Election bannerElection banner
Published:Updated:

`வார்ரூம்க்கு வந்த புகார்கள்’.. ஐ-பேக் அலுவலகத்துக்கு அதிரடி விசிட்! - ஸ்டாலின் வந்த காரணம்?

ஐ-பேக் அலுவலகத்தில் ஸ்டாலின்
ஐ-பேக் அலுவலகத்தில் ஸ்டாலின்

ஐபேக் அலுவலகத்திற்கு ஸ்டாலின் வரப்போகும் விவரம் பிரசாந்த கிஷோர் உள்ளிட்ட சிலரை தவிற அங்கு பணியாற்றும் பலருக்கு தெரியாது. எனவே ஸ்டாலின் என்ட்ரி கொடுத்ததும் அங்கிருந்த ஊழியர்கள் உற்சாகமாக அவரை வரவேற்றனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் வாக்குபதிவு நடந்துக்கொண்டிருந்த போது தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஐ-பேக் அலுவலகத்திற்கு விசிட் அடித்த வீடியோ சமூக வளைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவின் பின்னணி குறித்து தி.மு.க தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் நாம் விசாரித்தோம்.

ஐ.பேக் நிறுவனத்தின் அலுவலகம் தேனாம்பேட்டையில் செயல்படுகிறது. இந்த அலுவலகத்திற்கு ஏற்கனவே சில முறை ஸ்டாலின் வந்திருக்கிறார். ஆனால், தேர்தல் நாள் அன்று அவரது விசிட் பரபரப்பாக பேசப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களுக்கு சட்டரீதியான உதவிகளை மேற்கொள்ள அண்ணா அறிவாலயத்தில் சட்டநிபுணர்களை கொண்ட வார்ரூம் செயல்படுகிறது.

ஐ-பேக் அலுவலகத்தில் ஸ்டாலின்
ஐ-பேக் அலுவலகத்தில் ஸ்டாலின்

இந்த வார்ரூமின் மற்றொரு டீம் ஐ-பேக் அலுவலகத்தில் அவர்களுடன் இணைந்தும் செயல்படுகிறது. தேர்தல் நடந்துக்கொண்டிருந்த போது தமிழகம் முழுவதிலிருந்து பல புகார்கள் வார்ரூம்க்கு வந்துக்கொண்டிருந்தது. அது குறித்த தகவல் ஸ்டாலின் கவனத்துக்கு சென்றதும், அறிவாலயத்திலிருந்து நேரடியாக ஐ-பேக் அலுவலகத்திற்கு சென்றார். அவர் செல்லும் போது சபரீசனும் உடன் சென்றார்.

ஐபேக் அலுவலகத்திற்கு ஸ்டாலின் வரப்போகும் விவரம் பிரசாந்த கிஷோர் உள்ளிட்ட சிலரை தவிற அங்கு பணியாற்றும் பலருக்கு தெரியாது. எனவே ஸ்டாலின் என்ட்ரி கொடுத்ததும் அங்கிருந்த ஊழியர்கள் உற்சாகமாக அவரை வரவேற்றனர். பிரசாந்த் கிஷோர், சபரீசன், ஸ்டாலின் ஆகியோர் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். அதன்பிறகு பிரசாந்த் கிஷோர் அறையில் ஸ்டாலின், சபரீசன் உள்ளிட்ட சிலர் மட்டும் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக தனியாக ஆலோசனை நடத்தினார்கள். தமிழகத்தில் தி.மு.க கூட்டணிக்கு 200 தொகுதிகள் வரை வர வாய்ப்புள்ளது என்கிற முதல்கட்ட தகவலையும் கிஷோர் டீம் ஸ்டாலினிடம் சொல்லியுள்ளது.

ஐ-பேக் அலுவலகத்தில் ஸ்டாலின்
ஐ-பேக் அலுவலகத்தில் ஸ்டாலின்

குறிப்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பதிவான வாக்குபதிவுகளை அடிப்படையாக வைத்து சில தரவுகளையும் அப்போது ஸ்டாலினிடம் விளக்கியுள்ளார் கிஷோர். அதன்பிறகு ஸ்டாலினுடன் வார் ரூமில் பணியாற்றிய வழக்கறிஞர்கள் குழுவும் குரூப் போட்டோ எடுத்தனர்.

இந்த நிகழ்வுகள் முடிந்து ஸ்டாலின் கிளம்பும் போது ஐ-பேக் நிறுவனத்தில் பணியாற்றி பல ஊழியர்கள் ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னதும், ஸ்டாலினும் மறுக்காமல் அவர்களுடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டாராம்.

ஐபேக் கொடுத்த ரிப்போர்ட்... உற்சாகத்தில் திமுக! - அதிமுக நிலை என்ன?
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு