Published:Updated:

ஒரு டன்; புத்தர், அம்பேத்கர் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம்- தடுத்து நிறுத்தப்பட்ட பிரமாண்ட பாதயாத்திரை

பிரமாண்ட பாதயாத்திரை ( ட்விட்டர் )

நாணயத்தின் இருபுறமும் அம்பேத்கர், புத்தரின் படங்களுடன் இந்தி, ஆங்கிலத்தில் - ``1947 தீண்டாமை இல்லாத இந்தியா கனவு 2047-ல் நனவாகுமா?" என்ற வாசகமும்,15 இந்திய மொழிகளில் `தீண்டாமை’ என்ற வார்த்தையும் எழுதப்பட்டிருக்கின்றன.

ஒரு டன்; புத்தர், அம்பேத்கர் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம்- தடுத்து நிறுத்தப்பட்ட பிரமாண்ட பாதயாத்திரை

நாணயத்தின் இருபுறமும் அம்பேத்கர், புத்தரின் படங்களுடன் இந்தி, ஆங்கிலத்தில் - ``1947 தீண்டாமை இல்லாத இந்தியா கனவு 2047-ல் நனவாகுமா?" என்ற வாசகமும்,15 இந்திய மொழிகளில் `தீண்டாமை’ என்ற வார்த்தையும் எழுதப்பட்டிருக்கின்றன.

Published:Updated:
பிரமாண்ட பாதயாத்திரை ( ட்விட்டர் )

குஜராத் மாநிலம், நானி தேவ்டி ​​கிராமத்திலிருந்து பிரபல பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமைகள் குழுவான நவ்சர்ஜன் அறக்கட்டளை, ``இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் தீண்டாமை நிலவுகிறது" என்ற செய்தியுடன் 1,000 கிலோ பித்தளை நாணயத்தை வடிவமைத்திருக்கிறது. இந்த நாணயத்தைப் புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வழங்க, அந்தக் குழு ஆகஸ்ட் 1-ம் தேதி அகமதாபாத்திலிருந்து டெல்லிக்கு பாதயாத்திரையைத் தொடங்கியது. இதில் 14 மாநிலங்களிலிருந்து 104 பெண்கள் உட்பட 375 பேர் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், பாதயாத்திரையாக வந்தவர்களை டெல்லிக்குள் நுழைய காவல்துறை அனுமதிக்கவில்லை.

பீம் ருடான் நாணயம்
பீம் ருடான் நாணயம்
ட்விட்டர்

இந்தப் பாதயாத்திரை தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய நவ்சர்ஜன் அறக்கட்டளையின் மார்ட்டின் மக்வான், ``நாங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சஜாபூர் எல்லையிலிருந்து ஹரியானாவுக்குள் நுழைந்து அங்கிருந்து டெல்லிக்குள் நுழையவிருந்தோம். ஆனால், ஹரியானா காவல்துறை எங்களை உள்ளே நுழையவிடாமல் தடுப்பதற்காக எல்லையில் தண்ணீர் பீரங்கி மற்றும் தடுப்புகளுடன் பெரும் படையை நிறுத்தியிருந்தது. மேலும், எங்களை ஹரியானா, டெல்லிக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற தெளிவான அறிவுறுத்தலுடன் உள்துறை அமைச்சகத்தின் கடிதத்தை அவர்கள் காட்டினார்கள். அதனால், ஒரு நாள் அந்த இடத்திலேயே சாலையோரத்தில் இரவைக் கழித்துவிட்டு திங்கள்கிழமை இரவு குஜராத்துக்குப் புறப்பட்டோம்" எனத் தெரிவித்தார்.

பீம் ருடான் பாத யாத்திரை
பீம் ருடான் பாத யாத்திரை
ட்விட்டர்

இது தொடர்பாக ஹரியானா காவல்துறை தரப்பில், ``ஹரியானா அல்லது டெல்லியிலுள்ள அதிகாரிகளிடமிருந்து முறையான அனுமதியை அவர்கள் பெறவில்லை. அதனால், ஹரியானா அரசும் அவர்களுக்கு யாத்திரை நடத்த அனுமதி வழங்கவில்லை. எனவே, நாங்கள் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பீம் ருடான் நாணயம்
பீம் ருடான் நாணயம்
ட்விட்டர்

நவ்சர்ஜன் அறக்கட்டளைக் குழு, இந்த 1,000 கிலோ பித்தளை நாணயத்தை நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ரூ.20 லட்சம் பெறுமானமுள்ள பித்தளைப் பொருள்களை, ஏழை எளிய மக்களிடமிருந்து நன்கொடையாகப் பெற்று ஒடிசா, டெல்லியைச் சேர்ந்த இரண்டு கலைஞர்களால் வடிவமைத்திருக்கிறது. இந்த முயற்சிக்கு `பீம் ருடான்’ (டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் அழுகை) என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அந்த நாணயத்தின் இருபுறமும் அம்பேத்கர், புத்தரின் படங்களுடன் இந்தி, ஆங்கிலத்தில் - ``1947 தீண்டாமை இல்லாத இந்தியா கனவு 2047-ல் நனவாகுமா?" என்ற வாசகமும்,15 இந்திய மொழிகளில் தீண்டாமை என்ற வார்த்தையும் எழுதப்பட்டிருக்கிறது. அதில், தமிழிலும் `தீண்டாமை' என எழுதப்பட்டிருக்கிறது.