Published:Updated:

"கனவில்கூட நினைத்துப் பார்க்கவில்லை!" - ஏழை எம்.ஏல்.ஏ-வுக்கு வீடு கட்டிக்கொடுத்து நெகிழவைத்த அரசு

ராம்விருக்‌ஷ் சதா - பீகார் எம்.எல்.ஏ

``ஓர் ஏழைக்கு ஏதாவது கிடக்கிறதென்றால், அது தீபாவளியைப் போன்றது. அப்படித்தான், முதல்வர் நிதிஷ் குமார் என்னிடம் வீட்டின் சாவியைக் கொடுத்தார்." - பீகார் எம்.எல்.ஏ ராம்விருக்‌ஷ் சதா

"கனவில்கூட நினைத்துப் பார்க்கவில்லை!" - ஏழை எம்.ஏல்.ஏ-வுக்கு வீடு கட்டிக்கொடுத்து நெகிழவைத்த அரசு

``ஓர் ஏழைக்கு ஏதாவது கிடக்கிறதென்றால், அது தீபாவளியைப் போன்றது. அப்படித்தான், முதல்வர் நிதிஷ் குமார் என்னிடம் வீட்டின் சாவியைக் கொடுத்தார்." - பீகார் எம்.எல்.ஏ ராம்விருக்‌ஷ் சதா

Published:Updated:
ராம்விருக்‌ஷ் சதா - பீகார் எம்.எல்.ஏ

பீகாரில் மிகவும் ஏழ்மையான எம்.எல்.ஏ-வாக அறியப்படும் ராம்விருக்‌ஷ் சதாவுக்கு, பீகார் அரசு வீடு கட்டிக்கொடுத்ததையடுத்து, ராம்விருக்‌ஷ் சதா மகிழ்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்திய நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அறிவிக்கப்பட்டிருப்பதன்படி சதாவின் மொத்த அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.70,000 என்று கூறப்படுகிறது.

ராம்விருக்‌ஷ் சதா - பீகார் எம்.எல்.ஏ
ராம்விருக்‌ஷ் சதா - பீகார் எம்.எல்.ஏ

பீகாரில் ஆளும் கூட்டணியின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ராம்விருக்‌ஷ் சதா, 2020-ல் முதன்முறையாக அலாலி தொகுதியில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வானார். ஐந்து மகன்கள், ஒரு மகளைக்கொண்ட இவர், ககாரியாவின் ரௌன் (Raun) கிராமத்தில், இந்திரா ஆவாஸ் யோஜனாவின் கீழ் 2004-ல் கட்டப்பட்ட இரண்டு படுக்கையறைகள்கொண்ட வீட்டில் வசித்துவந்திருக்கிறார். இந்த நிலையில், பீகார் அரசின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் எட்டு எம்.எல்.ஏ-க்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அதில் ராம்விருக்‌ஷ் சதாவும் ஒருவர். அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்னர், பாட்னாவில் மூன்று மாடிகள்கொண்ட அரசு விடுதியை ராம்விருக்‌ஷ் சதா பெற்றிருக்கிறார். இந்த நிலையில், வீடு கிடைத்தபோது ராம்விருக்‌ஷ் சதா மகிழ்ச்சியில் கண்ணீர் சிந்திய நிகழ்வு சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலாகிவருகிறது.

பின்னர் இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு குறித்துப் பேசிய ராம்விருக்‌ஷ் சதா, ``நான் பீகாரில் மிக ஏழ்மையான எம்.எல்.ஏ இந்தியாவிலுள்ள பட்டியல் சாதியினரில் மிகவும் ஏழ்மையானவர்கள் என்று கூறப்படும் `முசாஹர்' சமூகத்திலிருந்து வந்தவன் நான். ஓர் ஏழைக்கு ஏதாவது கிடைக்கிறதென்றால், அது தீபாவளியைப் போன்றது. அப்படித்தான், முதல்வர் நிதிஷ் குமார் என்னிடம் வீட்டின் சாவியைக் கொடுத்தார். என் வாழ்வில் நான் கனவில் நினைத்துப் பார்த்திறாத வீடு அது" என்று கூறினார்.