Published:Updated:

ஐநா-வின் உலக மக்கள்தொகை அறிக்கை; சீனாவை பின்னுக்குத் தள்ளும் இந்தியா... ஆர்.எஸ்.எஸ் தலைவர் கருத்து!

மோகன் பகவத்

``தகுதியானது அல்லது திறமையானதுதான் உயிர்வாழும்(Survival of the fittest) என்பது விலங்குகளுக்குத் தான் பொருந்தும் உண்மை, மனிதர்களுக்கு அல்ல" - மோகன் பகவத்

ஐநா-வின் உலக மக்கள்தொகை அறிக்கை; சீனாவை பின்னுக்குத் தள்ளும் இந்தியா... ஆர்.எஸ்.எஸ் தலைவர் கருத்து!

``தகுதியானது அல்லது திறமையானதுதான் உயிர்வாழும்(Survival of the fittest) என்பது விலங்குகளுக்குத் தான் பொருந்தும் உண்மை, மனிதர்களுக்கு அல்ல" - மோகன் பகவத்

Published:Updated:
மோகன் பகவத்

அண்மையில், பெருகிவரும் உலக மக்கள்தொகை குறித்து ஐ.நா, அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், ``உலக மக்கள்தொகையில் தற்போது முதலிடத்தில் இருக்கும் சீனாவை, இந்தியா 2023-ம் ஆண்டுக்குள் பின்னுக்குத்தள்ளி அதிக மக்கள்தொகைக் கொண்ட நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும்" என்று கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கை தொடர்பாக, இந்திய அரசியல் தலைவர்கள் பலரும், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது குறித்து கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மக்கள்தொகை
மக்கள்தொகை

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி, ``ஒருகுறிப்பிட்ட பிரிவினரின் மக்கள்தொகை பெருக்கம்தான் வேகமாக உள்ளது" எனக் கருத்து தெரிவித்திருந்தார். அதே போல, முன்னாள் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, ``மக்கள்தொகை பெருக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தின் பிரச்னையல்ல. இதைச் சாதி, மதத்துடன் தொடர்புபடுத்துவது சரியானதல்ல" எனக் கூறியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மோகன் பகவத்
மோகன் பகவத்

இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ``விலங்குகளும் இங்கு உயிர் வாழ்கின்றன. மனிதனுக்கு மூளை மட்டும் இல்லையென்றால், உலகிலேயே பலவீனமான விலங்கு மனிதன்தான். ஆனால் உணவளிப்பதும், இனப்பெருக்கம்செய்வதும் விலங்குகளும் செய்யக்கூடிய ஒன்றுதான். உண்மையில், தகுதியானது அல்லது திறமையானதுதான் உயிர்வாழும். (Survival of the fittest) என்பது விலங்குகளுக்குத்தான் பொருந்தும் உண்மை, மனிதர்களுக்கு அல்ல. இதில், திறமையான மனிதர்கள், மற்றவர்கள் உயிர்வாழவும் அவர்களுக்கு உதவவேண்டும். மனிதன் திறமைகளைப் பயன்படுத்தி அதை சிறந்த உலகமாக மாற்ற வேண்டும்" எனக் கூறியுள்ளார்.