Published:Updated:

அழகிரி வீட்டுப் பிறந்தநாள் விழா: அழைக்கப்படாத‌ முதல்வர் குடும்பம்... உதயநிதி – துரை தயாநிதி மோதலா?

உதயநிதி, ஸ்டாலின்

அழகிரியும் ஸ்டாலினும் ஒரே சமயத்தில் கலந்து கொண்ட இரண்டு மூன்று நிகழ்வுகளில் இருவரும் பேச வாய்ப்பிருந்தும் அந்தச் சந்தர்ப்பத்தை விரும்பாதது போல் முதல்வர் தரப்பே தவிர்த்ததாக அழகிரி குடும்பம் நினைக்கிறதாம்.

அழகிரி வீட்டுப் பிறந்தநாள் விழா: அழைக்கப்படாத‌ முதல்வர் குடும்பம்... உதயநிதி – துரை தயாநிதி மோதலா?

அழகிரியும் ஸ்டாலினும் ஒரே சமயத்தில் கலந்து கொண்ட இரண்டு மூன்று நிகழ்வுகளில் இருவரும் பேச வாய்ப்பிருந்தும் அந்தச் சந்தர்ப்பத்தை விரும்பாதது போல் முதல்வர் தரப்பே தவிர்த்ததாக அழகிரி குடும்பம் நினைக்கிறதாம்.

Published:Updated:
உதயநிதி, ஸ்டாலின்
கலைஞர் கருணாநிதி இருந்த போதே, தி.மு.க-வில் அடுத்த தலைமை யார் என்கிற சலசலப்பு எழுந்து, அது மு.க.அழகிரி – மு.க.ஸ்டாலின் இடையே மனக்கசப்பை உண்டாக்கியது. தொடர்ந்து தி.மு.க-விலிருந்து அழகிரி நீக்கி வைக்கப்பட்டதும், பிறகு சேர்க்கப்பட்டதும் கடந்த கால வரலாறு. கருணாநிதி மறைவுக்குப் பிறகு திமுக தொண்டர்களால் ஒருமனதாக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அழகிரி கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கினார். ஆனாலும் ஸ்டாலின் குறித்து அவர் பேசிய சில பேச்சுக்கள் அண்ணன் தம்பி உறவை மேலும் பாதித்தன.

இதனிடையே கடந்த சட்டசபைத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றதும், தம்பியை வாழ்த்தினார் அழகிரி. ஸ்டாலின் பதவி ஏற்பு விழாவில் அழகிரியின் மகன் துரை தயாநிதியும் கலந்து கொண்டது நினைவிருக்கலாம்.

ஆனாலும் முதல்வராகி ஓராண்டு கடந்துவிட்ட நிலையிலும் ஏனோ தெரியவில்லை அழகிரி – ஸ்டாலின் சந்திப்பு இதுவரை நடக்கவே இல்லை. இது அழகிரி குடும்பத்தினரை ரொம்பவே வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதாகச் சொல்கிறார்கள் அழகிரியின் ஆதரவாளர்கள்.

ஸ்டாலின் - அழகிரி
ஸ்டாலின் - அழகிரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதுரைக்கு வந்து போன சமயத்தில் கூட அண்ணன் வீட்டுக்குச் செல்வதைத் தவிர்த்தார் ஸ்டாலின்.

இந்நிலையில் மறைந்த முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா வரும் 28ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சிலையைத் திறந்து வைக்கும் இந்நிகழ்ச்சிக்கு மு.க.அழகிரியும் அழைக்கப்படலாம். ஒருவேளை அப்படி அழைக்கப்பட்டால் அந்த நாளில் பல வருடங்களுக்குப் பிறகு அண்ணன் – தம்பி இடையே உணர்வுபூர்வமான சந்திப்பு நிகழலாம் என செய்தி ஆரூடங்கள் வெளியாகின.

ஆனால் தற்போது அத்தகைய ஒரு சந்திப்புக்குச் சாத்தியமில்லாதது போல் தெரிகிறது என்கிறார்கள் தி.மு.க தலைமைக் குடும்பத்துக்கு நெருக்கமான சிலர்.

ஏன் என்பது குறித்து அவர்களிடமே விசாரித்தோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"அழகிரியின் மகன் துரை தயாநிதியின் இரண்டாவது குழந்தைக்கு முதல் பிறந்த நாளை, சென்னையில் வரும் 27-ம் தேதி, அதாவது கருணாநிதி சிலைத் திறப்பு விழாவுக்கு முந்தைய நாள் கொண்டாடுகிறது அழகிரி குடும்பம். கிண்டியிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெறும் இந்த விழாவுக்கு மு.க.தமிழரசு குடும்பம், கருணாநிதியின் மகள் செல்வி குடும்பம், கனிமொழி ஆகியோர் அழைக்கப்பட்டிருக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி குடும்பத்தை மட்டும் கூப்பிடலைனு சொல்றாங்க" என்கிறார்கள்.

அதாவது அழகிரியும் ஸ்டாலினும் ஒரே சமயத்தில் கலந்து கொண்ட இரண்டு மூன்று நிகழ்வுகளில் இருவரும் பேச வாய்ப்பிருந்தும் அந்தச் சந்தர்ப்பத்தை விரும்பாதது போல் முதல்வர் தரப்பே தவிர்த்ததாக அழகிரி குடும்பம் நினைக்கிறதாம். எனவேதான் இந்த நிகழ்ச்சிக்கு அவர்களை அழைக்க விரும்பவில்லை என முடிவெடுத்தாகச் சொல்கிறார்கள்.

உதயநிதி - துரை தயாநிதி
உதயநிதி - துரை தயாநிதி

அழகிரி – ஸ்டாலின் மோதல் என்பது கலைஞர் காலத்திலேயே சுமூகமாகத் தீர்க்கப்பட முடியாது போன ஒரு பிரச்னை. அதைச் சமாளித்து ஒருவழியாக ஸ்டாலின் முதல்வரானார். அந்த விழாவில் கலந்து கொண்ட அழகிரியின் மகன் துரை தயாநிதியும் உதயநிதியும் கட்டியணைத்துக் கொண்ட காட்சி, தி.மு.க தொண்டர்களின் மனதை சில நிமிடங்களாவது குளிர்ச்சியூட்டியிருக்கும்.

`ஆடு பகைன்னாலும் குட்டிகள் நல்ல உறவுல இருப்பாங்க’ என நம்பினார்கள் அந்தத் தொண்டர்கள். ஆனால் இப்போது நடப்பைவைகளைப் பார்க்கிற போது அதற்கு இப்போதைக்கு வாய்ப்பில்லையோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism