Published:Updated:

நெல்லை மாநகர மேயர் வேட்பாளர் சரவணன்; துணை மேயர் தேர்வில் கடைசி நிமிட ட்விஸ்ட்! - பின்னணி என்ன?!

நெல்லை மாநகராட்சி

நெல்லை மாநகராட்சி மேயர் வேட்பாளராக பி.எம்.சரவணன், துணை மேயராக கே.ராஜூ ஆகியோரை தி.மு.க தலைமை அறிவித்துள்ளது.

நெல்லை மாநகர மேயர் வேட்பாளர் சரவணன்; துணை மேயர் தேர்வில் கடைசி நிமிட ட்விஸ்ட்! - பின்னணி என்ன?!

நெல்லை மாநகராட்சி மேயர் வேட்பாளராக பி.எம்.சரவணன், துணை மேயராக கே.ராஜூ ஆகியோரை தி.மு.க தலைமை அறிவித்துள்ளது.

Published:Updated:
நெல்லை மாநகராட்சி

நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இணைந்து 51 வார்டுகளைக் கைப்பற்றின. அ.தி.மு.க-வுக்கு நான்கு இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. 43 இடங்களில் போட்டியிட்ட பாரதிய ஜனதாவுக்கு ஓர் இடம்கூட கிடைக்கவில்லை.

மேயர், துணை மேயர் வேட்பாளர்கள்
மேயர், துணை மேயர் வேட்பாளர்கள்

நெல்லை மாநகராட்சியில் வெற்றிபெற்ற தி.மு.க கவுன்சிலர்கள் கேரளாவுக்குச் சுற்றுப்பயணம் அழைத்துச் செல்லப்பட்டனர். மேயர் வேட்பாளராக யார் வருவார்கள் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துவந்த நிலையில், இன்று கட்சித் தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேயர் வேட்பாளராக பி.எம்.சரவணனும், துணை மேயர் வேட்பாளராக கே.ராஜூவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பி.எம்.சரவணன், தி.மு.க-வில் நெல்லை மத்திய மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். ஃபைனான்ஸ் தொழில் செய்துவரும் அவர், பி.ஏ பட்டதாரி. நெல்லை மாநகரில் பெரும்பான்மையாக வசிக்கும் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மேயர் வேட்பாளர் பி.எம்.சரவணன்
மேயர் வேட்பாளர் பி.எம்.சரவணன்

நெல்லை மத்திய மாவட்டச் செயலாளரான அப்துல் வஹாப்புக்கு நெருக்கமானவர் என்பதால் அவர் மேயர் வேட்பாளராக பி.எம்.சரவணன் பெயரைப் பரிந்துரை செய்ததால் கட்சித் தலைமை அவருக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்துள்ளது.

துணை மேயர் வேட்பாளராகக் கட்சித் தலைமையால் கே.ராஜூ அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க-வின் தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ள அவர் ரியல் எஸ்டேட், குவாரி தொழில் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுவருகிறார். வசதி படைத்த அவரது பெயர் தொடக்கத்திலிருந்தே முன்னிலையில் இருந்தபோதிலும், ஒரு கட்டத்தில் அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டது.

துணை மேயர் வேட்பாளர் கே.ராஜூ
துணை மேயர் வேட்பாளர் கே.ராஜூ

இருப்பினும், துணை மேயருக்கான போட்டியில் இளைஞரணி நிர்வாகியான கருப்பசாமி கோட்டையப்பன் என்பவரின் பெயரை அறிவிக்கும் சூழல் ஏற்பட்டது. எனினும் கே.ராஜூ-வுக்குக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் சிபாரிசு செய்ததால், அவசரமாக கே.ராஜூ பெயரை மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் பரிந்துரைத்தார். அதை ஏற்று கே.ராஜூவுக்கு துணை மேயருக்கான வேட்பாளராகும் வாய்ப்பு ஏற்பட்டது.

மேயர், துணை மேயர் வேட்பாளர்களை கட்சித் தலைமை அறிவித்துள்ளதால் நெல்லை மாநகராட்சியில் போட்டி ஏற்படும் வாய்ப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.