Election bannerElection banner
Published:Updated:

சசிகலா : திறந்த சிறைக்கதவுகள்... சந்திக்க புறப்பட்ட உறவுகள்!

சசிகலா
சசிகலா ( எம். விஜயகுமார் )

சசிலாவின் விடுதலைக்கான காலம் நெருங்கிவருவதால் அவரைச் சந்திக்க அவரது உறவுகள் தொடர்ந்து முயன்றுவந்தனர்.

சிறையிலுள்ள சசிகலாவை, கொரோனாநோய்த் தொற்றுப் பரவல் காரணமாக நிலவிய ஊரடங்குக் கட்டுப்பாடுகளால் பல மாதங்களாக அவரது உறவுகள் சந்திக்காமல் இருந்தனர். இந்தநிலையில் சிறைத்துறையினர் சசிகலாவைச் சந்திக்க அனுமதிக் கொடுத்திருப்பதால் உறவினர்கள் அவரைச் சந்திக்கவிருக்கிறார்கள்.

சசிகலா, இளவரசி
சசிகலா, இளவரசி

சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. அவருடன் அவருடைய அண்ணி இளவரசி, சுதாகரன் உள்ளிட்டவர்களும் சிறையில் அடைக்கபட்டிருக்கிறார்கள். சசிகலாவின் விடுதலை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டதற்கு 2021-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 27-ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று சிறைத்துறை தெரிவித்தது. ஆனால், இந்தத் தேதிக்கு முன்பாக எப்போது வேண்டுமானாலும் சசிகலா விடுதலையாகலாம் என்கிற செய்தியும் இருக்கிறது. இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் சசிகலாவை அவர் தரப்பினர் சிறையில் சந்தித்துப் பேசினார்கள்.

கொரோனாநோய்த் தொற்று அச்சம் காரணமாக, சிறையில் பார்வையாளர்கள் சந்திப்பை சிறை நிர்வாகம் நிறுத்திவைத்திருந்தது. இதனால் அவருடைய வழக்கறிஞர், உறவினர் என யாரும் சசிகலாவைச் சந்திக்க முடியாத நிலை இருந்தது. கடித வழியாக மட்டுமே சசிகலாவைத் தொடர்புகொண்டுவந்தனர். சசிலாவின் விடுதலைக்கான காலம் நெருங்கிவருவதால் அவரைச் சந்திக்க அவரின் உறவுகள் தொடர்ந்து முயன்றுவந்தனர். இந்தநிலையில் மத்திய மற்றும் கர்நாடக மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இதனால் சிறைவாசிகளை அவரது உறவுகள் சந்திப்பதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தினகரன், சசிகலா
தினகரன், சசிகலா

இதனால் சசிகலாவையும் இளவரசியையும் சந்திக்க அவருடைய உறவினர்கள் சார்பில் மனு அளித்திருக்கிறார்கள். இதையெடுத்து 13-ம் தேதி அன்று சசிகலாவைச் சந்திக்க சிறை நிர்வாகம் அனுமதியளித்திருக்கிறது. ஆனால், நேரடியாகச் சந்தித்து பேசுவது உகந்ததாக இருக்காது என்று சிறை நிர்வாகம் கருதியிருப்பதால், சிறைக்குள் வேறு வீடியோ வழியாகப் பேசவைக்க முடிவாகியிருக்கிறது. சசிகலாவைச் சந்திப்பதற்காக வியாழன் அன்றே தினகரன் பெங்களூர் கிளம்பிச் சென்றிருக்கிறார்.

`சசிகலா விடுதலையில் சிறப்புச் சலுகை கிடையாது!’ - கர்நாடக உள்துறை அமைச்சர்
பெங்களூரு சிறைச்சாலை
பெங்களூரு சிறைச்சாலை

அதேபோல் இளவரசி பெயரிலும் சந்திக்க மனு போட்டிருப்பதால் சசிகலா உறவுகள் அனைவருமே அவரைச் சந்திக்க பெங்களூரு புறப்பட்டிருக்கிறார்கள். சிறையில் யாரை சசிகலா சந்திக்க விரும்புகிறாரோ அவரை மட்டும் சந்திக்க சிறை நிர்வாகம் ஒப்புக்கொள்ளும் என்கிறார்கள். இந்தச் சந்திப்பு முடிந்த பிறகே சசிகலா விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்துத் தெரியவரும்.

சசிகலா: `தண்டனைக் காலத்துக்கு முன்பே விடுதலை ஆவாரா?!’ - பெங்களூரு சிறைத்துறை சொல்வது என்ன?
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு