Published:Updated:

``மதம், கலாசாரம் குறித்து கருத்து தெரிவிப்பதைத் தவிருங்கள்!" - பாஜக-வினருக்கு ஜே.பி.நட்டா அறிவுரை

ஜே.பி.நட்டா

``இரண்டு மதங்களுக்கு இடையே சர்ச்சைகளை வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை அனைவரும் உணர வேண்டும்." - ஜே.பி.நட்டா

பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, நேற்று தன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகளுடன் காணொளிக் காட்சி வாயிலாக உரையாடினார். அப்போது பேசிய அவர், ``பா.ஜ.க உறுப்பினர்கள் இனம், மதம், கலாசார பிரச்னைகளில் தங்களை முன்னிருத்திக்கொள்வதையும், அது சார்ந்து கருத்துகளைத் தெரிவிப்பதையும் தவிர்க்க வேண்டும். மேலும், வகுப்புவாத அடிப்படையிலான சர்ச்சைகளிலிருந்து விலகியிருக்க வேண்டும்.

பாஜக
பாஜக

குறிப்பாக இரண்டு மதங்களுக்கு இடையே சர்ச்சைகளை வளர்ப்பதைத் தவிர்க்கவேண்டியதன் அவசியத்தை உணர வேண்டும். நமது பிரசாரம் பிரதமர் மோடியின் வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை மையமாகக்கொண்ட ஒரு சொற்பொழிவாக இருக்க வேண்டும்" என பா.ஜ.க-வினரை அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.