Published:Updated:

மோடி முன்னிலையில் ஸ்டாலினின் பேச்சும் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை விடுவிப்பும்... ஓர் அரசியல் பார்வை

முதல்வர் ஸ்டாலின் - பிரதமர் மோடி

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய 86,912 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு 9,602 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

மோடி முன்னிலையில் ஸ்டாலினின் பேச்சும் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை விடுவிப்பும்... ஓர் அரசியல் பார்வை

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய 86,912 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு 9,602 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின் - பிரதமர் மோடி

மே 31-ஆம் தேதி வரை மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையையும் மத்திய அரசு விடுவித்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு அரசுக்கு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை 9,602 கோடியையும் மத்திய அரசு விடுவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “2022 மே 31ம் தேதி வரையில் மாநிலங்களுக்கு வழங்கப்படவேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீடு 86,912 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை, மாநிலங்கள் இந்த நிதியாண்டின் மூலதனச்செலவு உள்ளிட்ட திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவதை உறுதி செய்ய உதவும். ஜி.எஸ்.டி இழப்பீட்டு நிதியில் 25,000 கோடி ரூபாய் மட்டுமே இருப்பிலிருந்தபோதிலும், இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்படவேண்டிய நிலுவைத் தொகை 17,973 கோடி ரூபாயாகும். பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான நிலுவைத் தொகை 21,322 கோடி ரூபாய். 2022 ஜனவரி வரையிலான இழப்பீட்டு நிலுவைத் தொகை 47,617 கோடி ரூபாய். ஆக மொத்தம் 86,912 கோடி ரூபாய் நிலுவைத் தொகை. இது தற்போது விடுவிக்கப்பட்டதையடுத்து, மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டு நிலுவை ஏதுமில்லை” எனக் குறிப்பிட்டிருந்தது.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

மத்திய அரசின் திட்டங்களைத் தொடங்கி வைக்கச் சென்னை வந்திருந்த பிரதமர் முன் முதல்வர் ஸ்டாலின் ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை மற்றும் கூட்டாட்சி குறித்து பேசியதன் விளைவாகவே இந்த நிலுவைத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது என தி.மு.க-வின் கூறி வருகிறார்கள். இந்தக் கூற்றின் பின்னணி என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழ்நாடு பா.ஜ.க பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பேசினோம். ``காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக என்றொரு பழமொழி இருக்கிறது. யானையே முட்டினாலும் பனம்பழம் முதிர்ந்துதான் கீழே விழும். அதை எதேச்சையாகக் காக்கா உட்காரும்போது கீழே விழுந்ததை பார்த்து தன்னால்தான் அது விழுந்தது என்று காக்கா சொன்னால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது தி.மு.க-வினரின் பேச்சு. எப்போதுமே இயல்பாக நடக்கும் ஒரு விசயம் தங்களால்தான் நடந்தது என்று சொல்வது தி.மு.க-வின் வழக்கம். அப்படித்தான் ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை முதல்வர் ஸ்டாலின் பேசியதால்தான் மத்திய அரசு விடுவித்துள்ள என்று அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

ஜி.எஸ்.டி. கமிட்டிக் கூட்டத்தில் பேசப்பட்டு, எல்லா மாநில நிதி அமைச்சர்களின் கருத்துகளும் கேட்கப்பட்டு, அதில் ஏதாவது மாற்றுக் கருத்து இருந்தால் அது குறித்தும் விவாதிக்கப்பட்டு அதன்பிறகுதான் நிலுவைத் தொகையை விடுவிப்பார்கள். அப்படித்தான் இப்போதும் நடந்திருக்கிறது. விஷயம் தெரியாதவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஜி.எஸ்.டி கவுன்சிலில் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டதன்படிதான் இந்த நிலுவைத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி மத்திய அரசு மாநிலங்களுக்கு நேரடியாக எதுவும் செய்ய முடியாது. அதனால்தான் சாலை, இலவச குடிநீர், ஏழைகளுக்கு வீடு, இலவச கழிப்பறை என அனைத்தையும் மாநில அரசுகள் மூலம் மத்திய அரசு செய்துகொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் மாநிலத்தில் நடைபெறும் விஷயங்களுக்கு மத்திய அரசு எப்படிப் பொறுப்பாகும்.

எஸ்.ஆர்.சேகர்
எஸ்.ஆர்.சேகர்

எல்லா விஷயங்களுக்கும் மத்திய அரசைக் கை காட்டுவது தி.மு.க-வுக்குக் கை வந்த கலை. இந்த அரசியலைத் தவிர்த்துவிட்டு மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு உரிய முறையில் சென்று சேருவதை உறுதி செய்வது, சட்டம் ஒழுங்கைச் சீர் செய்வது, கல்வியை மேம்படுத்துவது என்ற மூன்று முக்கிய விஷயங்களில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டும். அப்படிச் செய்வதுதான் நல்ல அரசுக்கு உதாரணம்.” என ஜி.எஸ்.டி விடுவித்ததன் பின்னணியை விவரித்தவர் தி.மு.க அரசுமீது சில விமர்சனங்களையும் முன் வைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், வழக்கறிஞர் கண்ணதாசனிடம் பேசினோம். “நிச்சயமாகத் தலைவர் ஸ்டாலினின் பேச்சுக்குக் கிடைத்த பலன்தான். இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் இருவரும் அவர்கள் ஆட்சியிலிருந்தபோது மென்மையாக அழுத்தம் கொடுத்தார்கள், அழுது பார்த்தார்கள், அழுது பார்த்தார்கள். ஆனால், ஒன்றிய அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இப்போது பிரதமர் மோடியை மேடையில் வைத்துக்கொண்டு திராவிடம் என்றால் என்ன, அந்த மாடலால் தமிழ்நாடு எந்தளவு வளர்ந்துள்ளது என்று வகுப்பெடுத்ததோடு நமக்குத் தரவேண்டிய நிலுவைத் தொகை குறித்தும் விவரமாக எடுத்துக் கூறினார். நெஞ்சுரத்தோடு முதல்வர் பேசியது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதையடுத்துதான் நமக்கான நிலுவைத் தொகையை மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்குமான ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு விடுவித்திருக்கிறது. காக்கை உட்கார பனம்பழம் விழுந்ததோ இல்லையோ மாநிலங்களுக்கான நன்மை நடந்ததா இல்லையா என்பதுதான் நாம் பார்க்க வேண்டியது. முதல்வர் வைத்தது நியாயமான கோரிக்கை. அதையொட்டி நமக்குக் கிடைக்க வேண்டிய உரிமை கிடைத்ததா இல்லையா என்பதைத்தான் பார்க்க வேண்டும்.

கண்ணதாசன்
கண்ணதாசன்

மலிவான அரசியல் செய்பவர்களுக்கு வேண்டுமானால் இது ஓர் அரசியல் ஸ்டண்ட் எனத் தோன்றும். ஆனால், தி.மு.க-வுக்கு அப்படிச் செய்ய வேண்டிய தேவை இல்லை. உரிமைக் குரல் எழுப்பினோம். அதற்கான பலன் கிடைத்திருக்கிறது. அந்தவகையில் அனைவருக்கும் மகிழ்ச்சியானது செய்திதான் இது.” என விளக்கமளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism