Published:Updated:

``விவசாய உபகரணங்கள், உரங்கள்மீதான ஜிஎஸ்டி-யை கண்டித்து பேரணி!"- ஆர்எஸ்எஸ்-ன் கிசான் சங்கம் அறிவிப்பு

கே சாய் ரெட்டி பாரதிய கிசான் சங்க செயலாளர். ( ட்விட்டர் )

```விவசாய இடுபொருள்களின் விலை உயர்வால் நாட்டில் விவசாயிகளின் நிலை மேலும் மோசமடைந்திருக்கிறது." - ஆர்எஸ்எஸ்-ன் கிசான் சங்கம்

``விவசாய உபகரணங்கள், உரங்கள்மீதான ஜிஎஸ்டி-யை கண்டித்து பேரணி!"- ஆர்எஸ்எஸ்-ன் கிசான் சங்கம் அறிவிப்பு

```விவசாய இடுபொருள்களின் விலை உயர்வால் நாட்டில் விவசாயிகளின் நிலை மேலும் மோசமடைந்திருக்கிறது." - ஆர்எஸ்எஸ்-ன் கிசான் சங்கம்

Published:Updated:
கே சாய் ரெட்டி பாரதிய கிசான் சங்க செயலாளர். ( ட்விட்டர் )

பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் நிதி உதவியை அதிகரிக்கவும், விவசாய உபகரணங்கள் மற்றும் உரங்கள்மீதான ஜி.எஸ்.டி-யை நீக்கவும் வலியுறுத்தி டெல்லியில் ஆர்.எஸ்.எஸ்- தொடர்புடைய பாரதிய கிசான் சங்கம் (பி.கே.எஸ்) விவசாயிகள் எதிர்ப்பு பேரணியை அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக அந்த சங்கத்தின் அகில இந்திய செயலாளர் கே.சாய் ரெட்டி, ``அக்டோபர் 8, 9 தேதிகளில் நடந்த தேசிய செயற்குழு கூட்டத்தில், `விவசாயிகளின் நிதி ஸ்திரத்தன்மை மிக முக்கியமானது. விவசாய இடுபொருள்களின் விலை உயர்வால் நாட்டில் விவசாயிகளின் நிலை மேலும் மோசமடைந்திருக்கிறது. எனவே அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்' என்பதை உறுதிப்படுத்தினோம். அதைத் தொடர்ந்து, மத்திய அரசிடம் விவசாய பொருள்கள்மீதான ஜி.எஸ்.டி-யை நீக்க கோரிக்கை விடுக்க வேண்டும் எனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பாரதிய கிசான் சங்க கூட்டம்
பாரதிய கிசான் சங்க கூட்டம்
ட்விட்டர்

அதற்காக டிசம்பர் 19-ம் தேதி டெல்லியில் மாபெரும் கண்டனப் பேரணியான 'கிசான் கர்ஜனா பேரணி' நடத்த முடிவு செய்திருக்கிறோம். ரூ.6,000 ஆக இருக்கும் பி.எம்.கிசான் சம்மன் நிதியை பணவீக்கத்தை மனதில் வைத்து மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையையும் வலியுறுத்துவோம். மேலும், இந்தப் பேரணிக்கான காரணம், எங்கள் பிரச்னைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும்" எனத் தெரிவித்திருக்கிறார்.