Published:Updated:

``அதிமுக-வில் நடக்கும் சண்டைக்கும் திமுக-வுக்கும் தொடர்பில்லை” - ஆர்.எஸ் பாரதி

ஆர்.எஸ்.பாரதி

`அதிமுக-வில் நடக்கும் சண்டைக்கும், திமுக-வுக்கும் தொடர்பில்லை' என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

``அதிமுக-வில் நடக்கும் சண்டைக்கும் திமுக-வுக்கும் தொடர்பில்லை” - ஆர்.எஸ் பாரதி

`அதிமுக-வில் நடக்கும் சண்டைக்கும், திமுக-வுக்கும் தொடர்பில்லை' என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
ஆர்.எஸ்.பாரதி

அதிமுக-வின் பொதுக்குழுவால் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் நேற்று அதிமுக தலைமையகத்தில் பெரும் கலவரம் வெடித்தது. இந்தச் சூழ்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இ.பி.எஸ்., ``அதிமுக தொண்டர்கள் சராமாரியாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு ஸ்டாலின் அரசும், அவருடன் உறவு வைத்திருந்த அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-ஸும் இணைந்து இந்தக் கொடூரமான சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்'' என்றார்.

ஓபிஎஸ் - இபிஎஸ்
ஓபிஎஸ் - இபிஎஸ்

இது தொடர்பாக சென்னை, அண்ணா அறிவாலயத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ``அதிமுக-வுக்குள் நடக்கும் சண்டைக்கும், திமுக-வுக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. தேவையில்லாமல் திமுக-வை வம்புக்கு இழுக்கக் கூடாது. திமுக-வுக்கும், அவர்களுடைய பொதுக்குழுவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது... இபிஎஸ் பல கோடி ரூபாய் செலவழித்து இந்தப் பொதுக்குழுவைக் கூட்டியிருக்கிறார். இபிஎஸ் எப்படி பொதுக்குழுவை கூட்டினார் என்பது எல்லாருக்கும் தெரியும். இப்போதைய அதிமுக பிரச்னையை தற்காலிகமானதாகவே கருதுகிறேன். அவர்கள் இந்த நிகழ்வையையும்கூட மறக்கக்கூடும். எதற்கெடுத்தாலும் திமுக-வை தாக்கிப் பேசுவது எடப்பாடி பழனிசாமிக்கு வாடிக்கையாகிவிட்டது'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!