Published:Updated:

``ஸ்டான் சுவாமி மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்!" - அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்

ஸ்டான் ஸ்வாமி

ஸ்டான் சுவாமியின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

``ஸ்டான் சுவாமி மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்!" - அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்

ஸ்டான் சுவாமியின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

Published:Updated:
ஸ்டான் ஸ்வாமி

கடந்தாண்டு ஜூலை 5-ம் தேதி, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 84 வயதான பழங்குடியின உரிமை ஆர்வலர் ஸ்டான் சுவாமி மும்பையில் நீதிமன்றக் காவலின்போது உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

சிறையில் கொரோனா தொற்றால் சிரமப்பட்டுவந்த அவா், மருத்துவ உதவி கோரி மும்பை உயா் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தாா். அதனைத் தொடா்ந்து, அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இருந்த போதிலும், அந்த மருத்துவமனையில் பாதிரியாா் ஸ்டேன் சுவாமி உயிரிழந்தார். அவருக்குப் போதிய மருத்துவ உதவிகள் அரசால் வழங்கப்படவில்லை என அவருடன் இருந்த சக கைதிகளும், வழக்கறிஞர்களும் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்த நிலையில், ஸ்டேன் சுவாமியின் முதலாவது நினைவு தினத்தையொட்டி அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒரு தீா்மானம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

அமெரிக்க நாடாளுமன்றம்
அமெரிக்க நாடாளுமன்றம்

அது தொடர்பாக ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர் ஜுவான் வர்காஸ் வெபினாரில் பேசியபோது, ``பாதிரியார் ஸ்டான் காவலில் இருந்தபோது எதிர்கொண்ட துஷ்பிரயோகத்தை அறிந்து நான் திகைத்துப் போனேன். மனித உரிமைகளுக்காகப் போராடும் எவரும் இத்தகைய வன்முறையையும் புறக்கணிப்பையும் சந்திக்கக் கூடாது. பாதிரியார் ஸ்டான் சுவாமியை கௌரவப்படுத்தும் விதமாக இந்த தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த தீர்மானத்தில் அவர் மரணம் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருக்கிறது'' என்று தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!