Published:Updated:

உணவு வழங்கலில் ரூ.2,028 கோடி முறைகேடு... அ.தி.மு.க ஆட்சிக்கால ஊழலை மூடி மறைக்கிறதா தி.மு.க அரசு?!

உணவு வழங்கல் துறை
பிரீமியம் ஸ்டோரி
உணவு வழங்கல் துறை

ஒரே ஒப்பந்தத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான உணவுப்பொருள் சப்ளை செய்த அனுபவம் வேண்டும் என்று மாற்றினர்.

உணவு வழங்கலில் ரூ.2,028 கோடி முறைகேடு... அ.தி.மு.க ஆட்சிக்கால ஊழலை மூடி மறைக்கிறதா தி.மு.க அரசு?!

ஒரே ஒப்பந்தத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான உணவுப்பொருள் சப்ளை செய்த அனுபவம் வேண்டும் என்று மாற்றினர்.

Published:Updated:
உணவு வழங்கல் துறை
பிரீமியம் ஸ்டோரி
உணவு வழங்கல் துறை

“தமிழ்நாடு உணவு வழங்கல்துறையோடு தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் ரேஷன் கடைகளுக்கு சர்க்கரை, பாமாயில், பருப்பு வழங்குவதில் முறைகேடு செய்திருக்கிறது கிறிஸ்டி நிறுவனம். அரசுக்கு 2,028 கோடி ரூபாய் இழப்பு. எனவே, இந்தத் துறையின் முன்னாள் அமைச்சர் காமராஜ், முன்னாள் இயக்குநர் சுதா தேவி ஐ.ஏ.எஸ்., கிறிஸ்டி நிறுவனம், அதன் சார்பு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களான எம்.எம்.டி.சி., எஸ்.டி.சி., கேந்திரிய பந்தார் மற்றும் அதன் ஊழியர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” - இப்படி 2021, ஜூன் 4-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தது அறப்போர் இயக்கம். ஆனால், ஓராண்டைக் கடந்தும் இதுவரை அந்தப் புகார்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை தி.மு.க அரசு!

உணவு வழங்கலில் ரூ.2,028 கோடி முறைகேடு... அ.தி.மு.க ஆட்சிக்கால ஊழலை மூடி மறைக்கிறதா தி.மு.க அரசு?!

ஊழல் புகாரின் அடிப்படை

அந்தப் புகாரில் கூறப்பட்டிருக்கும் அடிப்படை யான விஷயம் இதுதான். “கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், ரேஷன் கடைகளுக்கு சர்க்கரை, பாமாயில், பருப்பு வழங்குவதற்கான டெண்டரில் கிறிஸ்டி அல்லது அதனுடன் தொடர்wபுடைய நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. ஒரு பணியை டெண்டர் விடுவதன் நோக்கமே, குறைந்த தொகையில் அந்த வேலையைச் செய்பவர்களைக் கண்டறிவதுதான். ஆனால், இந்த நிறுவனங்களோ பொருள்களின் மார்க்கெட் விலையைவிட மிக அதிக விலைக்கு டெண்டர் கேட்டும் அது வழங்கப்பட்டுள்ளது. டெண்டர் வெளியீட்டுக்கும், அது நிறைவு பெறுவதற்குமான கால அவகாசமும் மிகக் குறுகியதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த டெண்டர்களில் கிறிஸ்டி மற்றும் அதோடு தொடர்புடைய நிறுவனங்கள் பங்கேற்பதற்கு முன்பு, எல்லோரும் பங்கேற்கும் நிலை இருந்தது. கிறிஸ்டி நிறுவனம் நுழைந்ததும் டெண்டரில் பங்கேற்பவர்களுக்கான விதிமுறைகள், அந்த நிறுவனத்துக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டதோடு, ஆரோக்கியமான போட்டி இல்லாமல் ஆக்கப்பட்டது. அதுவரை சந்தை மதிப்பையொட்டியே பொருள்கள் வாங்கப்பட்டு வந்த நிலையில், கிறிஸ்டி வந்த பிறகு சந்தை மதிப்பைவிட மிகவும் அதிக விலை கொடுத்து சர்க்கரை, பாமாயில், பருப்பு வாங்கப்பட்டன எம்.எம்.டி.சி., எஸ்.டி.சி., கேந்திரிய பந்தர் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களும், கிறிஸ்டி சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் முகமாகவே இதில் பங்கெடுக்கத் தொடங்கின. டெண்டர் எடுத்த கிறிஸ்டி, டெண்டரில் பங்கேற்க முடியாமல் விலகிய நிறுவனங்களுக்கு உள் டெண்டர்விட்டு பொருள்களை சப்ளை செய்யவைத்தது. “வெறும் பில் போடும் வேலையை மட்டும் செய்த கிறிஸ்டி நிறுவனம் கிலோவுக்கு 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை லாபம் ஈட்டியிருக்கிறார்கள்” என்பதே இந்த ஊழல் புகாரின் சாரம்.

உணவு வழங்கலில் ரூ.2,028 கோடி முறைகேடு... அ.தி.மு.க ஆட்சிக்கால ஊழலை மூடி மறைக்கிறதா தி.மு.க அரசு?!

டெண்டரில் செய்யப்பட்ட மாற்றங்கள்

* கனடா மஞ்சள் பருப்பு, துவரம் பருப்பு டெண்டர்களில், ‘20,000 மெட்ரிக் டன் கனடா மஞ்சள் பருப்பு சப்ளை செய்த அனுபவம் வேண்டும்’ என்பது, ஏதாவது ஓர் உணவுப்பொருள் சப்ளை செய்த அனுபவம் இருந்தால் போதுமானது என்று மாற்றப்பட்டது.

* 3 கோடி ரூபாய் வர்த்தகம் செய்திருந்தால் போதும் என்றிருந்ததை மாற்றி, 40 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்திருக்க வேண்டும் என்றாக்கப்பட்டது.

* ஒரே ஒப்பந்தத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான உணவுப்பொருள் சப்ளை செய்த அனுபவம் வேண்டும் என்று மாற்றினர்.

* சர்க்கரையைப் பொறுத்தவரை, 40,000 மெட்ரிக் டன் சப்ளை செய்திருந்தால் போதும் என்றிருந்ததை மாற்றி, 50,000 மெட்ரிக் டன் சப்ளை செய்திருக்க வேண்டும் என்றார்கள்.


இது போன்ற பல மாற்றங்களால் கிறிஸ்டி மற்றும் அது சார்ந்த கிளை நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்க முடிகிற சூழல் உருவானது.

உணவு வழங்கலில் ரூ.2,028 கோடி முறைகேடு... அ.தி.மு.க ஆட்சிக்கால ஊழலை மூடி மறைக்கிறதா தி.மு.க அரசு?!

புகாருக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றம்

மே 5, 2021 முடிவடைந்த பருப்பு டெண்டரில் கிறிஸ்டி குழுவினர் மட்டும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கெடுத்து ஒரு கிலோ துவரம் பருப்புக்கு 143 ரூபாய் முதல் 147 ரூபாய் வரை ஒப்பந்தப்புள்ளி தந்தார்கள். அதேபோல் ஒரு கிலோ கனடா மஞ்சள் பருப்புக்கு 139 ரூபாய் முதல் 145 ரூபாய் வரை ஒப்பந்தப்புள்ளி கொடுத் தார்கள். ஆனால் இரண்டின் சந்தை மதிப்பும் அப்போது 100 ரூபாயைவிடக் குறைவாக இருந்தது. இந்தத் தகவல் வெளியானதால் தி.மு.க அரசு அந்த டெண்டர் ஒப்பந் தத்தை ரத்துசெய்துவிட்டு மீண்டும், விதிமுறைகளைத் தளர்த்தி புதிய டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது. உடனே இந்த ஒப்பந்தத்தில் 11 பேர் பங்கெடுத்ததுடன், அதில் பலர் 100 ரூபாய்க்குக் குறைவாக ஒப்பந்தப்புள்ளி தந்தனர்.

துவரம் பருப்புக்கு முதலில் 143 ரூபாய் முதல் 147 வரை ஒப்பந்தப்புள்ளி அளித்திருந்த கிறிஸ்டியின் கிளை நிறுவனமான ‘ராசி நியூட்ரி ஃபுட்ஸ்’ நிறுவனம், இரண்டாம் முறை பங்கெடுத்தபோது, 87 ரூபாய் என்று ஒப்பந்தப்புள்ளி கொடுத்தது. அதேபோல் கனடா மஞ்சள் பருப்புக்கும் முதலில் சொன்னதைவிட குறைத்து, கிலோ 78 ரூபாய் என்று ஒப்பந்தப்புள்ளி கொடுத்தது. இடைப்பட்ட காலத்தில் பருப்பின் சந்தை மதிப்பில் எந்தப் பெரிய மாற்றமும் இல்லை. இவையெல்லாம் ஆதாரங் களுடன் புகாராக அளிக்கப்பட்டுள்ளது.

இழப்பு 2,028 கோடி ரூபாய்

பாமாயில் டெண்டர்களில் கிறிஸ்டி குழும நிறுவனங்களிடம் வாங்கிய 56.56 கோடி பாக்கெட்டுகளில் அரசாங்கத்துக்கு ஏற்பட்டி ருக்கக்கூடிய இழப்பின் மதிப்பு 902 கோடி ரூபாய். பருப்பு டெண்டர்களில், கிறிஸ்டி சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட 6 லட்சம் டன் பருப்பு வகைகளில் ஏற்பட்ட இழப்பு 870 கோடி ரூபாய். 2.7 லட்சம் டன் சர்க்கரை கொள்முதலில் ஏற்பட்ட இழப்பு 256 கோடி ரூபாய். இந்த வகையில் கிறிஸ்டி நிறுவனத்தால் மட்டும் தமிழக அரசு இழந்த குறைந்தபட்ச பணம் 2,028 கோடி! இப்போதும் பல டெண்டர் விதிமுறைகள் நெறிப்படுத்தப் படாமலேயே இருக்கின்றன. கிறிஸ்டி நிறுவனமும் பங்கெடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் வரிப்பணம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், அ.தி.மு.க ஆட்சிக்கால ஊழலை மூடி மறைப்பதிலேயே ஆர்வம் காட்டுகிறதோ என்று கருதும் நிலையிலேயே தி.மு.க அரசின் நடவடிக்கைகள் இருக்கின்றன.

காமராஜ்
காமராஜ்

கிறிஸ்டி மீதான புகார் குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப் பாளர் ஜெயராமனிடம் கேட்டோம். “நாங்கள் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அரசிடம் புகார் கொடுத்து ஓராண்டு முடிந்துவிட்டது. டெண்டர் விதிகள் கிறிஸ்டி நிறுவனத்துக் காக மாற்றப்பட்டன, அதன் மூலமாக அந்த நிறுவனம் மட்டும் பங்கும்பெறும் நிலை உருவானது, கிறிஸ்டிக்கு அன்றைய சந்தை மதிப்பை விட மிக அதிகமான தொகைக்கு டெண்டர் கொடுத்தது, அதிகாரிகள் - அமைச்சரின் கூட்டுச்சதி என்று அனைத்து புகார்களுக்குமான ஆதாரங்களையும் கொடுத்துவிட்டோம். ஆதாரங்கள் இவ்வளவு தெளிவாக இருந்தும் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அரசு எஃப்.ஐ.ஆர்கூட போடாமல் விசாரணை என்ற பெயரில் ஒரு வருடமாக இழுத்தடிப்பு செய்துவருகின்றனர். இன்றைய உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணியும் இதுவரையில் கிறிஸ்டியை ‘பிளாக் லிஸ்ட்’டில் சேர்க்கவில்லை. ஊழல் அதிகாரிகள் மீது, அரசும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை” என்றார் நம்பிக்கையிழந்த குரலில்.

அறப்போர் ஜெயராமன்
அறப்போர் ஜெயராமன்

இதுகுறித்துப் பேச அமைச்சர் அர.சக்கரபாணியை பலமுறை தொடர்புகொண் டோம். ஆனால், இதுவரை நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. அவர் உரிய விளக்கம் தரும்பட்சத்தில் அதையும் வெளியிட ஜூ.வி தயாராகவே இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism