Published:Updated:

``மத அடிப்படையிலான மக்கள்தொகை சமநிலை மிக முக்கியம்!" - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

``மக்கள்தொகைக் கட்டுப்பாடு மற்றும் மத அடிப்படையிலான மக்கள்தொகை சமநிலை என்பது இனி புறக்கணிக்கப்பட முடியாத ஒரு முக்கியமான விஷயமாகும்." - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

``மத அடிப்படையிலான மக்கள்தொகை சமநிலை மிக முக்கியம்!" - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

``மக்கள்தொகைக் கட்டுப்பாடு மற்றும் மத அடிப்படையிலான மக்கள்தொகை சமநிலை என்பது இனி புறக்கணிக்கப்பட முடியாத ஒரு முக்கியமான விஷயமாகும்." - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

Published:Updated:
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

நாளுக்கு நாள் பெருகிவரும் மக்கள்தொகை குறித்து, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐ.நா வெளியிட்டிருந்த அறிக்கையில், ``தற்போது உலக மக்கள்தொகையில் முதலிடத்திலிருக்கும் சீனாவை, 2023-ம் ஆண்டுக்குள் இந்தியா பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடிக்கும்" என்று கூறப்பட்டிருந்தது.

மக்கள்தொகை
மக்கள்தொகை

இந்த அறிக்கை வெளியான பிறகு, இந்திய அரசியல் தலைவர்கள் பலரும், இந்தியாவில் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று கூறிவந்தனர். இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், மக்கள்தொகை குறித்தும், பெண்களுக்கான சம உரிமை குறித்தும் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

ஆர்.எஸ்.எஸ் நடத்திய தசரா நிகழ்ச்சியில் இது குறித்துப் பேசிய மோகன் பகவத், ``மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு, மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது. மக்கள்தொகைக் கட்டுப்பாடு மற்றும் மத அடிப்படையிலான மக்கள்தொகை சமநிலை என்பது இனி புறக்கணிக்கப்பட முடியாத ஒரு முக்கியமான விஷயமாகும். எனவே மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக்கு ஒரு விரிவான கொள்கை கொண்டு வரப்பட வேண்டும். மேலும் அது அனைவருக்கும் சமமாகப் பொருந்த வேண்டும். அதோடு மக்கள்தொகைக்கு வளங்கள் தேவை. அது வளங்களை உருவாக்காமல் வளர்ந்தால், சுமையாக மாறிவிடும். அதுமட்டுமல்லாமல், மக்கள்தொகையை ஒரு சொத்தாகக் கருதப்படும் மற்றொரு பார்வையும் இருக்கிறது. எனவே, இந்த இரண்டு அம்சங்களையும் மனதில் வைத்து மக்கள்தொகைக் கொள்கையில் நாம் பணியாற்ற வேண்டும்" என்று கூறினார்.

மோகன் பகவத்
மோகன் பகவத்

தொடர்ந்து, பெண்களுக்கான சம உரிமை குறித்துப் பேசிய மோகன் பகவத், ``பெண்களைத் தாயாகக் கருதுவது நல்லது. ஆனால், அப்படிப்பட்டவர்களை மூடிய கதவுகளுக்குள் கட்டுப்படுத்துவதென்பது நல்லதல்ல. எல்லா இடங்களிலும் முடிவெடுக்கப் பெண்களுக்குச் சம உரிமை வழங்கப்பட வேண்டும். தாய் சக்தியால் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் ஆண்களால் செய்ய முடியாது. எனவே, அவர்களுக்கு அறிவூட்டுவதும், அதிகாரமளிப்பதும், வேலை செய்வதற்கான சுதந்திரத்தை வழங்குவதும், அதற்கான பணிகளில் சம பங்களிப்பை வழங்குவதும் மிக முக்கியம்" என்று தெரிவித்தார்.