Published:Updated:

``ஓ.பி.எஸ் உண்மையைத் தான் சொல்லியிருக்கிறார்" - சசிகலா

சசிகலா, ஓ.பி.எஸ்

ஓ.பி.எஸ்-யிடம் நேற்றுடன் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ``ஓ.பி.எஸ் உண்மையைத் தான் சொல்லியிருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.

Published:Updated:

``ஓ.பி.எஸ் உண்மையைத் தான் சொல்லியிருக்கிறார்" - சசிகலா

ஓ.பி.எஸ்-யிடம் நேற்றுடன் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ``ஓ.பி.எஸ் உண்மையைத் தான் சொல்லியிருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.

சசிகலா, ஓ.பி.எஸ்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் வேகப்படுத்தி இருக்கிறது. முதற்கட்டமாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களிடம் விசாரணையை மேற்கொண்ட ஆறுமுகசாமி ஆணையம், இரண்டாம் கட்டமாக இளவரசியிடம் நேற்று முந்தினமும் ஓ.பி.எஸ்-யிடம் நேற்று முன்தினமும் நேற்றும் விசாரணை நடத்தியது. அதில், சசிகலா தரப்பு வழக்கறிஞர் கேட்ட அனைத்து குறுக்கு விசாரணை கேள்விகளுக்கும் ஓ.பி.எஸ் பதிலளித்தார். இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்த விசாரணையில், ``ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சையளித்தார்கள் என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இதில், சசிகலா எந்த சதித்திட்டமும் தீட்டவில்லை. சசிகலா மீது தனிப்பட்ட முறையில், எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு" என ஓ.பி.எஸ் கருத்து தெரிவித்திருந்தார்.

ஓ.பி.எஸ், சசிகலா
ஓ.பி.எஸ், சசிகலா

விசாரணை முடிவடைந்த பின் பத்திரிகையாளர்களிடத்திலும், சசிகலாவை சின்னம்மா என குறிப்பிட்டு வெளிப்படையாக இதே கருத்தை ஓ.பி.எஸ் கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த சசிகலாவிடம், விசாரணை ஆணையத்தில் ஓ.பி.எஸ் கூறியது உண்மையா, சசிகலா மீது தனிப்பட்ட முறையில், தனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு" என வெளிப்படையாக ஓ.பி.எஸ் கூறியது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த சசிகலா, ``உண்மையை தான் சொல்லிருக்கிறாரு. இந்த கமிஷன் ஆரம்பிச்சப்ப கூட நானும் இதுல உண்மை என்னனு தெரியணும், பொதுமக்களுக்கும் இது தெரியவேண்டிய விஷயம், அதனால் அது நடக்கிறது நல்லதுன்னு ஆரம்பத்தில இருந்து நான் சொல்லிக்கிட்டு இருந்தேன். அது இப்போ ஒரு முடிவுக்கு வந்திருக்கு" எனக் கூறினார்.