Published:Updated:

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஸ்டாலின்! -`திடீர்' விசிட்டின் பின்னணி

அண்ணா நூற்றாண்டு நூலகம்

நூலகம் திறக்கப்பட்ட தினத்தில் அப்போதயை முதல்வர் கருணாநியைக் கௌரவிக்கும் வகையில், அவருக்கு மட்டும் உறுப்பினர் கார்டு வழங்கப்பட்டது.

Published:Updated:

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஸ்டாலின்! -`திடீர்' விசிட்டின் பின்னணி

நூலகம் திறக்கப்பட்ட தினத்தில் அப்போதயை முதல்வர் கருணாநியைக் கௌரவிக்கும் வகையில், அவருக்கு மட்டும் உறுப்பினர் கார்டு வழங்கப்பட்டது.

அண்ணா நூற்றாண்டு நூலகம்

அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்னையி்ன் அடையாளங்களில் ஒன்று. கடந்த 2010-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் இந்த நூலகம் திறக்கப்பட்டது. சுமார் 178 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்தியாவின் மிகப் பெரிய நூலகத்தை அ.தி.மு.க அரசு முறையாகப் பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

கோட்டூர்புரத்தில் 7 மாடிக் கட்டடத்தில் இயங்கிவரும் இந்த நூலகம் டிஜிட்டல் நூலகம் ஆகும். வழக்கமாக, நூலகங்களில் உறுப்பினர் சேர்க்கை உண்டு. குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாகச் செலுத்தி உறுப்பினராகி, தேவையான புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்கும் வசதி மற்ற நூலகங்களில் இருக்கிறது. ஆனால், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இதுவரை உறுப்பினர் சேர்க்கை நடந்தது கிடையாது. நூலகம் திறக்கப்பட்ட தினத்தில் அப்போதைய முதல்வர் கருணாநியைக் கௌரவிக்கும் வகையில், அவருக்கு மட்டும் உறுப்பினர் கார்டு வழங்கப்பட்டது. நூலகத்துறை இயக்குநர் அறிவொளி, கருணாநிதிக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

நூலகத்தில் ஸ்டாலின்
நூலகத்தில் ஸ்டாலின்

அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டு 9 ஆண்டுகளுக்குப் பிறகு, உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆண்டுச் சந்தா பெறுவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதனால், விரைவில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டிலேயே பெரிய நூலகம் என்பதால், ஆயிரக்கணக்கான மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், இளைஞர்கள், இலக்கியவாதிகள் ஆகியோர் உறுப்பினராகச் சேர ஆர்வம் காட்டுவார்கள். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினர் சேர்க்கை குறித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது, தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

இதையடுத்து, தி.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசா, முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் ஆகியோருடன் தன் தந்தை பார்த்துப் பார்த்து கட்டிய அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு இன்று ஸ்டாலின் வருகை தந்தார். நூலகத்தின் பல தளங்களைச் சுற்றிப் பார்த்த ஸ்டாலின், சிறிது நேரம் தந்தையின் நினைவலைகளில் மூழ்கினார். இந்த நூலகத்தின் கட்டுமானப் பணிகளின்போது, கருணாநிதியின் அறிவுறுத்தல்களையும் அருகில் இருந்தோரிடம் ஸ்டாலின் பகிர்ந்துகொண்டதாகத் தெரிகிறது.

அண்ணா நூற்றாண்டு நூலகம் திறப்பு விழாவில் கருணாநிதியுடன் ஸ்டாலின் பங்கேற்றார். அதன்பிறகு, ஸ்டாலின் அந்த நூலகத்துக்குச் சென்றதே கிடையாது. தற்போதுதான் முதன்முறையாக அங்கு சென்றுள்ளார். தன் தந்தை கருணாநிதிக்கு முதல் உறுப்பினர் கார்டு வழங்கப்பட்டதுபோல அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தன்னையும் உறுப்பினராகச் சேர்க்க வேண்டுமென்பது ஸ்டாலினின் விருப்பமாக இருந்தது. அதன்படி, நூலகத்தில் உறுப்பினராகவும் தன்னை இணைத்துக் கொண்டார்.

கையொப்பமிடும் ஸ்டாலின்
கையொப்பமிடும் ஸ்டாலின்

இதுவரை, அண்ணா நூலக ஊழியர்களுக்குத் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான எந்தச் சலுகைகளும் வழங்கப்பட்டதில்லை. ஊழியர்களுக்கு முறையாக விடுப்பு விதிமுறைகள் அமல்படுத்தாமல் முறைகேடுகள் நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஊழியர்களுக்கிடையே பாகுபாடு ஏற்படுத்தும் வகையில், பதவிவாரியாக வருகைப் பதிவேடு பராமரித்தல் போன்ற குளறுபடிகளும் அரங்கேறி வருகின்றன. நூலகத்தில் கழிவறைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை எனவும் சுத்திகரிக்கப்படாத குடிநீர் வைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தப் புகார்கள் அனைத்தும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. `விரைவில் நூலகத்தில் உள்ள குறைபாடுகள் களையப்படும் என எதிர்பார்க்கிறோம்' என நம்பிக்கையோடு சொல்கின்றனர் நூலக ஊழியர்கள்.