Published:Updated:

கலவரம்... களேபரம்... சீல்! - அதிமுக தலைமை அலுவலகம் யாரிடம் ஒப்படைக்கப்படும்?

அதிமுக தலைமை கழக அலுவலகம்

அதிமுக அலுவலகத்தில் நேற்றைய தினம் நடந்த கலவரம் குறித்து ராயப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை பார்வையிட்ட வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகத்துக்குச் சீல் வைத்தார்.

கலவரம்... களேபரம்... சீல்! - அதிமுக தலைமை அலுவலகம் யாரிடம் ஒப்படைக்கப்படும்?

அதிமுக அலுவலகத்தில் நேற்றைய தினம் நடந்த கலவரம் குறித்து ராயப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை பார்வையிட்ட வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகத்துக்குச் சீல் வைத்தார்.

Published:Updated:
அதிமுக தலைமை கழக அலுவலகம்

ஜூலை 11-ம் தேதி சென்னை வானகரத்தில் எடப்பாடிக்குப் பட்டாபிஷேகம் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும்போது, பன்னீரும் அவர் ஆதரவாளர்களும் ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தை கைபற்றினார்கள். இதைத் தடுக்கமுயன்ற எடப்பாடி தரப்புக்கும், பன்னீர் தரப்புக்கும் ஏற்பட்ட மோதலால், ராயப்பேட்டையே கலவர பூமியானது.

அதிமுக தலைமை கழக அலுவலகம்
அதிமுக தலைமை கழக அலுவலகம்

இருதரப்பினரும் ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டு, கற்களையும் எறிந்து தாக்குதலில் ஈடுபட்டனர். அவ்வை சண்முகம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பேருந்துகள், கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இது தொடர்பாக, போலீஸார் பாசறை பாலசந்திரன் என்பவர் உட்பட 13 பேரைக் கைதுசெய்திருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதே போல, ஓ.பி.எஸ் தரப்பில் 20 பேரும், இ.பி.எஸ் தரப்பில் 20 பேரும் என 47 பேர் காயமடைந்தனர். இது குறித்து ராயப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை பார்வையிட்ட வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகத்துக்குச் சீல் வைத்தார்.

கலவரம்
கலவரம்

மேலும், இந்தப் பிரச்னை தீவிர சட்டம் -ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், ``கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முடிவு செய்ய வரும் 25-ம் தேதி இரு தரப்பினரும் தாமாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராக வேண்டும்!" எனக் கூறி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இந்த நிலையில், ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் என இரு தரப்பினரும் அலுவலகம் தங்களுக்குத்தான் சொந்தம் என நீதிமன்றத்தை அணுகியிருக்கின்றனர். இதனால், சீல் வைத்த தலைமை அலுவலகத்தின் சாவி யாருக்குக் கிடைக்கும் என்று பலத்த எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டோம். ``அ.தி.மு.க அலுவலகத்தை மையப்படுத்தி, பல பிரச்னைகள் எழும் என்பதால்தான், அதைப் பூட்டி சீல் வைத்தோம். இது தொடர்பாக இருதரப்பும் நீதிமன்றத்தை அணுகியிருக்கின்றனர். தீர்ப்பு யாருக்குச் சாதகமாக இருக்கும் என்று தெரியவில்லை. யாருக்குச் சாதகமாக அமைகிறதோ, அவர்களிடம் அலுவலக சாவி ஒப்படைக்கப்படும். ஒருவேளை, நீதிமன்றம் அரசிடம் விளக்கம் கேட்டால், நிச்சயம் அலுவலகத்தைத் திறக்க அரசு சம்மதிக்காது. ஏனென்றால், ஒரு தரப்பு கையில் சாவி கிடைத்தால், மறு தரப்பு பிரச்னை செய்ய வாய்ப்பிருக்கிறது.

கலவர பூமியான அதிமுக அலுவலகம்
கலவர பூமியான அதிமுக அலுவலகம்

இது தேவையில்லாமல் சட்ட ஒழுங்கை பாதிக்கும். இதற்கிடையே, பொதுக்குழுவின் தீர்மானங்களின்படி, இ.பி.எஸ் பொதுச் செயலாளர் என்று தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டால் கட்சி, தலைமை அலுவலகம் என அனைத்தும் இ.பி.எஸ் கைக்குச் சென்றுவிடும். அதேநேரத்தில், தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளத் தாமதமானால், அந்தக் காலகட்டத்தில், முழுவதும் அலுவலகம் மூடியேதான் இருக்கும். அந்தப் பகுதியும் எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கும்" என்றனர் விரிவாக...

இது தொடர்பாக இ.பி.எஸ் தரப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசினோம். ``அ.தி.மு.க-வின் அதிகாரம் படைத்த பொதுக்குழுவில் அண்ணன் எடப்பாடியார் இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுவிட்டார். கட்சியின் அதிகாரம் முழுவதும் அவரிடம்தான் உள்ளது. அதே போல, ஓ.பி.எஸ் வகையறாக்கள் கட்சியைவிட்டு நீக்கப்பட்டுவிட்டதால், அவர்களுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அப்படி இருக்கும்போது, தலைமை அலுவலகத்துக்குள் அத்துமீறி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இதை குற்ற வழக்காகப் பதிவு செய்யவேண்டும். ஆனால், ஆளும் கட்சியின் 'பப்பட்'டாக ஓ.பி.எஸ் இருப்பதால், எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, தலைமை அலுவலகத்தைக் கேட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம். எங்களுக்குத்தான் அது கிடைக்கும். ஓ.பி.எஸ்-ஸுக்கு ஒன்றும் கிடைக்காது" என்றார்.