Published:Updated:

பொங்கல் தொகுப்பு: ``பயனடைந்தது தனியார் நிறுவனம்தான்; இம்முறை ரூ.3,000..." - ஓ.பன்னீர்செல்வம் யோசனை

ஒ.பன்னீர்செல்வம் ( ட்விட்டர் )

``2022-ம் ஆண்டு பொங்கல் தொகுப்பு திட்டத்தில் மக்கள் எந்தப் பலனையும் அடையவில்லை. பயனடைந்தது தனியார் நிறுவனம்தான்." - ஒ.பன்னீர்செல்வம்

பொங்கல் தொகுப்பு: ``பயனடைந்தது தனியார் நிறுவனம்தான்; இம்முறை ரூ.3,000..." - ஓ.பன்னீர்செல்வம் யோசனை

``2022-ம் ஆண்டு பொங்கல் தொகுப்பு திட்டத்தில் மக்கள் எந்தப் பலனையும் அடையவில்லை. பயனடைந்தது தனியார் நிறுவனம்தான்." - ஒ.பன்னீர்செல்வம்

Published:Updated:
ஒ.பன்னீர்செல்வம் ( ட்விட்டர் )

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பணமோ, பரிசுப்பொருளோ கொடுப்பது ஆளுங்கட்சிகளின் வழக்கமாக இருந்துவருகிறது. அதன்படி அ.தி.மு.க ஆட்சியில் 2,500 ரூபாய் ரொக்கமாகக் கொடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு தி.மு.க ஆட்சியில் கரும்பு, ஏலக்காய், சர்க்கரை, வெல்லம் உள்ளிட்ட 21 பொருள்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு கொடுக்கப்பட்டது. 1,200 கோடி ரூபாய் செலவில், 2.15 கோடி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்தப் பொருள்கள் வழங்கப்பட்டன. ஆனால், அதில் ஊழல் நடந்ததாக எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடியிருந்தன.

பொங்கல் பரிசு
பொங்கல் பரிசு

இந்த நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூ.3,000 வழங்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில், பொங்கல் பரிசுத் தொகுப்பும், ரொக்கமும் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்பட்டுவருகின்றன.

இந்தச் சூழலில் 2021-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற தி.மு.க., கடந்த 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும், சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் அந்தப் பொருள்கள் தரமற்ற பொருள்கள் என்றும், 15 பொருள்கள் மட்டுமே அளிக்கப்பட்டதாகவும், பெரும்பாலான பொருள்கள் பிற மாநிலத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்டவை என்றும் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தாலும், தவறிழைத்த நிறுவனங்களுக்கு மீண்டும் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டதே தவிர, நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மொத்தத்தில் 2022-ம் ஆண்டு பொங்கல் தொகுப்பு திட்டத்தில் மக்கள் எந்தப் பலனையும் அடையவில்லை. பயனடைந்தது தனியார் நிறுவனம்தான். ரூ1,200 கோடி ரூபாய் அரசுப் பணம் விரயமாக்கப்பட்டதுதான் மிச்சம் என்றும் தமிழ்நாடு மக்கள் தெரிவித்தனர்.

சென்ற ஆண்டு பொங்கல் தொகுப்பு திட்டத்தின்போது இந்தக் கடமையைச் சரிவர நிறைவேற்ற தி.மு.க அரசு தவறிவிட்டதாக மக்கள் கருதுகிறார்கள். எனவே, அரசு பணம் விரயமாகாமல், அதைத் தடுக்கும் வகையிலும், முழுமையான பலன் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையிலும், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும், பொருள்களுக்கு பதிலாக ரொக்கமாக ரூபாய் 3 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே நிலவுகிறது.

ஒ.பன்னீர் செல்வம்
ஒ.பன்னீர் செல்வம்
ட்விட்டர்

இதன் மூலம் முறைகேடுகளுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கும் நிலை உருவாகும். தமிழக மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் 2023-ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று அதிமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.