Published:Updated:

பொங்கல் பரிசுப் பொருள்களுக்கு பதில் 1,000 ரூபாய்! - திமுக அரசின் முடிவுக்குக் காரணமென்ன?

முதல்வர் ஸ்டாலின்

``மக்களின் கோரிக்கையின்படி, பரிசில் கரும்பை சேர்த்துக் கொள்வதோடு, எதிர்க்கட்சியாக இருக்கும்போது, எங்களிடம் கேட்டபடி, 5000 ரூபாய் ரொக்கத்தை கொடுக்க வேண்டும்." - எடப்பாடி பழனிசாமி

பொங்கல் பரிசுப் பொருள்களுக்கு பதில் 1,000 ரூபாய்! - திமுக அரசின் முடிவுக்குக் காரணமென்ன?

``மக்களின் கோரிக்கையின்படி, பரிசில் கரும்பை சேர்த்துக் கொள்வதோடு, எதிர்க்கட்சியாக இருக்கும்போது, எங்களிடம் கேட்டபடி, 5000 ரூபாய் ரொக்கத்தை கொடுக்க வேண்டும்." - எடப்பாடி பழனிசாமி

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

பொங்கல் திருநாளை முன்னிட்டு, 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1,000 ரொக்கம் வரும் ஜனவரி 2-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான செலவு 2,356.67 கோடி என அரசு தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. அரசின் இந்த முடிவுக்கு 2022-ம் ஆண்டு பொங்கல் திருநாளுக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகுப்பு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

கலப்பட பொங்கல் பரிசு
கலப்பட பொங்கல் பரிசு

இது குறித்து மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ``2022-ம் ஆண்டு பொங்கல் திருநாளுக்கு அரசு சார்பில் 21 பொருள்கள் அடங்கிய சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. அப்போது தரமற்ற, கலப்படம் உள்ள பொருள்கள் வழங்கப்பட்டதாக புகார்கள் வரிசைக்கட்டின.

10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி பொறுப்பேற்ற தி.மு.க-வுக்கு இது மிகப்பெரிய அவப்பெயரானது. இதையடுத்து, `தரமற்ற பொருள்களை வழங்கிய நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்’ என்று அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். இதற்கிடையே, 2023-ம் ஆண்டு பொங்கல் திருநாளுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பு வேண்டாம் என  முதல்வர் கருதினார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

மேலும், பொதுமக்களும் பொருளுக்கு பதில், ரொக்கமாக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறார்கள். இது குறித்து முதல்வரும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். அதன்படிதான், பரிசு தொகுப்புக்கு பதிலாக ரொக்கப்பணம் வழங்க முடிவு செய்தார் முதல்வர். அப்படி கொடுத்தால், எவ்வளவு கொடுக்கலாம் என்பது குறித்து நிதித்துறையிடன் தொடர் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

பொங்கல் திருநாள் குறித்து இறுதி முடிவு எடுக்க, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் டிச.19-ம் தேதி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதில், வேட்டி, சேலை, அரிசி, சர்க்கரையுடன், 1,000 ரூபாய் ரொக்கம் வழங்க இறுதி முடிவானது" என்றனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதே நேரத்தில் பொங்கலுக்கு வழக்கமாக வழங்கப்படும் கரும்பு ஏன் வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "அரசின் அறிவிப்பில் கரும்பு இடம் பெறாதது, கரும்பு சாகுபடி செய்திருக்கும் விவசாயிகள் தலையில் இடி விழுந்தது போல் உள்ளது. பொதுமக்களிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த அறிவிப்பு. எனவே, மக்கள் கோரிக்கையின்படி, பொங்கல் பரிசில் கரும்பை சேர்த்துக் கொள்வதோடு, எதிர்க்கட்சியாக இருக்கும்போது, எங்களிடம் கேட்டபடி, 5,000 ரூபாய் ரொக்கத்தை கொடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருக்கிறது.