Published:Updated:

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு: குழப்பமும் விவாதமும் நீளுவது ஏன்?

இட ஒதுக்கீடு - உச்சநீதிமன்றம்
News
இட ஒதுக்கீடு - உச்சநீதிமன்றம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் குழப்பங்களும் விவாதங்களும் நீண்டு கொண்டே சென்றதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்தும் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கேள்விகள் குறித்தும் ஓர் அலசல்...

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க ஆண்டு வருமான வரம்பு 8 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது சரியானதுதான் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு அகில இந்திய அளவில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து, இதற்காகச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதாவாக நிறைவேற்றப்பட்டது. ஆண்டுக்கு 8 லட்சம் அல்லது அதற்கு குறைவான வருமானம் உள்ளவர்கள், 5 ஏக்கர் விவசாய நிலமும் 1,000 சதுர அடிக்குக் குறைவான வீடு அல்லது பிளாட்டை கொண்டவர்கள் அல்லது நகராட்சி பகுதிகளில் 100/200 சதுர அடி குடியிருப்பு இல்லாதவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் என மத்திய அரசு வரையறை செய்தது. இது பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியது. மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பிலிருந்தும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. கடந்த அக்டோபர் மாதம் வழக்கை விசாரித்த நீதிமன்றம், ``ஒவ்வொரு மாநிலத்துக்கும் நகரத்துக்கும் வாழ்வதற்கான தனிமனித வருமானம் வெவ்வேறாக இருக்கும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளைக் கேட்டுள்ளது. இதனிடையே ஓபிசி-க்கு 27 சதவிகிதமும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகிதமும் இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் அரசாணை செல்லும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் குழப்பங்களும் விவாதங்களும் நீண்டு கொண்டே சென்றதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்தும் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கேள்விகள் குறித்தும் பார்க்கலாம்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் என்ற வரையறைக்குள் யாரெல்லாம் வருவார்கள் என மத்திய அரசு அளித்த விளக்கம்தான் இந்த விவகாரத்தில் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. மேலும் இதுவரை பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதில்லை. அரசியலமைப்புச் சட்டத்திலும் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் அதை எப்படிச் செயல்படுத்த முடியும் எனவும் எதிர்ப்புகள் எழுந்தன. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் சந்திரசூட், விக்ரம் நாத், நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, ``பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு வருமான உச்ச வரம்பாக 8 லட்ச ரூபாய் என எப்படி நிர்ணயிக்கப்பட்டது? அதற்காக என்ன ஆய்வுகளை மத்திய அரசு மேற்கொண்டது?” என மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

10% இட ஒதுக்கீடு
10% இட ஒதுக்கீடு

மேலும், ``மத்திய அரசு தரப்பில் சினோ கமிட்டி அடிப்படையில் தான் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க முடிவு எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இதுவரை அந்த சினோ கமிட்டி அறிக்கையைப் பார்த்ததே இல்லையே. அந்த அறிக்கையை ஏன் தாக்கல் செய்யவில்லை?” எனவும் கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள் முதுநிலை மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வை நிறுத்திவைத்தும் உத்தரவிட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து ஆராய மத்திய அரசு அமைத்த மூன்று பேர்கொண்ட சிறப்புக் குழு அளித்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான வரையறையில் சொல்லப்பட்ட 8 லட்ச ரூபாய் என்ற நிபந்தனையில் மாற்றமில்லை எனவும் அதே வரம்பு தான் தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 8 லட்ச ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் கொண்டவர்கள் இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் பயன்பெற முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடு வைத்திருப்பது ஒருவரது பொருளாதார நிலையைச் சரியாகப் பிரதிபலிக்காது என்பதால் அந்த வரையறையை மட்டும் அகற்றவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ``மருத்துவப் படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அனுமதிக்கக் கூடியதுதான்” என்ற நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது.

மத்திய அரசை விளாசிய உச்சநீதிமன்றம்
மத்திய அரசை விளாசிய உச்சநீதிமன்றம்

உச்ச நீதிமன்றம் மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில், ஓ.பி.சி பிரிவினருக்கு 27 சதவிகிதமும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மேல் வகுப்பினருக்கு 10 சதவிகிதமும் இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதிசெய்துள்ளது. மேலும், 10 சதவிகித ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை இந்தக் கல்வியாண்டில் மட்டும் கடைப்பிடித்து கலந்தாய்வை மேற்கொள்ளலாம் என்றும், வரும் மார்ச் மாதம் இது தொடர்பான விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.