Published:Updated:

`சென்னைக்கு ரிப்பன் மாளிகை; ஆவடிக்கு காமராஜர் மாளிகை!' - அமைச்சரிடம் கோரிக்கை

அமைச்சரிடம் ஆவடி மாநகராட்சி தொடர்பான கோரிக்கை
அமைச்சரிடம் ஆவடி மாநகராட்சி தொடர்பான கோரிக்கை

ஆவடி மாநகராட்சிக்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டுமென்று அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் அலுவலகமாக ரிப்பன் மாளிகை பெயர் பெற்றிருப்பது போல, ஆவடி மாநகராட்சியின் தலைமை அலுவலகத்துக்கு காமராஜர் மாளிகை எனப் பெயரிட வேண்டுமென்று தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சரிடம் கோரிக்கை
அமைச்சரிடம் கோரிக்கை

இதற்கான கோரிக்கையை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நாடார் அமைப்புகளின் பிரதிநிதிகள் அளித்துள்ளனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய தட்சிண மாற நாடார் சங்கத்தின் தலைவர் தங்கம் ஆர்.செல்வராஜ், ``நகராட்சியாக ஆவடி இருந்தபோது, அதன் அலுவலகக் கட்டடம் பெருந்தலைவர் காமராஜரின் பெயரில்தான் செயல்பட்டது. பின்னர், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு புதிய கட்டடம் கட்டப்பட்ட பின்னர், இதுநாள் வரை பெயர் வைக்கவில்லை. ஆவடி மாநகராட்சி கட்டடத்துக்குக் காமராஜர் பெயரைச் சூட்ட வேண்டுமென்று கோரியுள்ளோம்.

`செல்போனில் ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்தார்!' -ஆவடி ரவுடிக்கு நண்பர்களால் நேர்ந்த கொடூரம்
அமைச்சரிடம் கோரிக்கை
அமைச்சரிடம் கோரிக்கை

அதுபோல தூத்துக்குடி மாநகராட்சி கட்டடத்துக்கு பா.சிவந்தி ஆதித்தனார் பெயரையும் அவரது திருவுருவச் சிலையை சென்னையில் நிறுவ வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளோம்” என்றார். கோரிக்கை வைத்தவர்களிடம் பாசிட்டிவ்வாகப் பதிலளித்துள்ள அமைச்சர் வேலுமணி, விரைவில் நல்ல செய்தி வரும் என்று நம்பிக்கையூட்டி அனுப்பினாராம்.

அடுத்த கட்டுரைக்கு