமில்லை. இந்தப் பதவியை பொன்முடி மிகவும் விரும்பினார். எ.வ.வேலுவும் ஆசைப்பட்டார். இவர்களுக்கு எந்தவித வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை.

Published:Updated:
மு.க.ஸ்டாலினுடன் கே.என்.நேரு

`தலைமைக் கழக முதன்மைச் செயலாளராகப் பதவி வகித்து வரும் டி.ஆர்.பாலு, நாடாளுமன்றக் குழுத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருவதால் அவருக்குப் பதிலாகத் தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு எம்.எல்.ஏ நியமிக்கப்படுகிறார்' - தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்ட இந்த அறிவிப்பு, உடன்பிறப்புகள் மத்தியில் தீவிர விவாதப் பொருளாக மாறியுள்ளது.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக நேற்று பதவியேற்றுக் கொண்டார் கே.என்.நேரு. இதையடுத்து, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் சமாதிக்குச் சென்றவருடன் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சேடப்பட்டி முத்தையா மகன் மணிமாறன், மதுரை மூர்த்தி உட்பட மூன்று பேர் மட்டுமே உடன் இருந்தனர். தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உட்பட தலைமைக் கழக நிர்வாகிகள் யாரும் உடன் செல்லவில்லை. அதேநேரம்,` தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதில் கடும் கோபத்தில் இருக்கிறார் டி.ஆர்.பாலு' என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில். இந்தக் கோபத்தைப் பல்வேறு வழிகளில் அவர் காட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக இருந்த துரைமுருகனுக்குப் பொருளாளர் பதவி வழங்கப்பட்ட நேரத்தில், டி.ஆர்.பாலுவுக்கு துரைமுருகன் வகித்துவந்த பதவியை வழங்கினார் ஸ்டாலின். இதையடுத்து, அறிவாலயத்தில் உள்ள முதன்மைச் செயலாளர் அறையில் அமர்ந்த டி.ஆர்.பாலு, மாவட்டங்களில் நிலவும் கோஷ்டிப் பூசல்களை சரிகட்டும் வேலைகளைச் செய்து வந்தார். ஒருகட்டத்தில், அமைதியாகிவிட்டார். இந்நிலையில், திருச்சியில் இருந்து நேருவை தலைமைக் கழகத்துக்குக் கொண்டு வரும் வேலையில் குடும்பத்தில் உள்ளவர்கள் ஆர்வம் காட்டினார்கள். காரணம், இளைஞரணியின் தலைமைக்கு அவர் குடைச்சலாக இருந்தார் என்பதுதான். `திருச்சியிலிருந்து அவரைக் கொண்டு வந்துவிடுங்கள்' எனத் தொடர்ந்து தலைமையிடம் வலியுறுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து, `2 முதன்மைச் செயலாளர்கள்' என்ற பதவியை உருவாக்க விரும்பினார் ஸ்டாலின். இதற்கு டி.ஆர்.பாலு ஒப்புக்கொள்ளவில்லை. ஒருகட்டத்தில், `நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்துகொள்ளுங்கள்' எனக் கூறிவிட்டுக் கிளம்பிவிட்டார்.

ஸ்டாலினுடன் டி.ஆர்.பாலு, துரைமுருகன்
ஸ்டாலினுடன் டி.ஆர்.பாலு, துரைமுருகன்

கடந்த நான்கு நாள்களாக இந்தக் குழப்பம் நீடித்துக்கொண்டிருந்தது" என விவரித்த தி.மு.க சீனியர் நிர்வாகிகள் சிலர், ``டி.ஆர்.பாலுவை சமாதானப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தது. இந்த நேரத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் தி.மு.க தரப்புக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை ஓடிக்கொண்டிருந்தது. `என்னை அந்தப் பதவிக்கு பரிந்துரை செய்யுங்கள்' என டி.ஆர்.பாலு கேட்டிருக்கிறார். இதற்கு ஸ்டாலின் ஒப்புக்கொள்ளவில்லை. `குடியுரிமை சட்டத் திருத்தத்தைத் தொடர்ந்து பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவரும் வேலையில் பா.ஜ.க அரசு இயங்கும். அதையும் நாம் வலிமையாக எதிர்ப்போம். அவர்களிடமிருந்து பதவியை வாங்கிவிட்டால், நம்மால் ஒன்றும் செய்ய முடியாது' எனக் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதை டி.ஆர்.பாலு ஏற்கவில்லை. ஒருகட்டத்தில், மன்னார்குடி எம்.எல்.ஏ-வும் டி.ஆர்.பாலு மகனுமான டி.ஆர்.பி.ராஜாவுக்கு இளைஞரணியில் மாநில துணைச் செயலாளர் பதவியைக் கொடுப்பது பற்றிப் பேசியுள்ளனர். இதற்கு கிரீன் சிக்னல் கிடைக்கவே,` டி.ஆர்.பி டெல்லியிலேயே இருக்கட்டும்' என ஸ்டாலினும் முடிவு செய்துவிட்டார். இதையடுத்து, உடனடியாக நேருவுக்குப் பதவியை அறிவித்தார் ஸ்டாலின்" என்றனர் விரிவாக.

அதேநேரம், திருச்சியில் இனி நேருவுக்கு எந்த வேலையும் இல்லை என்பதால் அவரது எதிர்ப்பாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ``திருச்சி மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து, அன்பில் மகேஷுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பை வழங்க உள்ளனர். தற்போது வடக்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் தியாகராஜன் இதே பதவியில் தொடர இருக்கிறார். மூன்றாவதாக, மாநகரச் செயலாளராக இருக்கும் அன்பழகனைக் கொண்டு வருவதற்குத் தலைமையிடம் கூறியுள்ளனர். ஆனால், மாவட்டச் செயலாளராக அன்பழகன் வருவதில் நேருவுக்கு உடன்பாடில்லை. தனக்கு மிகவும் நெருக்கமான பாஸ்கரை அந்தப் பதவிக்குக் கொண்டு வர விரும்புகிறார். இதனால் திருச்சியிலும் சிக்கல் நீடித்து வருகிறது.

நேருவுடன் அன்பில் மகேஷ்
நேருவுடன் அன்பில் மகேஷ்

தலைமையின் அருகில் ஒரு நாற்காலி வேண்டும் என நீண்டகாலமாகவே ஆசைப்பட்டார் நேரு. அதற்கேற்ப பதவியைக் கொடுத்துவிட்டார் ஸ்டாலின். அறிவாலயத்துக்கு நேரு வந்ததில் பொன்முடி, ஐ.பெரியசாமி, டி.ஆர்.பாலு உட்பட பலருக்கும் விருப்பமில்லை. இந்தப் பதவியை பொன்முடி மிகவும் விரும்பினார். எ.வ.வேலுவும் ஆசைப்பட்டார். இவர்களுக்கு எந்தவித வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை. திருச்சியில் இருந்ததுபோல அறிவாலயத்தில் நேருவால் செயல்பட முடியுமா என்பது சந்தேகம்தான். கருணாநிதியைப்போல ஜனநாயகபூர்வமான இருக்கையாக இது இருக்காது. இங்கு ஒன்மேன் ஆர்மியின் ராஜ்ஜியம்தான். தலைவரைத் தவிர வேறு யாரும் கோலோச்ச முடியாது" என்கின்றனர் அறிவாலய நிர்வாகிகள்.

சாவி சென்டிமென்ட்!

தலைமைக் கழக முதன்மைச் செயலாளராகப் பதவியேற்ற பிறகு, டி.ஆர்.பாலுவின் அறைக்குச் சென்றிருக்கிறார் கே.என்.நேரு. ஆனால், அந்த அறையின் சாவி எங்கே எனத் தெரியவில்லை. மதியம் 12 மணியளவிலிருந்து சுமார் ஒன்றரை மணி நேரம், முதன்மைச் செயலாளர் அறையின் சாவியைத் தேடி அலைந்துள்ளனர். ஆனால், அந்த அறையைப் பூட்டிவிட்டு சாவியை எடுத்துக்கொண்டு போய்விட்டார் டி.ஆர்.பாலு. ஒருகட்டத்தில் மாற்றுச் சாவி மூலமே முதன்மைச் செயலாளர் அறையைத் திறந்துள்ளனர்.

தி.மு.க நிர்வாகிகள் கூட்டம்
தி.மு.க நிர்வாகிகள் கூட்டம்

` அறிவாலயத்தின் கடைக்கோடியில் முதன்மைச் செயலாளர் அறை இருக்கிறது. இந்த அறையில் இருந்தபடியேதான் தகவல் தொழில்நுட்ப அணியைக் கவனித்து வந்தார் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். அந்த அறையில் ஹைடெக்காகப் பல்வேறு வசதிகளையும் ஏற்படுத்தினார். ஆனால், சில மாதங்களில் அவரது அறையை டி.ஆர்.பாலுவுக்கு ஒதுக்கினார்கள். இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளானார் பழனிவேல் தியாகராஜன். தற்போது டி.ஆர்.பாலுவின் பதவி பறிக்கப்பட்டு நேரு வந்திருக்கிறார். அந்த அறையில் உட்கார்ந்து அலுவல்களைக் கவனித்தவர்களுக்கெல்லாம் சிக்கல்தான். கே.என்.நேரு என்ன பாடுபடப் போகிறாரோ?' எனவும் சென்டிமென்டாகப் பேசுகின்றனர் உடன்பிறப்புகள்.