Published:Updated:

மதுரா கிருஷ்ண ஜென்ம பூமி... மசூதியை அகற்றக் கோரிய வழக்கில் விசாரணைக்கு அனுமதி

மதுரா - கிருஷ்ண ஜென்ம பூமி ( ட்விட்டர் )

`கிருஷ்ண ஜென்ம பூமி’ எனக் கூறப்படும் மதுராவில் உள்ள மசூதியை அகற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கு உத்தரப்பிரதேச நீதிமன்றத்தால் விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

மதுரா கிருஷ்ண ஜென்ம பூமி... மசூதியை அகற்றக் கோரிய வழக்கில் விசாரணைக்கு அனுமதி

`கிருஷ்ண ஜென்ம பூமி’ எனக் கூறப்படும் மதுராவில் உள்ள மசூதியை அகற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கு உத்தரப்பிரதேச நீதிமன்றத்தால் விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
மதுரா - கிருஷ்ண ஜென்ம பூமி ( ட்விட்டர் )

லக்னோவில் வசிக்கும் ரஞ்சனா அக்னிஹோத்ரி என்பவர் கிருஷ்ணர் பிறந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதாகக் கூறி, கத்ரா கேசவ் தேவ் கோயில் பகுதியில் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஷாஹி இத்கா மசூதியை அகற்ற வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக மனுதாரரின் வழக்கறிஞர் கோபால் கண்டேல்வால், “1669-70-ல் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில் கிருஷ்ண ஜென்ம பூமியில் ஷாஹி இத்கா மசூதி கட்டப்பட்டது.

மதுரா - கிருஷ்ண ஜென்ம பூமி
மதுரா - கிருஷ்ண ஜென்ம பூமி
ட்விட்டர்

கிருஷ்ண பகவானை வழிபடுபவர்கள் என்ற முறையில் அவருடைய சொத்துகளை மீட்டுத் தரக் கோரி வழக்கு தொடர எங்களுக்கு உரிமை உள்ளது. கிருஷ்ண ஜென்ம பூமியில் மசூதி தவறாகக் கட்டப்பட்டுள்ளது. சொத்துப் பங்கீடு தொடர்பாகப் பல ஆண்டுகளுக்கு முன்பு சமரசம் ஏற்பட்டது. ஆனால் அந்தச் சமரசம் சட்டவிரோதமானது. எனவே அந்த மசூதி இடத்தை மீட்டு பெரும்பான்மை இந்துக்கள் நம்பும் கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்டுத் தர வேண்டும் ”என்று கூறினார். இதைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதுரா - கிருஷ்ண ஜென்ம பூமி
மதுரா - கிருஷ்ண ஜென்ம பூமி
ட்விட்டர்

ஆனால், இதற்கு முன்னதாக மதுராவில் உள்ள சிவில் நீதிமன்றம், ``1991-ம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை ஏற்க முடியாது. 1992-ம் ஆண்டு இடிக்கப்பட்ட 16-ம் நூற்றாண்டின் பாபர் மசூதி சம்பந்தப்பட்ட அயோத்தி கோயில்-மசூதி வழக்கு மட்டுமே இந்த சட்டத்துக்கு விதிவிலக்காகும்.

மதுரா - கிருஷ்ண ஜென்ம பூமி
மதுரா - கிருஷ்ண ஜென்ம பூமி
ட்விட்டர்

கிருஷ்ண ஜென்ம பூமி வழக்கு பதிவு செய்யப்பட்டால், ஏராளமான பக்தர்கள் இது போன்ற பல்வேறு வழக்குகளை முன்வைத்து நீதிமன்றத்தை அணுகுவார்கள்" எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து, "கிருஷ்ணரின் பக்தர்கள் என்ற முறையில் கிருஷ்ணரின் பிறந்த இடத்தில் வணங்க எங்களுக்கு உரிமை உண்டு" என மனுதாரர்கள் தங்கள் வழக்கில் வாதிட்டுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism