Published:Updated:

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 - திட்டத்தைத் தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி

``பெற்றோரின் அன்புக்கு ஈடுசெய்வதாக எதுவும் இருக்க முடியாது. இந்த இக்கட்டான தருணத்தில் குழந்தைகளாகிய உங்களுடன் இந்தியா இருக்கிறது." - பிரதமர் மோடி

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 - திட்டத்தைத் தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி

``பெற்றோரின் அன்புக்கு ஈடுசெய்வதாக எதுவும் இருக்க முடியாது. இந்த இக்கட்டான தருணத்தில் குழந்தைகளாகிய உங்களுடன் இந்தியா இருக்கிறது." - பிரதமர் மோடி

Published:Updated:

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து எட்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதற்கிடையே பிரதமர் நேற்று பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்தார். அதன் ஒரு பகுதியாக, கொரோனா தொற்று பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் குழந்தைகள் திட்டம் மூலம் மாதம் ரூ.4,000 வழங்கும் திட்டத்தைப் பிரதமர் மோடி காணொளிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் பிற அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் மோடி, ``கொரோனா பெருந்தொற்றால் தங்கள் பெற்றோர் மற்றும் அன்புக்குரியவர்களை இழந்த குழந்தைகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

பிஎம் கேர்ஸ்
பிஎம் கேர்ஸ்

தற்போதைய சூழலில் இந்தக் குழந்தைகள் நாள்தோறும் சந்திக்கும் பிரச்னைகளை வார்த்தைகளால் சொல்ல இயலாது. நான் பிரதமராக உங்களுடன் பேசவில்லை, உங்கள் குடும்ப உறுப்பினராகப் பேசுகிறேன். பிஎம் கேர்ஸ் திட்டம் என்பது தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைக் குறைப்பதற்கான ஒரு சிறிய முயற்சி. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உங்களுடன் உணர்வுபூர்வமாகத் தொடர்பில் உள்ளனர் என்பதற்கான பிரதிபலிப்பு.

உயர்கல்வி அல்லது தொழில் சார்ந்த படிப்புகளைப் படிக்க விரும்பும் குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் திட்டம் உதவி செய்யும். குழந்தைகளின் அன்றாடத் தேவைகள் உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும் பிஎம் கேர்ஸ் மூலம் மாதம்தோறும் ரூ. 4 ஆயிரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் 23 வயதை எட்டும்போது ரூ.10 லட்சம் கிடைக்கும். தவிர ஆயுஷ்மான் அட்டை மூலம் உடல்நலம் மற்றும் உளவியல் தொடர்பான ஆலோசனைகள் அளிக்கப்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஏற்கெனவே ஆயுஷ்மான் மூலம் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. பெற்றோரின் அன்புக்கு ஈடுசெய்வதாக எதுவும் இருக்க முடியாது. இந்த இக்கட்டான தருணத்தில் குழந்தைகளாகிய உங்களுடன் இந்தியா இருக்கிறது. பிஎம் கேர்ஸ் திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கான பொறுப்பை நிறைவேற்ற நாடு முயல்கிறது. வாழ்க்கை விரக்தியின் விளிம்பிலிருந்தாலும் தன்னம்பிக்கை இருந்தால் நிச்சயம் ஒளிக்கதிர் தெரியும். இதற்கு நம்முடைய நாடே மிகச்சிறந்த உதாரணம். பெரியவர்களும் ஆசிரியர்களும் சொல்வதைக் கேட்டு குழந்தைகள் நடந்துகொள்ள வேண்டும். இக்கட்டான தருணங்களில் நல்ல நூல்கள் நமக்கு நம்பகமான நண்பனாக இருக்கும்" எனப் பேசினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism