Published:Updated:

தேனி: உத்தமபாளையம் ஒன்றியத் தலைவர்மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! -அதிமுக-வினர் 9 பேர் நீக்கம்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஒன்றியத் தலைவர் ஜான்சி வாஞ்சிநாதன்மீது திமுக, அதிகமு-வைச் சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 10 வார்டுகள் உள்ளன. கடந்த 2019 இறுதியில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக 7, திமுக 3 இடங்களில் வென்றன. அதிமுக-வைச் சேர்ந்த ஜான்சி வாஞ்சிநாதன் தலைவராகவும், மூக்கம்மாள் கெத்துராஜ் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டம்
கூட்டம்

இத்தகையை சூழலில், திங்கள்கிழமை காலை உத்தமபாளையம் ஒன்றிய அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் கெளசல்யா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றியத் தலைவர்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மறியல்
மறியல்

இதற்கிடையே, உத்தமபாளையத்தில் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக ஒன்றியத் தலைவர் ஜான்சி வாஞ்சிநாதன், தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரனைச் சந்தித்தார். அப்போது சுய அலுவல் காரணமாக, பதவியைத் தொடர முடியாத நிலை உள்ளதாகக் கூறி, ஆட்சியரிடம் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்.

கலெக்டர் அலுவலகத்தில் ஜான்சி
கலெக்டர் அலுவலகத்தில் ஜான்சி

உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத் தலைவர்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, குழு உறுப்பினர்களாக இருந்த ஆறு பேர் உட்பட, ஒன்பது அதிமுக நிர்வாகிகளைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

`மாநில சுயாட்சி' பேசுகிறீர்கள்; ஆனால், உள்ளாட்சி அதிகாரத்தில் கை வைக்கிறீர்கள்; இது சரியா ஸ்டாலின்?

தேனி மாவட்ட அதிமுக-வினர், `திமுக-வினரின் தூண்டுதலின் பேரில்தான் தலைவர்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினர்களையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்’ எனப் புகார் தெரிவித்துள்ளனர்.
அதிமுக தேனி மாவட்டச் செயலாளரின் சொந்த ஊரில், அதிமுக ஒன்றியத் தலைவர்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு